உலகின் பாலூட்டி சிற்றினங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகின் பாலூட்டி சிற்றினங்கள்: வகைப்பாட்டியலும் புவியியல் குறிப்புகளும் (Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference) என்பது பாலூட்டிகளில் அறியப்பட்ட பாலூட்டிகளின் விளக்கங்கள் மற்றும் நூலியல் தரவுகளை வழங்கும் நிலையான மேற்கோள் பணியாகும். இது இப்போது அதன் மூன்றாவது பதிப்பினைக் கொண்டுள்ளது. இப்பதிப்பு 2005ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட்டது. இதனை டான் இ. வில்சன் மற்றும் டீஆன் எம். ரீடர் தொகுத்தளித்தனர்.[1]

இதனுடைய இணையப் பதிப்பு பக்நெல் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது. இதில் சிற்றினங்களின் பெயர்களைத் தனிப்பயன் அகராதியாகப் பதிவிறக்கம் செய்யலாம். ஒரு பகுதி இணையப் பதிப்பு கூகுள் புத்தகத்தில் (Google Books) கிடைக்கிறது (கீழே உள்ள "வெளி இணைப்புகள்" பார்க்கவும்).

சரிபார்ப்பு பட்டியல் குழு உபாசி தொகுத்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற்குப் பொறுப்பாகும். 2015ஆம் ஆண்டிற்கான இதன் வருடாந்திர அறிக்கையில், உபாசி 4வது பதிப்பிற்காக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஊடகத்துடன் ஒப்பந்தத்தில் இருப்பதாகக் குழு குறிப்பிட்டது. இதனைத் தொகுக்கும் பணியினை டீஅன் எம் ரீடர் மற்றும் கிறிஸ்டோபர் எம். கெல்கன் மேற்கொள்வர். இத்தரவுத்தளமானது பதிப்பாசிரியர்களுக்காகத் திருத்தக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளது. இது உடனடி இணையதள புதுப்பிப்புகளுக்கு வழிவகுக்கும். இதனை 2017-ல் வெளியிடத் திட்டமிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wilson, D. E., and Reeder, D. M. (eds), தொகுப்பாசிரியர் (2005). Mammal Species of the World (3rd edition ). Johns Hopkins University Press. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3. 
  2. Checklist Committee 2015

வெளி இணைப்புகள்[தொகு]