உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய பன்றி மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய பன்றி மான்
தாய்லாந்தின் ஃபு கியோ வனவிலங்கு சரணாலயத்தில் இந்திய பன்றி மான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஆ. போர்னிசு
இருசொற் பெயரீடு
ஆக்சிசு போர்னிசு
சிம்மெர்மான், 1780
இந்திய பன்றி மான் வாழும் பகுதி-பச்சை நிறத்தில்
வேறு பெயர்கள்

கைலெபூசு போர்சினசு (சிம்மெர்மான், 1780)

இந்தியப் பன்றி மான் (Indian hog deer) என்பது பாக்கித்தான், வடஇந்தியா, நேபாளம், வங்காளதேசம் முதல் தென்கிழக்காசியாவின் பிரதான நிலப்பரப்பில் உள்ள சிந்து-கங்கைச் சமவெளி பகுதி வரை வாழும் ஒரு சிறிய மான் சிற்றினம் ஆகும். இவை மேற்கு தாய்லாந்திலும் காணப்படுகின்றன. இவை சீனாவிலிருந்து (தென்மேற்கு யுன்னான் மாகாணத்தில்), மியான்மர், லாவோஸ் வியட்நாமில் ஆகிய பகுதிகளில் ஒரு காலத்தில் வாழ்ந்து அழிவுக்கு ஆளாகி இருக்கலாம் என்று கருதப்படுகின்றன. இவை ஆத்திரேலியா,[2][3] அமெரிக்கா (டெக்சாசு, அவாய், புளோரிடா) இலங்கை ஆகிய இடங்களுக்கு மனிதரால் கொண்டு செல்லப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் இதன் பூர்வீக நிலை சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது.[1]

பொதுவாக இவை மற்ற மான்கள் போல துள்ளி ஓடாமல் தலையைக் குனிந்தவாறு ஓடுவதாலும், இவற்றின் நடையும் உடலும் பன்றியைப் போலிருப்பதால் பன்றி மான்கள் என பெயர் பெற்றன.

விளக்கம்

[தொகு]
அசாமில் ஒரு இளம் ஆண் பன்றி மான்

ஒரு முதிர்ந்த ஆண் பன்றி மான் நிற்கும்போது தோள்பட்டைவரை சுமார் 70 செண்டிமீட்டர் (28 அங்குலம்) உயரமானதாகவும், தோராயமாக 50 கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கும். இவற்றில் பெண் மான் மிகவும் சிறியதாக, சுமார் 61 செண்டிமீடர் (24 அங்குலம்) உயரமானதாகவும், சுமார் 30 கிலோகிராம் எடை கொண்டதாகவும் இருக்கும். பன்றி மான்கள் திடகாத்திரமான உருவம் கொண்டவை. இவற்றின் உடலுக்கு பொருத்தமற்ற குட்டையான கால்கள் கொண்டதால் இவை குட்டையானவையாக தோன்றும். இவற்றின் காதுகள் வட்டமானவை; வயதான மான்களின் முகம் மற்றும் கழுத்து வெளிர் நிறமாக மாறும். இந்தியப் பன்றி மானின் உரோமங்கள் மிகவும் தடிமனாக இருக்கும். பொதுவாக குளிர்காலத்தில் இவற்றின் உடல் ஒரே மாதிரியான அடர்-பழுப்பு நிறத்தில் இருக்கும். அடிவயிறு மற்றும் கால்களின் கீழ் பகுதிகளில் வெளுத்த நிறத்தில் இருக்கும். வசந்த காலத்தின் பிற்பகுதியில், இவற்றறின் உடல் நிறம் சிவப்பு-பழுப்பு நிறமுள்ளதாக மாறத் தொடங்குகிறது. இருப்பினும் இது சில மான்களுக்கிடையை வேறுபடலாம். பல பன்றி மான்கள் தலையில் இருந்து கழுத்தின் பின்புறம் முதுகுத்தண்டு வரை நீண்டுகொண்டிருக்கும் கருமையான முதுகுப் பட்டையைக் கொண்டுள்ளன. கோடையில், தோள்பட்டை முதல் பிட்டம் வரை முதுகுப் பட்டையின் இருபுறமும் ஒரே மாதிரியான வரிசையாக வெளிர் நிற புள்ளிகள் இருக்கும். இவற்றின் வால் மிகவும் குறுகியதாகவும், பழுப்பு நிறமாகவும் இருக்கும். வாலின் அடிப்பகுதி வெண்மையானதாக இருக்கும். இவற்றின் காதின் உட்புறத்தில் வெண்மையான உரோமங்கள் இருக்கும்.

இந்தியப் பன்றி மான்களின் கண்களுக்குக் கீழே முகத்தில் பிரீஆர்பிட்டல் சுரப்பிகளும், பின்புற கால்களின் பக்கவாட்டில் மெட்டாடார்சல் சுரப்பிகளைக் கொண்டுள்ளன. மிதி சுரப்பிகள் பின்னங்கால்களின் பிளவுகள் அல்லது கால்விரல்களுக்கு இடையில் அமைந்துள்ளன.

பன்றி மானின் கொம்புகள் சிறியவை. நெற்றிக் கிளைகள் உண்டு. நடுத் தண்டிலும் கிளைகள் தோன்றும்.[4]

நடத்தையும், சூழலியலும்

[தொகு]
இந்தியாவின் காசிரங்காவில் பாலூட்டும் பெண் பன்றி மான்

சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் போது மட்டுமே இந்திய பன்றி மான்கள் கூட்டமாக இருக்கும். அதாவது நீர் அருந்துதல் போன்றவற்றிற்கு கூட்டமாக வரும். பின்னர் மேய்ச்சலுக்கு தனியே பிரிந்துவிடும். பயப்படும்போது, பன்றி மான்கள் சீழ்க்கை குரல் அல்லது எச்சரிக்கை ஒலியை எழுப்புகிறன்றன. அதிகாலையும் மாலை நேரமும் இவற்றின் மேய்சல் நேரமாகும். வெப்பமான நேரங்களில் புற்களிடையே ஓய்வெடுக்கும். இவற்றிற்கு மோப்ப சக்தி, பார்க்கும் திறன், கேட்கும் உணர்வு முதலியவை துல்லியமாக உள்ளன. பகலில் இவை வேட்டையாடப்பட வாய்ப்பு உள்ளதால் இருட்டிய பிறகே தம் இருப்பிடத்தில் இருந்து வெளியே வருகின்றன. ஆற்றோரங்களில் உள்ள புல் வளர்ந்துள்ள காடுகளிலும், சிலசமயங்களில் சமவெளிகளிலும் காணப்படும். மிக நீண்டு வளர்ந்துள்ள புல்வெளிகளை இவை விரும்புவதில்லை.

புலி, சிறுத்தை, படைச்சிறுத்தை ஆகியவை இந்திய பன்றி மான்களை வேட்டையாடுபவ்வைகளாக அறியப்படுகின்றன.[5] மேலும் இவற்றை வேட்டாயாடுபவையாக அறியப்பட்ட பிற வேட்டையாடிகளில் பர்மிய மலைப்பாம்பு மற்றும் செந்நாய் ஆகியவை உள்ளன.[6]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Timmins, R.; Duckworth , J.W.; Samba Kumar, N.; Anwarul Islam, M.; Sagar Baral, H.; Long, B.; Maxwell, A. (2015). "Axis porcinus". IUCN Red List of Threatened Species 2015: e.T41784A22157664. doi:10.2305/IUCN.UK.2015-4.RLTS.T41784A22157664.en. https://www.iucnredlist.org/species/41784/22157664. பார்த்த நாள்: 21 January 2022. 
  2. Mayze, R.J.; Moore, G.I. (1990). The Hog Deer. Warragul, Victoria: Australian Deer Research Foundation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780959343861.
  3. Bentley, A. (1998). An Introduction to the Deer of Australia: With Special Reference to Victoria. Warragul, Victoria: Australian Deer Research Foundation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780958573214.
  4. Michelin, Andrea. "Axis porcinus". Animal Diversity Web. பார்க்கப்பட்ட நாள் 12 July 2022.
  5. Grassman Jr., L. I.; Tewes, M. E.; Silvy, N. J.; Kreetiyutanont, K. (2005). "Ecology of three sympatric felids in a mixed evergreen forest in North-central Thailand". Journal of Mammalogy 86 (1): 29–38. doi:10.1644/1545-1542(2005)086<0029:EOTSFI>2.0.CO;2. 
  6. Hill, E.; Linacre, A.; Toop, S.; Murphy, N.; Strugnell, J. (2019). "Widespread hybridization in the introduced hog deer population of Victoria, Australia, and its implications for conservation". Ecology and Evolution 9 (18): 10828–10842. doi:10.1002/ece3.5603. பப்மெட்:31624584. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_பன்றி_மான்&oldid=3630454" இலிருந்து மீள்விக்கப்பட்டது