2024 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்
| |||||||||||||||||
538 உறுப்பினர்கள் கொண்ட தேர்வாளர் குழு வெற்றிபெற 270 வாக்குகள் தேவை | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் மாகாணங்களின் வரைபடம் | |||||||||||||||||
|
2024 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் (2024 United States presidential election), ஐக்கிய அமெரிக்காவின் 60வது அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகும். இத்தேர்தல் 5 நவம்பர் 2024 அன்றுசெவ்வாய்க் கிழமை நடைபெற உள்ளது.[1]இத்தேர்தலில் அமெரிக்க முழுவதிலிருந்தும் மக்கள் பிரதிநிதிகளான 538 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.[2]
தகுதிகள்
[தொகு]ஐக்கிய அமெரிக்காவின் குடியுரிமை பெற்று 14 ஆண்டுகள் நிரம்பியவரும் மற்றும் 35 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினர் அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றவர் ஆவார். இரண்டு முறை அதிபராக பதவி வகித்தவர்கள் இத்தேர்தலில் போட்டியிட முடியாது.
முக்கிய போட்டியாளர்கள்
[தொகு]ஜனநாயக கட்சியின் போட்டியாளர்கள்
[தொகு]- இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தல் வேட்பாளர்களாக நடப்பு அதிபர் ஜோ பைடன் இரண்டாம் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் டீன் பிலிப்ஸ் மற்றும் மரியான் வில்லியம்சன் உள்ளனர்.
- பிறகு தன் உடல்நிலை காரணமாக ஜோ பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை.
- பிறகு ஜோ பைடன் கமலா ஆரிசுவை ஆதரிக்க அவர் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குடியரசுக் கட்சியின் போட்டியாளர்கள்
[தொகு]- குடியரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப், விவேக் ராமசாமி மற்றும் நிக்கி ஹேலே ஆகியோர் அதிபர் வேட்பாளர் போட்டியில் உள்ளனர்.
- பிறகு உட்கட்சி தேர்தலில் டோனால்ட் டிரம்ப் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பின்னணி
[தொகு]தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவிக் காலம் சனவரி 2025ல் முடிய உள்ளதல், இத்தேர்தல் 5 நவம்பர் 2024 அன்று நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவர் 20 சனவரி 2025 அன்று அமெரிக்க அதிபராக பதவியேற்பார்.
கருத்துக் கணிப்புகள்
[தொகு]சமீபத்திய கருத்துக் கணிப்பில், 2024 இல் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனை விட டோனால்ட் டிரம்ப் தெளிவான முன்னிலை பெற்றுள்ளார். ரேஸ் டு தி டபிள்யூஹெச் கருத்துக் கணிப்பின்படி, ஜோபைடனின் 43.8% வாக்குகளும்; டோனால்ட் டிரம்ப் 45.1% வாக்குகளுடன் முன்னிலை பெற்று அதிகாரத்தைத் தக்கவைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
The Economist செய்தி நிறுவனம் வித்தியாசமாக வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெல்வதற்கு 63% வாய்ப்பு உள்ளது என்றும் அதே சமயம் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் வெல்வதற்கு 10% வாய்ப்பு மட்டுமே உள்ளது என கணித்துள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Election Planning Calendar" (PDF). essex-virginia.org. Essex County, Virginia. Archived from the original (PDF) on 7 February 2016. பார்க்கப்பட்ட நாள் 6 February 2016.
- ↑ Distribution of Electoral Votes
- ↑ 2024 அமெரிக்க அதிபர் தேர்தல்