கமலா ஆரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கமலா ஆரிசு
Kamala Harris
Kamala Harris Official Attorney General Photo.jpg
கலிபோர்னியா மாநிலத்துக்கான மேலவை உறுப்பினர்
பதவியேற்பு
சனவரி 3, 2017
முன்னவர் பார்பரா பாக்சர்
கலிபோர்னியாவின் 32வது அரசுத் தலைமை வழக்குரைஞர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சனவரி 3, 2011
ஆளுநர் செரி பிரவுன்
முன்னவர் செரி பிரவுன்
சான் பிரான்சிசுக்கோ மாவட்ட வழக்குரைஞர்
பதவியில்
சனவரி 8, 2004 – சனவரி 3, 2011
முன்னவர் தெரன்சு ஆலினன்
பின்வந்தவர் சியார்ச்சு காசுக்கோன்
தனிநபர் தகவல்
பிறப்பு கமலா தேவி ஹாரிஸ்
அக்டோபர் 20, 1964 (1964-10-20) (அகவை 55)
ஓக்லண்ட், கலிபோர்னியா, அமெரிக்கா
அரசியல் கட்சி மக்களாட்சிக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்)
டக்ளசு எமோஃப் (தி. 2014)
படித்த கல்வி நிறுவனங்கள் அவார்டு பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஏஸ்டிங்சு
சமயம் திருமுழுக்கு சபை
இணையம் அரச இணையதளம்

கமலா தேவி ஹாரிஸ் (Kamala Harris[1] பிறப்பு: அக்டோபர் 20, 1964) அமெரிக்க எழுத்தாளரும், வழக்குரைஞரும், அரசியல்வாதியும், மக்களாட்சிக் கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் கலிபோர்னியா மாநிலத்தின் 32வது தற்போதைய அரசுத் தலைமை வழக்குரைஞரும் ஆவார்.[2][3] கலிபோர்னியா மாநிலத்துக்கான மேலவை உறுப்பினராகவும் தெரிவு செய்யப்படுள்ளார். இவர் 20 ஜனவரி 2019ஆம் நாளன்று 2020 அமெரிக்கத் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளர் போட்டிக்கான பரப்புரையைத் தொடங்கினார்.

கமலா தான் அமெரிக்காவில் பொது வழக்கறிஞராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆபிரிக்க அமெரிக்கர்[4] ஆசிய அமெரிக்கர் மற்றும் இந்திய அமெரிக்கர் ஆவார்.[5][6]

இளமைக்காலம்[தொகு]

கமலாவின் தாயார் மருத்துவர் சியாமளா கோபாலன், மார்பக புற்றுநோய் வல்லுநர் ஆவார், அவர் சென்னையிலிருந்து 1960-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்துவிட்டார்.[7] கமலாவினுடைய தந்தை ஒரு ஆபிரிக்க அமெரிக்கர், இவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பேராசிரியாக பணி புரிந்தார்.[8] இவருடைய சகோதரி பெயர் மாயா ஆரிசு.[9]

மேலவை உறுப்பினர்[தொகு]

கமலா ஆரிசு, ஜனநாயகக் கட்சியின் சார்பாக, கலிபோர்னியாவிலிருந்து, நாட்டின் மேலவை உறுப்பினராக நவம்பர் 2016இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10] [11] இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை கமலா ஆரிசு பெற்றுள்ளார்.[12]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

 1. Sam Whiting (மே 14, 2009). "Kamala Harris grew up idolizing lawyers". SFGate. http://www.sfgate.com/entertainment/article/Kamala-Harris-grew-up-idolizing-lawyers-3232851.php. பார்த்த நாள்: சனவரி 11, 2014. 
 2. "Cooley concedes AG race to Harris". Contra Costa Times. November 24, 2010. http://www.contracostatimes.com/california/ci_16702241. பார்த்த நாள்: November 24, 2010. 
 3. Leonard, Jack (November 24, 2010). "Kamala Harris wins attorney general's race as Steve Cooley concedes". Los Angeles Times (Los Angeles, California). http://latimesblogs.latimes.com/lanow/2010/11/steve-cooley-kamala-harris-attorney-general.html. பார்த்த நாள்: November 24, 2010. 
 4. Rizo, Chris (April 16, 2010). "Villaraigosa eschews local candidates, backs Harris for Calif. attorney general". Legal Newsline. http://www.legalnewsline.com/news/226664-villaraigosa-eschews-local-candidates-backs-harris-for-calif.-attorney-general. பார்த்த நாள்: August 20, 2010. 
 5. A 'female Obama' seeks California attorney general post; Michael Martinez; CNN October 22, 2010; http://www.cnn.com/2010/POLITICS/10/22/california.kamala.harris.profile/index.html
 6. Michael Cabanatuan Brown, Boxer, Newsom win; Prop. 19 goes down San Francisco Chronicle November 3, 2010.
 7. ": The New Face of Politics…An Interview with Kamala Harris". DesiClub. பார்த்த நாள் 2011-02-02.
 8. "PM Golding congratulates Kamala Harris-daughter of Jamaican - on appointment as California's First Woman Attorney General". Jamaican Information Service. December 2, 2010. http://www.jis.gov.jm/news/opm-news/26176-officePM-pm-golding-congratulates-kamala-harris-daughter-of-jamaican-on-appoint. பார்த்த நாள்: February 2, 2011. 
 9. "Brilliant Careers". Super Lawyers. August 1, 2010. http://www.superlawyers.com/california-northern/article/Brilliant-Careers/e8902c40-542b-40e4-89a5-58a2e181b36f.html. பார்த்த நாள்: February 2, 2011. 
 10. வரலாற்று சாதனை
 11. Kamala Harris, a ‘Top Cop’ in the Era of Black Lives Matter
 12. அமெரிக்க தேர்தல்: இந்திய வம்சாவளி கமலா சரித்திர வெற்றி

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kamala Harris
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலா_ஆரிசு&oldid=2707371" இருந்து மீள்விக்கப்பட்டது