ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2020

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2020

← 2016 நவம்பர் 3, 2020 2024 →

538 உறுப்பினர்கள் கொண்ட தேர்வாளர் குழு
வெற்றிபெற 270 வாக்குகள் தேவை
  Donald Trump official portrait (cropped).jpg Joe Biden 2013.jpg
வேட்பாளர் டோனால்ட் டிரம்ப் ஜோ பைடன்
கட்சி குடியரசுக் கட்சி சனநாயகக் கட்சி
சொந்த மாநிலம் புளோரிடா[a] டெலவெயர்
துணை வேட்பாளர் மைக் பென்சு கமலா ஆரிசு

கலிபோர்னியாஓரிகன்வாசிங்டன்ஐடஹோநெவாடாயூட்டாஅரிசோனாமொன்ட்டானாவயோமிங்கொலராடோநியூ மெக்சிகோவடக்கு டகோட்டாதெற்கு டகோட்டாநெப்ராஸ்காகேன்சஸ்ஓக்லகோமாடெக்சஸ்மினசோட்டாஅயோவாமிசூரிஆர்கன்சாலூசியானாவிஸ்கொன்சின்இலினொய்மிச்சிகன்2020 United States presidential election in Indianaஒகையோகென்டக்கிடென்னிசிமிசிசிப்பிஅலபாமாசியார்சியாபுளோரிடாதென் கரொலைனாவட கரொலைனாவர்ஜீனியாமேற்கு வர்ஜீனியாவாசிங்டன், டி. சி.மேரிலாந்துடெலவெயர்பென்சில்வேனியாநியூ செர்சிநியூயார்க்குகனெடிகட்றோட் தீவுவெர்மான்ட்நியூ ஹாம்சயர்மேய்ன்மாசச்சூசெட்ஸ்ஹவாய்அலாஸ்காவாசிங்டன், டி. சி.மேரிலாந்துடெலவெயர்நியூ செர்சிகனெடிகட்றோட் தீவுமாசச்சூசெட்ஸ்வெர்மான்ட்நியூ ஹாம்சயர்ElectoralCollege2020.svg
இப் படத்தைப் பற்றி
2010 கணக்கெடுப்பின் அடிப்படையில், 2020 தேர்தல் வரைபடம்

முந்தைய அரசுத்தலைவர்

டோனால்ட் டிரம்ப்
குடியரசுக் கட்சி

அரசுத்தலைவர் -தெரிவு

TBD

2020 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் (2020 United States presidential election) 2020 நவம்பர் 3 நடைபெறுகிறது. இது 59-வது நான்காண்டுகளுக்கு ஒருமுறையான அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தல் ஆகும். இத்தேர்தலில் அமெரிக்க வாக்காளர்கள் அரசுத்தலைவர் தேர்வாளர் குழுக்களுக்கு வாக்களிப்பர். மக்களால் தேர்தெடுக்கப்படும் தேர்வாளர் குழுக்கள் 2020 திசம்பர் 14 இல் புதிய குடியரசுத் தலைவரையும், துணைத் தலைவரையும் தேர்ந்தெடுப்பர் அல்லது தற்போது பதவியில் இருக்கும் அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப், துணைத்தலைவர் மைக் பென்சு ஆகியோரை மீண்டும் தேர்ந்தெடுப்பர்.[2]

தற்போதைய துணைத் தலைவர் பென்சுடன் எந்தவொரு தீவிரமான எதிர்ப்பும் இல்லாமல் குடியரசுக் கட்சியின் வேட்புமனுவை டோனால்டு திரம்பு பெற்றார். முன்னாள் துணைத் தலைவர் ஜோ பைடன் தனது நெருங்கிய போட்டியாளரான மேலவை உறுப்பினர் பர்னீ சாண்டர்சுடன் போட்டியிட்டு சனநாயகக் கட்சியின் வேட்புமனுவைப் பெற்றார். 2020 ஆகத்து 11 அன்று, ஜோ பைடன் தன்னுடன் இணைந்து போட்டியிடும் துணைத் தலைவராக செனட்டர் கமலா ஆர்சிசைத் தேர்ந்தெடுத்தார். கமலா ஆர்சிசு துணை வேட்பாளராகப் போட்டியிடும் முதலாவது ஆப்பிரிக்க-அமெரிக்கரும், முதலாவது இந்திய-அமெரிக்கரும், முதலாவது ஆசிய-அமெரிக்கரும், மூன்றாவது பெண் துணை அரசுத்தலைவர் வேட்பாளரும் ஆவார்.[3][4]

இத்தேர்தலில் வெற்றி பெறுபவர் 2021 சனவரி 20 இல் புதிய அரசுத்தலைவராக பதவியேற்பார். அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தல் வரலாற்றில் வயது கூடிய வேட்பாளர்களாக திரம்பும் பைடனும் போட்டியிடுகின்றனர். பைடன் வெற்றி பெற்று பதவியேற்கும் போது அவருக்கு அகவை 78 ஆகவும், அல்லது திரம்பு வெற்றி பெற்றால் அவருக்கும் அகவை 78 ஆக இருக்கும். (இரானல்டு இரேகனுக்கு அவரது பதவி முடிவில் அகவை 77 ஆக இருந்தது).

குறிப்புகள்[தொகு]

  1. Trump's official state of residence was New York in the 2016 election but has since changed to Florida, with his permanent residence switching from டிரம்ப் கோபுரம் to Mar-a-Lago in 2019.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]