2020 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2020

← 2016 நவம்பர் 3, 2020 2024 →

538 உறுப்பினர்கள் கொண்ட தேர்வாளர் குழு
வெற்றிபெற 270 வாக்குகள் தேவை
 
வேட்பாளர் ஜோ பைடன் டோனால்ட் டிரம்ப்
கட்சி மக்களாட்சி குடியரசு
சொந்த மாநிலம் டெலவெயர் புளோரிடா[a]
துணை வேட்பாளர் கமலா ஆரிசு மைக் பென்சு
எதிர்பார்க்கப்படும்
தேர்வு வாக்குகள்
306 232
வென்ற மாநிலங்கள் 25 + டிசி + NE-02 25 + ME-02
மொத்த வாக்குகள் 81,268,924 74,216,154
விழுக்காடு 51.3% 46.9%

கலிபோர்னியாஓரிகன்வாஷிங்டன்ஐடஹோநெவாடாயூட்டாஅரிசோனாமொன்ட்டானாவயோமிங்கொலராடோநியூ மெக்சிகோவடக்கு டகோட்டாதெற்கு டகோட்டாநெப்ராஸ்காகேன்சஸ்ஓக்லகோமாடெக்சஸ்மினசோட்டாஅயோவாமிசூரிஆர்கன்சாலூசியானாவிஸ்கொன்சின்இலினொய்மிச்சிகன்இந்தியானாஒகையோகென்டக்கிடென்னிசிமிசிசிப்பிஅலபாமாசியார்சியாபுளோரிடாதென் கரொலைனாவட கரொலைனாவர்ஜீனியாமேற்கு வர்ஜீனியாவாசிங்டன், டி. சி.மேரிலாந்துடெலவெயர்பென்சில்வேனியாநியூ செர்சிநியூயார்க்குகனெடிகட்றோட் தீவுவெர்மான்ட்நியூ ஹாம்சயர்மேய்ன்மாசச்சூசெட்ஸ்ஹவாய்அலாஸ்காவாசிங்டன், டி. சி.மேரிலாந்துடெலவெயர்நியூ செர்சிகனெடிகட்றோட் தீவுமாசச்சூசெட்ஸ்வெர்மான்ட்நியூ ஹாம்சயர்
2020 தேர்தல் தொகுதிகளின் வரைபடம். நீலம் - பைடன்/ஆரிசு முன்னணியில் உள்ள மாநிலங்கள், சிவப்பு - திரம்பு/பென்சு முன்னணியில் உள்ள மாநிலங்கள். இலக்கங்கள் - மாநிலத்துக்குரிய தேர்வாளர் வாக்குகள்.

முந்தைய அரசுத்தலைவர்

டோனால்ட் டிரம்ப்
குடியரசுக் கட்சி

அரசுத்தலைவர் -தெரிவு

ஜோ பைடன்
சனநாயகக் கட்சி

2020 ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் (2020 United States presidential election) 2020 நவம்பர் 3 நடைபெற்றது. இது 59-வது நான்காண்டுகளுக்கு ஒருமுறையான அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தல் ஆகும். இத்தேர்தலில் அமெரிக்க வாக்காளர்கள் மாகாண வரையரை அடிப்படயில் 538 அரசுத்தலைவர் தேர்வாளர் குழுக்களுக்கு வாக்களிப்பர். மக்களால் தேர்தெடுக்கப்படும் தேர்வாளர் குழுக்கள் 2020 திசம்பர் 14 இல் புதிய குடியரசுத் தலைவரையும், துணைத் தலைவரையும் தேர்ந்தெடுப்பர் அல்லது தற்போது பதவியில் இருக்கும் அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப், துணைத்தலைவர் மைக் பென்சு ஆகியோரை மீண்டும் தேர்ந்தெடுப்பர்.[2]

எந்தவொரு தீவிரமான எதிர்ப்பும் இல்லாமல் குடியரசுக் கட்சியின் வேட்புமனுவை டோனால்டு திரம்பு பெற்றார். முன்னாள் துணைத் தலைவர் ஜோ பைடன் தனது நெருங்கிய போட்டியாளரான மேலவை உறுப்பினர் பர்னீ சாண்டர்சுடன் போட்டியிட்டு சனநாயகக் கட்சியின் வேட்புமனுவைப் பெற்றார். 2020 ஆகத்து 11 அன்று, ஜோ பைடன் தன்னுடன் இணைந்து போட்டியிடும் துணைத் தலைவராக செனட்டர் கமலா ஆர்சிசைத் தேர்ந்தெடுத்தார். கமலா ஆர்சிசு துணை வேட்பாளராகப் போட்டியிடும் முதலாவது ஆப்பிரிக்க-அமெரிக்கரும், முதலாவது இந்திய-அமெரிக்கரும், முதலாவது ஆசிய-அமெரிக்கரும், மூன்றாவது பெண் துணை அரசுத்தலைவர் வேட்பாளரும் ஆவார்.[3][4]

இத்தேர்தலில் வெற்றி பெறுபவர் 2021 சனவரி 20 இல் புதிய அரசுத்தலைவராக பதவியேற்பார். அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தல் வரலாற்றில் வயது கூடிய வேட்பாளர்களாக திரம்பும் பைடனும் போட்டியிடுகின்றனர். பைடன் வெற்றி பெற்று பதவியேற்கும் போது அவருக்கு அகவை 78 ஆகவும், அல்லது திரம்பு வெற்றி பெற்றால் அவர் 2021 இல் பதவியேற்கும் போது அகவை 74 ஆக இருக்கும். (இரானல்டு இரேகனுக்கு அவரது பதவி முடிவில் அகவை 77 ஆக இருந்தது).

பைடனின் வெற்றியை ஏற்க திரம்பு மறுத்தல்[தொகு]

தெரிவு வாக்குகளை பைடன் அதிகமாக பெற்ற போதிலும் முறையற்ற முறையில் அதிக வாக்குகளை பெற்றதாக கூறி பைடனின் வெற்றியை டொனால்டு திரம்பு ஏற்க மறுக்கிறார்.

பென்சில்வேனியா, மிக்சிக்கன், விசுகான்சின், யார்ச்சியாவில் பைடன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி டெக்சாசு மாநிலம் தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்கமறுத்துவிட்டது. [5] உச்ச நீதிமன்றம் தேர்தல் முறைகேடு பற்றி தொடுத்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்ப்பட்ட போதும் திரம்பு தேர்தல் முடிவுகளை எதிர்க்கும் பணி முடிந்துவிடவில்லையென கூறினார். [6]

திரம்பு தேர்தல் அணியினர் பென்சில்வேனியா மாநிலத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பென்சில்வேனியா நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவ்வாறு முறைகேடு நடக்கவில்லையென நீதிமன்றம் தீர்ப்பளித்தது. [7] நவம்பரில் வந்த பென்சில்வேனியா நீதிமன்ற தீர்ப்பையடுத்து சில குடியரசு கட்சி தலைவர்கள் திரம்பு தேர்தலில் தோற்றதை ஏற்கவேண்டுமேன்றனர். ஆனால் திரம்பு தேர்தல் அணியினர் தோல்வியை ஒத்துக்கொள்ள மறுத்துவிட்டனர். [8]

திரம்பு தேர்தல் அணியினர் மிக்சிகன் மாநிலத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி மிக்சிகன் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவ்வாறு முறைகேடு நடக்கவில்லையென நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேர்தலில் முறைகேடு நடந்ததாக திரம்பு தேர்தல் அணியினர் முதலில் நீதிமன்றத்தில் வழக்கு இதுவாகும். [9] விசுக்கான்சின் நீதிமன்றத்தில் மக்களாட்சி கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள இரு கவுண்டிகளில் போடப்பட்ட 200,000இக்கும் மேற்பட்ட வாக்குகளை செல்லாதது என அறிவிக்க கோரிய வழக்கு அடிப்படையற்றது என நீதிமன்றத்தால் கூறப்பட்டு தோற்றது [10]

குறிப்புகள்[தொகு]

  1. 2016 தேர்தலில் திரம்பின் அதிகாரபூர்வ மாநிலமாக நியூயார்க் இருந்தது. பின்னர் 2019 இல் அவர் தனது இருப்பிடத்தை புளோரிடாவிற்கு மாற்றினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Choi, Matthew (October 31, 2019). "Trump, a symbol of New York, is officially a Floridian now". https://www.politico.com/news/2019/10/31/trump-florida-residence-063564. 
  2. "3 U.S.C. § 7 – U.S. Code – Unannotated Title 3. The President § 7. Meeting and vote of electors", FindLaw.com.
  3. Conradis, Brandon (August 11, 2020). "Kamala Harris makes history — as a Westerner". The Hill (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் August 14, 2020.
  4. "Presidential candidates, 2020". Ballotpedia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-09.
  5. https://www.nytimes.com/2020/12/11/us/politics/supreme-court-election-texas.html?smid=fb-nytimes&smtyp=cur
  6. https://www.washingtonpost.com/politics/trump-electoral-college-challenge/2020/12/13/9f536e2a-3d4a-11eb-8db8-395dedaaa036_story.html
  7. https://www.vox.com/2020/11/22/21589195/trump-rudy-giuliani-judge-matthew-brann-incompetence-boockvar-pennsylvania
  8. https://www.vox.com/2020/11/22/21590265/trump-christie-toomey-hogan-election-results-legal-challenges-fail
  9. https://www.monroenews.com/news/20201212/michigan-court-rejects-trumps-first-election-challenge
  10. https://www.npr.org/2020/12/14/946463134/wisconsin-supreme-court-rules-trump-election-challenge-unreasonable-meritless

வெளி இணைப்புகள்[தொகு]