ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2012 ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி 2020
ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2016
நவம்பர் 8, 2016
ElectoralCollege2016.svg
2010 கணக்கெடுப்பு அடிப்படையிலான 2016 தேர்தலுக்கான தேர்தல் நிலப்படம்

முந்தைய குடியரசுத் தலைவர்
பராக் ஒபாமா
[[மக்களாட்சிக் கட்சி|{{Template: மக்களாட்சிக் கட்சி/meta/shortname}}]]

குடியரசுத் தலைவர்-தெரிவு
டோனால்ட் டிரம்ப்
[[குடியரசுக் கட்சி|{{Template: குடியரசுக் கட்சி/meta/shortname}}]]

ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல், 2016, நவம்பர் 8, 2016, செவ்வாயன்று நடைபெற்றது. இது 58வது நான்காண்டுகளுக்கு ஒருமுறையான அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் ஆகும். வாக்காளர்கள் குடியரசுத் தலைவர் தேர்வாளர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் புதிய குடியரசுத் தலைவரையும் துணை குடியரசுத் தலைவரையும் வாக்காளர் குழு மூலமாகத் தேர்ந்தெடுப்பர். அமெரிக்க அரசியலமைப்பின் 22ஆவது சட்டத்திருத்தத்தின்படி தற்போதைய குடியரசுத் தலைவராக விளங்கும் பராக் ஒபாமா மூன்றாம் முறையாக மீண்டும் போட்டியிட முடியாது.

ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தொடக்கநிலை தேர்தல்களும் கட்சிக் கூட்டங்களும் 2016ஆம் ஆண்டின் பெப்ரவரியிலிருந்து சூன் வரை நடைபெற்றது. இந்த கட்சி நியமன செயல்முறையும் ஓர் மறைமுக தேர்தல் ஆகும்; வாக்காளர்கள் கட்சியின் நியமன கருத்தரங்கிற்கு பேராளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் கட்சியின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கின்றனர்.

2016-ம் ஆண்டிற்கான தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் டோனால்ட் டிரம்ப், மக்களாட்சிக் கட்சியின் சார்பில் இலரி கிளின்டன் ஆகியோருக்கு கடும்போட்டி நிலவியது.[1] டோனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். [2][3]

டோனல்டு திரம்பு 290 தேர்வாளர்கள் வாக்கும் இலரி கிளிண்டன் 232 தேர்வாளர்கள் வாக்கும் பெற்றுள்ளனர். மிச்சிகன் மாநிலத்தின் வெற்றியாளர் நவம்பர் இறுதியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]