1640கள்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1640கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1640ஆம் ஆண்டு துவங்கி 1649-இல் முடிவடைந்தது.
முக்கிய நிகழ்வுகள்
[தொகு]- 1641 - போர்த்துக்கல்லுக்கும் டச்சுக்களுக்கும் இடையில் ஜூலை 12 இல் கூட்டு ஒப்பந்தம் உருவானது. போர்த்துக்கீசக் குடியேற்ற நாடுகளில் இவ்வொப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை.
- 1646 - யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கீசர்களுக்கும் டச்சுக்களுக்கும் இடையில் தற்காலிக அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- ஏபெல் டாஸ்மான் ஓசியானியா நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்தார் (1642 - 1644).
- டொரிசெலி முதலாவது பாதரச பாரமானியைக் (1643/1644) வடிவமைத்தார்.
- இங்கிலாந்தில் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டது. இங்கிலாந்து உள்நாட்டுப் போர் (1642 - 1649) ஆரம்பமானது. மன்னன் ஜனவரி 30, 1649 இல் தூக்கிலிடப்பட்டான். முடியாட்சி அகற்றப்பட்டு பொதுநலவாய இங்கிலாந்து என்ற பெயரில் குடியரசு அமைக்கப்பட்டது.
- சீனாவில் 1644: சிங் பரம்பரை ஆட்சிக்கு வந்தது.
- ஸ்பெயின், இடச்சுக் குடியரசுக்கிடையில் எண்பதாண்டுப் போர் (1568 - 1648) முடிவுற்றது. நெதர்லாந்து முழுமையான விடுதலை அடைந்தது.
- ஐரோப்பாவில் கத்தோலிக்க, புரட்டஸ்தாந்தருக்கிடையில் முப்பதாண்டுப் போர் (1618 - 1648) முடிவுற்றது. புனித ரோமக் குடியரசின் கீழிருந்த கிட்டத்தட்ட 360 ஜேர்மன் சிற்றரசுகள் விடுதலை அடைந்தன.
முகலாயப் பேரரசர்கள்
[தொகு]- ஷாஜகான் (1628-1658)