ஹவுரா எர்ணாகுளம் அந்த்யோதயா விரைவு தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹவுரா எர்ணாகுளம் அந்த்யோதயா விரைவு தொடருந்து
கண்ணோட்டம்
வகைஅந்த்யோதயா விரைவு தொடருந்து
முதல் சேவை27 பெப்ரவரி 2017; 3 ஆண்டுகள் முன்னர் (2017-02-27)[1] (Inaugural run)
நடத்துனர்(கள்)தென்கிழக்கு ரெயில்வே
வழி
தொடக்கம்ஹவுரா சந்திப்பு (HWH)
இடைநிறுத்தங்கள்23
முடிவுஎர்ணாகுளம் சந்திப்பு (ERS)
ஓடும் தூரம்1,970 km (1,220 mi)
சராசரி பயண நேரம்37 மணி நேரம்
சேவைகளின் காலஅளவுவாரமொரு முறை[a]
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)முன்பதிவில்லாத பெட்டிகள்
இருக்கை வசதிவசதி உண்டு
படுக்கை வசதிவசதி இல்லை
உணவு வசதிகள்வசதி இல்லை
பொழுதுபோக்கு வசதிகள்வசதி இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்பு2
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்62 km/h (39 mph)
வழிகாட்டுக் குறிப்புப் படம்

Antyodaya Express (Howrah - Ernakulam) Express Route map.png

ஹவுரா- எர்ணாகுளம் அந்த்யோதயா விரைவு தொடருந்து என்பது தென் கிழக்கு ரெயில்வே துறையால் மேற்கு வங்காள மாநிலத்தின் ஹவுரா சந்திப்பு, கேரளத்தின் எர்ணாகுளம் சந்திப்பு இரண்டுக்கும் இடையே இயக்கப்படும் அதிவிரைவு தொடருந்தாகும். இந்த விரைவு தொடருந்தானது 22877/22878 என்ற எண்களில் வாரமொருமுறை இரு வழிகளிலும் இயக்கப்படுகிறது.[1] அந்த்யோதயா என்ற இந்தி வார்த்தைக்கு தமிழாக்கம், ஏழைகளின் எழுச்சி ஆகும்.

அந்த்யோதயா விரைவு வண்டி (எளிய மக்களின் விரைவு வண்டி) என அழைக்கப்படும் இவ்வகை தொடருந்துகள்முற்றிலும் பதிவுசெய்யப்படாத/பொதுப் பெட்டிகளை கொண்டதாகும், இது இந்திய ரயில்வே மூலம் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த விரைவு வண்டி  2016 இந்திய இருப்புபாதை நிதியறிக்கையில் அதிக பயணிகள் பயன்படுத்தும் ஆனால் மிகவும் நெருக்கடி கொண்ட ரெயில் பாதைகளில் 12 மணி நேரங்களுக்குள் இரண்டு இந்திய நகரங்களை இணைக்கும் வகையில் தொடருந்துகளை இயக்க முன்மொழியப்பட்டது. அதன்படி முதன்முதலாக அந்த்யோதயா  விரைவு வண்டி  சேவை  மார்ச் 4, 2017ம் தேதி எர்ணாகுளம் சந்திப்பு, ஹவுரா சந்திப்பு தொடருந்து நிலையம் இடையே அப்போதைய  ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவினால் தொடங்கி வைக்கப்பட்டது. 

பயணப் பெட்டிகளின் தன்மை[தொகு]

இந்த அதிவிரைவு தொடருந்து முழுவதுமாக பொது பெட்டிகளால் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும், இந்த வண்டியில் எல்.இ.டி  திரையில் தொடருந்து நிலையங்கள், விரைவு வண்டியின் வேகம் போன்றவை பயணிகளுக்காக காட்சிப்படுத்தப்படும். மேலும் பணம் செலுத்தினால் தேநீர், காபி, பால் வழங்கும் தானியங்கி இயந்திரங்களும், உயிரி கழிப்பறைகளும் பார்வையற்றோருக்கான பிரெய்லி கழிப்பறை உபயோக குறிகாட்டிகளும் இருக்கின்றன. அத்துடன் வண்டி முழுவதும் சிசிடிவி கேமராக்களும் குடிநீர் வசதியோடு கைபேசிகள், மடிக்கணிகள் போன்றவைகளை தடைபடாமல் இயங்க மின்விசை சேர்வி புள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளது.

சேவைகள்[தொகு]

வண்டி எண் 22877[தொகு]

22877 என்ற எண்ணைக் கொண்ட அதிவிரைவு தொடருந்து ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஹவுரா சந்திப்பில் இருந்து கிளம்பி மணிக்கு 63 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 2285 கிலோ மீட்டர் பயணித்து 37 மணி நேரம் (மூன்று நாட்கள்) கழித்து திங்கட்கிழமை அதிகாலை 6 மணியளவில் எர்ணாகுளம் சந்திப்பு சென்றடைகிறது.

வண்டி எண் 22878[தொகு]

மறுமார்க்கமாக 22878 என்ற எண்ணைக் கொண்ட அதிவிரைவு தொடருந்து ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு கிளம்பி மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு 2285 கிலோ மீட்டர் தூரம் 22 நிறுத்தங்களை கடந்து பயணித்து 38 மணி 15 நிமிட நேரம் (மூன்று நாட்கள்) கழித்து மதியம் 3 மணிக்கு ஹவுரா சந்திப்பு சென்றடைகிறது.[2][3][4][5][6]

இந்த தொடருந்து கொச்சி, கோயம்புத்தூர், ஒங்கோல்,ஏலூரு, ராஜமுந்திரி, விஜயநகரம் போன்ற இந்தியாவின் பல முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக இயக்கப்படுகிறது. கிழக்கு இந்தியாவில் இருந்து தெற்கு இந்தியா வரை இயக்கப்பட்டு வருகிறது.

வசதிகளும் புதிய அம்சங்களும்[தொகு]

  • இந்த தொடருந்துகளின் சிறப்பு அம்சம், இவை முற்றிலும் பதிவுசெய்யப்படாத/பொது பயணிகள் பயணம் செய்யும் பெட்டிகள் கொண்டது.
  • கைபேசி, மடிக்கணினிகள் போன்ற மின்னணு சாதனங்கள் தொடர்ந்து உபயோகப்படுத்த மின்விசை சேர்வி(Charing Port) உள்ளது .
  • உயிரி கழிப்பறைகள் (Bio Toilets)
  • வினைல் தாள்கள்  கொண்டு  பெட்டிகளின் வெளிப்புறத் தோற்றம்  நீண்ட கால  பயன்பாடுகளுக்கு  ஏற்றவாறு  அமைக்கப்பட்டுள்ளது.
  • பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக  புகைப்பிடிப்பான்  மற்றும் சிசிடிவி கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் இயந்திரங்கள், சட்டை தாங்கிகள் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் அனைத்து அறிவிப்புகளும் பிரெய்லி குறியீடுகளிலும் தற்போதுள்ளது.

வழித்தடமும் நிறுத்துமிடங்களும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

பதினாறு பொதுப்பெட்டிகளைக் கொண்ட இந்த தொடருந்தே பதினைந்து அந்த்யோதயா விரைவு வண்டிகளில் முதன்முதலாக இயக்கப்பட்டதாகும்.

மேற்கோள்கள்[தொகு]


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found