ஹர்சித்தி

ஹர்சித்தி - துர்க்கையின் அம்சங்களில் ஒன்றான ஹர்சித்தி, இந்தியாவின் குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் பிரபலமான ஒரு இந்து தெய்வமாகும்.
பெயர்கள்[தொகு]
ஹர்சித்தி,சுருக்கமாக "ஹர்ஷத் அம்பா", மகிழ்ச்சியான தாய், அம்பா மற்றும் காளிகா, இந்து தேவியின் அம்சங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இத்தெய்வம் ஹர்ஷல், ஹர்ஷத், ஹர்சித் பவானி போன்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. [1]
குலதெய்வ வழிபாடு[தொகு]
பல சத்திரிய, பிராமண, ராஜபுத்திர மற்றும் வைசிய சமூகங்களால் இக்கடவுள் குல்தேவியாக வணங்கப்படுகிறாள். லோஹனாஸ், பிரம்மசத்திரியர்கள், குர்ஜர்களின் ஹர்சன குலங்கள், பல ஜைன சாதிகள் மற்றும் பஞ்சரியா போன்ற பிராமணர்களும் பல சமூகங்களும் அவரை தங்கள் குல்தேவியாக வணங்குகிறார்கள். கடலில் கப்பல்களின் பாதுகாவலராகக் கருதப்படுவதால், அவர் மீனவர்கள், பிற கடல்வழி பழங்குடியினர் மற்றும் குஜராத் மக்களால் வணங்கப்படுகிறார். வடக்கு குஜராத்தின் கம்போயா துரி-பரோட் மக்களால் அவர் குலதெய்வமாக வணங்கப்படுகிறார்.
கோவில்கள்[தொகு]
கொய்லா துங்கரின் உச்சியில் உள்ள பழமையான கோயில், மியானி[தொகு]
ஹர்சித்தி மாதா கோயிலானது ஹர்ஷல் மாதா கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது மியானி கிராமத்தில் போர்பந்தரிலிருந்து துவாரகா செல்லும் வழியில், சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தெய்வத்தின் முதல் கோயில் ஒரு மலை உச்சியில், கடலை நோக்கி அமைந்திருந்தது. கிருஷ்ணர் தனது வாழ்நாளில் அவளை வழிபட்டதாகவும், அதன் பின்னர் கொய்லா-துங்கர் என்ற மலையில் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மலையின் மேல் உள்ள மூதற் கோயில் கிருஷ்ணரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணர் அசுரர்களையும் ஜராசந்தனையும் தோற்கடிக்க விரும்பி, சக்திக்காக அம்பா மாதாவிடம் பிரார்த்தனை செய்து, தேவியின் ஆசியுடன், அசுரர்களை வென்றதாகவும், இந்த வெற்றிக்குப் பிறகு, அவர் கோயிலைக் கட்டியதாகவும், ஜராசந்தன் கொல்லப்பட்டபோது, யாதவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் தங்கள் வெற்றியைக் கொண்டாடியதால் ஹர்ஷத் மாதா அல்லது ஹர்சித்தி மாதா என்று பெயரிக்கடவுளுக்கு வந்ததாகவும். அன்றிலிருந்து அவள் யாதவரின் குலதேவியாக வணங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. [2] [3] [4] [5] [6] [7]
ஜக்து ஷாவால் கட்டப்பட்ட மியானி, கொய்லா துங்கரின் அடிவாரத்தில் உள்ள தற்போதைய கோயில்[தொகு]
13 ஆம் நூற்றாண்டின் கட்ச் நகரைச் சேர்ந்த ஜகடு என்ற வணிகர், போர்பந்தர் அருகே உள்ள பழைய துறைமுக நகரமான மியானிக்கு அருகில் உள்ள கோயல்-துங்கரின் மலையடிவாரத்தில் தற்போது உள்ள கோவிலைக் கட்டியதற்காக அறியப்படுகிறார். கோயிலில் அம்மனின் வலது பக்கத்தில் அவரது சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
கோயிலுடன் தொடர்புடைய புராணக்கதை பின்வருமாறு சொல்லப்படுகிறதுகிறது:
அம்மன் கோயில் சிற்றோடையின் திசையிலுள்ள மலையில் இருந்தது. அனால் தற்போது சிலைகள் மலை அடிவாரத்தில் உள்ளன. தேவிகளின் கண் பார்வைக்குள் வரும் எந்தக் கப்பலும் மூழ்கும் என்பதால், மியானியின் கடல் கரை அணுக முடியாததாக இருந்தது. ஜக்து ஷா தனது 7 கப்பல்களுடன் பயணம் செய்தார். அவர் தனது குடும்பத்துடன் கடைசி கப்பலில் இருந்தார். அவரது 6 கப்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவர் கண் முன்னே மூழ்கின. இதைக் கண்டு வியப்பும், பயமும் அடைந்தார். ஹர்சித்தி தேவியால் மட்டுமே எங்களைக் காப்பாற்ற முடியும் என்று நாங்கள் எச்சரித்தோம் என்று அவரது கப்பல் மாலுமி அவரிடம் கூறினார். கரையில் பாதுகாப்பாக நங்கூரமிட ஜக்து ஹர்சித்தி தேவியிடம் பிரார்த்தனை செய்தார். அவருடைய கப்பல் பாதுகாப்பாக கரையை அடைந்தது. ஜகது கோயிலுக்குச் சென்று அம்மனை மகிழ்விக்க மூன்று நாட்கள் விரதம் இருந்தார். அவள் தோன்றியபோது அவள் கண்கள் கப்பல்களில் படாமலிஉக்க ஜகது அவளை மலையிலிருந்து இறங்கும்படி வற்புறுத்தினான். மலையிலிருந்து கீழே இறங்கும் ஒவ்வொரு படியிலும் ஒரு எருமையைப் பலியிட்டால் அவனது வேண்டுகோளை ஏற்க அவள் ஒப்புக்கொண்டாள். ஜகது சமண மதத்தைப் பின்பற்றுபவர் என்பதால் இதற்கு சம்மதிக்கத் தயங்கிக் குழப்பமடைந்தார். அவர் அகிம்சையை நம்பினார்.ஜகது எருமைகளைக் கொண்டுவந்து பலியிட்டார். ஆனால் எருமைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அம்மன் புதிய கோயில் தளத்தில் இருந்து இன்னும் சில படிகள் தள்ளியே இருந்தாள். அதனால் தன்னையும் தன் குடும்பத்தையும் தியாகம் செய்ய முடிவு செய்தார். அவரது பக்தியைக் கண்டு மகிழ்ந்த தெய்வம் அவரது குடும்பத்தை மீண்டும் உயிர்ப்பித்தாள். அவனுடைய குடும்பத்திற்கு மோட்சம் கிடைக்கும் என்ற வரமும் அளித்தாள். [8]
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் உள்ள கோயில்[தொகு]
உஜ்ஜயினியில் மற்றொரு புகழ்பெற்ற ஹர்சித்தி கோயில் உள்ளது. இது புகழ்பெற்ற மன்னர் விக்ரமாதித்தியனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. விக்ரமாதித்தன் மியானியில் உள்ள மினல்பூர் என்று அழைக்கப்பட்ட கொய்லா-துங்கரைப் பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது. இது சாவ்டா வம்சத்தின் பிரபாத்சென் சாவ்தாவால் ஆளப்பட்ட துறைமுக நகரமாகும். விக்ரமாதியன் தேவியால் ஆசிர்வதிக்கப்பட்டான். அவன் ஹர்சித்தி மாதாவை, உஜ்ஜயினியில் உள்ள தனது ராஜ்ஜியத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டான். அங்கு அவர் தினமும் அவளை வழிபடுவான். [9] [7] தேவி அங்கு வாகனவதி மாதா என்றும் அழைக்கப்படுகிறாள்.
குஜராத்தின் ராஜ்பிப்லாவில் உள்ள கோவில்[தொகு]
மேலும் ஒரு பிரபலமான கோயில் ராஜ்பிப்லாவில் அமைந்துள்ளது. அங்கு அவள் உஜ்ஜயினியில் இருந்து பிரிந்த ராஜ்பிப்லாவின் முன்னாள் சமஸ்தானத்தால் குலதேவியாக வணங்கப்படுகிறாள். [10] [11]
குஜராத்தின் லாடோலில் உள்ள கோவில்[தொகு]
11 ஆம் நூற்றாண்டில் ஜெயசிம்ம சித்தராஜாவால் கட்டப்பட்ட லடோலில் மற்றொரு கோயில் உள்ளது. [12]
மற்ற குறிப்பிடத்தக்க கோவில்கள்[தொகு]
மற்ற கோயில்கள், பலாஜ், சனாஸ்மாவுக்கு அருகிலுள்ள ரூப்பூர், படன், போர்பந்தர், இந்தூர், ஜபல்பூர், துவாரகா , வாத்வான், ஔரங்காபாத், படோத், வர்வாலா, லுனாவாடா, சந்த் பௌரி, ஹரிபுரா, கட்ச் ஆகிய இடங்களில் உள்ளன. இராஜஸ்தானின் மையப் புள்ளியான லம்போலாய் என்ற இடத்தில் மற்றொரு கோயில் அமைந்துள்ளது. இது அஜ்மீருக்கு அருகில் சுமார் 60 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
புகைப்படத் தொகுப்பு[தொகு]
-
குஜராத்தின் மியானிக்கு அருகில் உள்ள கொயாலா மலையின் மீது ஹர்ஷத் என்றும் அழைக்கப்படும் ஹர்சித்தியின் பழமையான கோவில்
-
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள ஹர்சித்தி மாதா கோயில்
-
கொய்லா மலையில் உள்ள பழமையான ஹர்ஷத் கோவிலில் சிற்பங்கள்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ name="SIN2017">"શ્રી હરસિદ્ધિ માતા મંદિર નો ઇતિહાસ" (in gu). 16 July 2017. https://shareinindia.in/history-of-harsidhdhi-mata-temple/.
- ↑ "Dwarka Convention & Visitors Site - Hotels, Attractions, Dining, Car Rentals, City Services". http://www.dwarkaonline.co.in/attraction.php.
- ↑ "Harsidhima (Harshadma)". https://www.bbsl.org.uk/harshidhima.php.
- ↑ "Durga Summary". http://www.bookrags.com/wiki/Durga.
- ↑ "Photos Miyani, Gujarat, India". http://www.theweatherinindia.com/photos/Gujarat/Miy%C4%81ni.
- ↑ name="z">"Dwarka of Lord Krishna". http://www.jamnagar.org/dwarka.htm.
- ↑ 7.0 7.1 "શ્રી હરસિદ્ધિ માતા મંદિર નો ઇતિહાસ" (in gu). 16 July 2017. https://shareinindia.in/history-of-harsidhdhi-mata-temple/."શ્રી હરસિદ્ધિ માતા મંદિર નો ઇતિહાસ". Share in India (in Gujarati). 16 July 2017. Retrieved 15 September 2017.
- ↑ "શ્રી હરસિદ્ધિ માતા મંદિર નો ઇતિહાસ" (in gu). 16 July 2017. https://shareinindia.in/history-of-harsidhdhi-mata-temple/.
- ↑ "Dwarka of Lord Krishna". http://www.jamnagar.org/dwarka.htm."Dwarka of Lord Krishna". www.jamnagar.org.
- ↑ "Rajpipla". http://jaymaaharsiddhi.org/english/history.html.
- ↑ "Further, Rajpipla State in Gujarat was also founded by the Parmar Rajputs, descendants of Vikramaditya of Ujjain. They are believed to have brought idols of Harsidhhi Mata from Ujjain and worship her as their Kuldevi.". http://paramara.co.tv/.
- ↑ "Harsiddhi Mata Temple Ladol". http://harsiddhimata.wix.com/temple.