உள்ளடக்கத்துக்குச் செல்

நசீர் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹபீஸ் நசீர் அகமது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அகமது நசீர் செய்னுலாப்தீன்
අහමඩ් නසීර් සයිනුලාබ්දීන්
Ahamed Nazeer Zainulabdeen
சுற்றுச்சூழல் அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
18 ஏப்ரல் 2022
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
ரணில் விக்கிரமசிங்க
பிரதமர்மகிந்த ராஜபக்ச
ரணில் விக்கிரமசிங்க
தினேஷ் குணவர்தன
முன்னையவர்மகிந்த அமரவீர
கிழக்கு மாகாணசபையின் 3வது முதலமைச்சர்
பதவியில்
6 பெப்ரவரி 2015 – 30 செப்டம்பர் 2017
முன்னையவர்நஜீப் அப்துல் மஜீத்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 ஆகத்து 2020
தொகுதிமட்டக்களப்பு மாவட்டம்
கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
பதவியில்
செப்டம்பர் 2012 – பெப்ரவரி 2015
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
செப்டம்பர் 2012
தொகுதிமட்டக்களப்பு மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஏப்ரல் 16, 1961 (1961-04-16) (அகவை 63)
ஏறாவூர், மட்டக்களப்பு மாவட்டம்
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிசிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
வாழிடம்(s)ஏறாவூர், மட்டக்களப்பு
வேலைஅரசியல்வாதி
தொழில்பொறியியலாளர்

ஹபீஸ் நசீர் அகமது (Hafis Nazeer Ahamed, பிறப்பு: 16 ஏப்ரல் 1961) என அழைக்கப்படும் அகமது நசீர் செய்னுலாப்தீன் (Agamed Nazeer Zainulabdeen)[1], இலங்கை முசுலிம் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும்,[2] முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஆவார்.[3] இவர் 2015, பெப்ரவரி 6 இல் கிழக்கு மாகாணத்தின் 3-ஆவது முதலமைச்சராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

நசீர் அகமது முசுலிம் காங்கிரசு கட்சியின் சார்பில் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[4]

கெய்ரோ ஜன்சம்சு பல்கலைக்கழகத்திலும், சவூதி அரேபியா பெற்றோலியப் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்று மண் பொறியியலில் பட்டம் பெற்றார்.[4] அரசியலில் நுழைந்த நசீர் ஆரம்பத்தில் சிறீலங்கா முசுலிம் காங்கிரசின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.[4] பின்னர் 2005 முதல் 2009 வரையில் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் ஆலோசகராகப் பணியாற்றினார்.[4]

அரசியல்[தொகு]

2012, செப்டம்பர் 8 இல் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முசுலிம் காங்கிரசின் வேட்பாளராகப் போட்டியிட்டு 11,401 விருப்பு வாக்குகள் பெற்று மாகாணசபை உறுப்பினரானார்.[1] முசுலிம் காங்கிரசு சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே ஒரு முசுலிம் காங்கிரசு உறுப்பினர் இவராவார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 15 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், சிறீலங்கா முசுலிம் காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.[5] முசுலிம் காங்கிரசுடன் சுதந்திரக் கூட்டணி செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் இரண்டரை ஆண்டுக் காலத்திற்கு சுதந்திரக் கூட்டணியின் உறுப்பினர் நஜீப் அப்துல் மஜீத் முதலமைச்சரானார்.[6][7] முசுலிம் காங்கிரசு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி இணைந்த கிழக்கு மாகாண அமைச்சரவையில் நசீர் அகமதுவுக்கு விவசாய, கால்நடை உற்பத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இரண்டரை ஆண்டுகளின் பின்னர் 2015 பெப்ரவரி 6 இல் முசுலிம் காங்கிரசின் ஹாபிஸ் நசீர் அகமது கிழக்கு மாகாணத்தின் 3-ஆவது முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.[8] கிழக்கு மாகாணசபை 2017 செப்டம்பர் 30 இல் கலைக்கப்பட்டது.[9]

நசீர் அகமது 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முசுலிம் காங்கிரசின் வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார்.[10][11][12]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2014-04-29. பார்க்கப்பட்ட நாள் 2015-02-08.
 2. "Directory of Members: Naseer Ahamed". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 7 September 2020.
 3. "PARLIAMENTARY GENERAL ELECTION - 02-04-2004" (PDF). Sri Lanka Department of Elections. Archived from the original (PDF) on 4 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 4 August 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 4. 4.0 4.1 4.2 4.3 "சர்ச்சைகளுக்கு மத்தியில் கிழக்கு முதலமைச்சராக நஸீர் பத்வியேற்பு". வீரகேசரி. 7 பெப்ரவரி 2015. 
 5. Ferdinando, Shamindra (18 செப்டம்பர் 2012). "President bags East with Hakeem's help". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2014-09-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140917113609/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=61840. 
 6. Bandara, Kelum (20 செப்டம்பர் 2012). "PC polls: SLMC to share Chief Minister Post in East". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/opinion/172-opinion/22063-pc-polls-slmc-to-share-chief-minister-post-in-east.html. 
 7. "Majeed sworn in as Eastern CM". டெய்லிமிரர். 18 செப்டம்பர் 2012. http://www.dailymirror.lk/news/22010--majeed-sworn-in-as-eastern-cm.html. 
 8. "கிழக்கு மாகாண முதல்வரானார் ஹாபிஸ் நசீர்". தமிழ்மிரர். 6 பெப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
 9. கடந்த ஐந்து ஆண்டுகளில் கிழக்கு மாகாண சபை - ஓர் பார்வை, பிபிசி, 1 அக்டோபர் 2017
 10. "Part I : Section (I) — General - Government Notifications - Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). இலங்கை அரச வர்த்தமானி Extraordinary. No. 2187/26. Colombo, Sri Lanka. 8 August 2020. p. 6A. பார்க்கப்பட்ட நாள் 9 August 2020.
 11. "General Election 2020: Preferential votes of Batticaloa District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027100203/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-batticaloa-district. பார்த்த நாள்: 7 September 2020. 
 12. Parasuraman, Lakshme (9 August 2020). "Over 60 new faces in Parliament". Sunday Observer (Colombo, Sri Lanka). http://www.sundayobserver.lk/2020/08/09/news-features/over-60-new-faces-parliament. பார்த்த நாள்: 7 September 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசீர்_அகமது&oldid=3926669" இலிருந்து மீள்விக்கப்பட்டது