ஹஜ்ரா பேகம்
ஹஜ்ரா பேகம் ( Hajrah Begum ) (1910-2003) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவரான இவர் 1954 முதல் 1962 வரை இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக இருந்தார்.
சுயசரிதை
[தொகு]ஹஜ்ரா பேகம் 1910 இல் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்து,[1] ராம்பூரில் வளர்ந்தார்.[2] இவரது தந்தை மீரட்டில் நீதிபதியாக இருந்தார்.[2] இந்தியத் திரைப்பட நடிகையும், நடன இயக்குநருமான சோரா சேகல் இவரது சகோதரியாவார்.[3] ஹஜ்ரா பேகம் தனது உறவினரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் விரைவில் விவாகரத்து செய்துவிட்டு தனது மகனுடன் தனது தந்தையின் வீட்டிற்குத் திரும்பினார்.[2][4] இந்த காலகட்டத்தில் இவர், இந்தியப் பொதுவுடமை தலைமைக்கு எதிரான மீரட் சதி வழக்கு குறித்த நீதித்துறை செயல்முறையால் ஈர்க்கப்பட்டார்.[2]
பிரித்தனில்
[தொகு]1933 ஆம் ஆண்டில், பேகம் தனது மகனுடன் பிரித்தன் சென்றார். அங்கு மாண்டிசோரி கற்பித்தல் படிப்பைப் படித்தார்.[2][4][5] பிரித்தனில் படிக்கும் போது, கிரேட் பிரிட்டன் பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்த முதல் இந்தியர்களில் இவரும் ஒருவர்.[6] இவர் இந்திய மார்க்சிஸ்ட் மாணவர்களின் குழுவில் இருந்தவர்.[2]
அரசியல்
[தொகு]இவர் 1935 இல் சோவியத் ஒன்றியத்துக்ச் சென்றார் [5] 1935 இல் பேகம் கே. எம். அசரப், இசட் . ஏ அகமது மற்றும் சஜ்ஜாத் ஜாகிர் ஆகியோருடன் பிரித்தனிலிருந்து இந்தியா திரும்பினார்.[6] இந்தியா திரும்பியதும், இவர் இசட் . ஏ அகமதுவை மணந்தார். இருவரும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர கட்சி உறுப்பினர்களாக ஆனார்கள்.[2][4] இவர் அலகாபாத்தில் காங்கிரசு சோசலிசக் கட்சியில் தீவிரமாக செயல்பட்டார். அங்கு இவர் ரயில்வே கூலிகள், பத்திரிகை தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை ஒன்றிணைத்தார்.[7] அலகாபாத்தில் உள்ள காங்கிரசு சோசலிசக் கட்சியின் இளம் தலைவர்களின் முக்கிய குழுவில் இசட் . ஏ அகமது, கே. எம். அசரப் மற்றும் ராம் மனோகர் லோகியா ஆகியோருடன் இவரும் ஒரு பகுதியாக இருந்தார்; லோகியாவைத் தவிர மற்ற அனைவரும் கட்சிக்கு மறைமுகமாகப் பணியாற்றும் உறுப்பினர்களாக இருந்தனர்.[8] அந்த நேரத்தில் பேகம் ஒரு சில பெண் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.[4]
பேகம், 1940 இல் அகில இந்திய மகளிர் மாநாட்டின் அமைப்புச் செயலாளராக ஆனார். மேலும் அதன் உறுப்பு இந்தி மொழி அமைப்பான ரோஷ்னி என்ற பத்திரிக்கையை திருத்தி வெளியிட்டார்.[5][9] குவாமி ஜாங்கின் வார இதழில் அடிக்கடி பங்களித்தார்.[5] இவர் 1949 இல் லக்னோ சிறையில் ஐந்து மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார், மேலும் அவர் விடுதலையான பிறகு மறைமுகமாக பணிபுரிந்தார்.[5]
இவர் 1952 இல் வியன்னாவில் நடந்த உலக அமைதி மாநாட்டில் பங்கேற்றார்.[5] ஹஜ்ரா பேகம் 1954 முதல் 1962 வரை இந்தியப் பெண்களின் தேசிய கூட்டமைப்பை நிறுவியவர்களில் ஒருவராகவும், அதன் முன்னாள் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.[5]
இறப்பு
[தொகு]ஹஜ்ரா பேகம் 20 ஜனவரி 2003 அன்று நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட பின்னர் இறந்தார்.[5][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Britain Through Muslim Eyes: Literary Representations, 1780-1988.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Indian Women and Nationalism, the U.P. Story.
- ↑ Revolutionary Desires: Women, Communism, and Feminism in India.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Revolutionary Desires: Women, Communism, and Feminism in India.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 Mainstream. N. Chakravartty. 2003. pp. 4, 34.
- ↑ 6.0 6.1 Visalakshi Menon (2003). Indian Women and Nationalism, the U.P. Story. Har-Anand Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-241-0939-7.
- ↑ Visalakshi Menon (2003). Indian Women and Nationalism, the U.P. Story. Har-Anand Publications. pp. 100–101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-241-0939-7.
- ↑ Visalakshi Menon. From Movement To Government: The Congress in the United Provinces, 1937-42. SAGE Publications. pp. 35, 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-321-0368-4.
- ↑ The Light is Ours: Memoirs & Movements.
- ↑ "Burlington Hotel. Lucknow 1953. My Amma with her cousin Kiran Segal. My Nani Hajrah Begum with her sisters Zohra Segal and Uzra Butt and their father Mumtazullah Khan!".