உள்ளடக்கத்துக்குச் செல்

அஜய் கோஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜய் குமார் கோஷ்
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில்
1951–1962
முன்னையவர்சந்திர ராஜேசுவர ராவ்
பின்னவர்ஏ. ம. ச. நம்பூதிரிப்பாடு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1909-02-20)20 பெப்ரவரி 1909
வர்தமான் மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (இன்றைய மேற்கு வங்காளம், இந்தியா)
இறப்பு13 சனவரி 1962(1962-01-13) (அகவை 52)
தேசியம்இந்தியா இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
வேலை

அஜய் குமார் கோஷ் (Ajoy Kumar Ghosh; வங்காள மொழி: অজয়কুমার ঘোষ; 20 பிப்ரவரி 1909 – 13 ஜனவரி 1962[1]) ஓர் இந்திய விடுதலை இயக்க வீராராவார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முக்கிய தலைவரான இவர் 1954 முதல் 1962 வரை அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கோஷ், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள வர்தமான் மாவட்டத்தின் மிகிஜம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் தனது தந்தை மருத்துவர் சசீந்திரநாத் கோஷுடன் கான்பூருக்குச் சென்றார்.[3]

அரசியல் வாழ்க்கை[தொகு]

1926 இல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு முன் கோஷ் பகத்சிங்கையும் பதுகேஷ்வர் தத்தையும் சந்தித்தார். இந்துசுதான் சோசலிசக் குடியரசு அமைப்பின் உறுப்பினராக இருந்தார். 1929 இல் இலாகூர் சதி வழக்கு விசாரணைக்குப் பிறகு இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். 1931 இல் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் சீனிவாஸ் சர்தேசாயுடன் தொடர்பு கொண்டார். விடுதலையான பிறகு இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார்.[3] 1934 இல், இவர் கட்சியின் மத்திய குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டா. மேலும், 1936 இல் அதன் அரசியல் பணியகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1938ஆம் ஆண்டில், கோஷ் கட்சியின் அடையாள பத்திரிக்கையான நேஷனல் பிரண்ட்டின் ஆசிரியர் குழுவில் உறுப்பினரானார். 1951 முதல் 1962 இல் தான் இறக்கும் வரை கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். இவர் 1962 ல் இந்திய சீனப் போரின் போது கட்சிக்கு தலைமை தாங்கினார். சீன மக்கள் குடியரசுக்கு பதிலாக இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார்.[4][5] இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பிளவுபடுவதற்கு முன்பு இவர் மையப் பிரிவின் முக்கிய நபராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Anil Rajimwale (26 December 2009). "Ajoy Ghosh: The Creative Marxist". Mainstream Weekly.
  2. Pyotr Kutsobin. Ajoy Kumar Ghosh and Communist movement in India. Sterling Publishers, New Delhi.
  3. 3.0 3.1 Vol - I, Subodh C. Sengupta & Anjali Basu (2002). Sansad Bangali Charitavidhan (Bengali). Kolkata: Sahitya Sansad. p. 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85626-65-0.
  4. The India-China Border Dispute and the Communist Party of India: Resolutions, Statements and Speeches, 1959-1963 (Communist Party of India, 1963), 61-96
  5. “The Sino-Indian Border Dispute,” B. 644 (R) November, 1962, 4, India, CPR 12-61-12-62 folder 3 of 4, Papers of President Kennedy, National Security File, Robert Komer, Box 420, John F. Kennedy Library.
அரசியல் கட்சி பதவிகள்


முன்னர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர்
1951 — 1954
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_கோஷ்&oldid=3914881" இலிருந்து மீள்விக்கப்பட்டது