அகில இந்திய மகளிர் மாநாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகில இந்திய மகளிர் மாநாடு (All India Women's Conference) புது தில்லியை தளமாகக் கொண்ட ஓர் அரசு சாரா அமைப்பு ஆகும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி முயற்சிகளை மேம்படுத்துவதற்காக 1927 ஆம் ஆண்டில் மார்கரெட் கசின்சு என்பவரால் இவ்வமைப்பு நிறுவப்பட்டது. படிப்படியாக பெண்களின் உரிமைப் பிரச்சினைகளை சமாளிக்கவும் அமைப்பின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பழமையான மகளிர் அமைப்புகளில் இதுவும் ஒன்றாகும். அகில இந்திய மகளிர் அமைப்பு, நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

அகில இந்திய மகளிர் மாநாடு 1927 ஆம் ஆண்டு புனே நகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி மற்றும் சமூக நலனை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டது.[1][2][3] மார்கரெட் கசின்சு 1925 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பெண்களுக்கான கல்வி குறித்து விவாதித்து ஒன்றிணைந்த ஓர் அமைப்பை உருவாக்க மற்ற பெண்கள் குழுக்களுக்கும் நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.[4] பூனாவில், பூனா பல்கலைக்கழகத்தின் பெர்குசன் கல்லூரி மண்டபத்தில் நடந்த முதல் கூட்டத்தில் 2,000 பேர் கலந்து கொண்டனர்.[4] கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் பார்வையாளர்களாவர். மற்றவர்களோ அகில இந்திய மகளிர் மாநாட்டை உருவாக்கத்தில் ஈடுபட்டவர்களுக்கு உதவ உறவினர்கள் அழைத்து வந்த பெண்களாவர். அம்ரித் கவுர் என்பவர் அகில இந்திய மகளிர் மாநாட்டு நிறுவன உறுப்பினர்களில் ஒருவராவார்.[5] கமலாதேவி சட்டோபாத்யாய் முதல் செயலாளர்களில் ஒருவராவார்.[6]

லேடி இர்வின் உள்நாட்டு அறிவியல் கல்லூரியைத் திறப்பதற்காக அகில இந்திய பெண்கள் அமைப்பு 1928 ஆம் ஆண்டு முதல் பணம் திரட்டத் தொடங்கியது.[4] தீங்கு விளைவிக்கும் சமூக பழக்கவழக்கங்களைக் களையாமல் பெண்கள் கல்வியை சரியாக அணுக முடியாது என்பதை அமைப்பு உணர்ந்த்து. குழந்தை திருமண மசோதாவின் முன்னேற்றத்தைப் பார்த்து அறிக்கை செய்யவும், குழந்தைத் திருமண நடைமுறைகள் தொடர்பான செயல்பாடுகளை தடுக்கவும் இவ்வமைப்பிலுள்ள பெண்கள் ஒரு குழுவை அமைத்தனர்.[7] விவாகரத்துரிமை, வாரிசுரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமையை பெண்களுக்கு வழங்குவது உள்ளிட்ட பிற சிக்கல்களும் இவ்வமைப்பால் கையாளப்பட்டன.[8]

சங்கங்கள் பதிவுச் சட்டம், XXI 1860 இன் கீழ் அகில இந்திய மகளிர் மாநாடு அமைப்பு பதிவு செய்யப்பட்டது. (1930 இல் வரிசை எண் 558).[9] 1941 ஆம் ஆண்டு ரோசுனி என்ற ஆங்கில இதழை இவ்வமைப்பு உருவாக்கி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட்டது. இந்தியாவில் பெண்களைப் பாதுகாக்க புதிய சட்டங்களை இயற்றவும், வாக்களிக்கும் உரிமையை விரிவுபடுத்தவும் அமைப்பு நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது.[10][11] மைய அலுவலகம் ஒன்றும் கிராமப் பகுதிகளில் மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கான குழு ஒன்றையும் அமைப்பு 1946 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தியா சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருந்தபோது பல தீவிர உறுப்பினர்கள் அமைப்பை விட்டு வெளியேறி "தேசியவாத போராட்டக்காரர்களாக மாறினர். 1948 ஆம் ஆண்டு பொதுவுடமைக் கட்சியினருடன் தொடர்புடைய உறுப்பினர்களையும் அமைப்பு வெளியேற்றியது.[12]

திட்டங்கள்[தொகு]

பெண்கள் கல்வியை முக்கியமான இலக்காக நினைத்து அமைப்பு கவலை கொண்டது. 1996 ஆம் ஆண்டில் பள்ளி இடைநிற்றலுக்கான முறைசாரா கல்வித் திட்டங்கள் மற்றும் வயது வந்த பெண்ணுக்கு எழுத்தறிவுத் திட்டங்களை கிளைகள் மூலம் கைவினைப் பயிற்சியுடன் தொடங்குவதன் மூலம் அமைப்பின் எழுத்தறிவு பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டது.[13][14] கிராமப்புறப் பெண்களுக்கான நுண்ணிய கடன் திட்டங்கள் மற்றும் ஆற்றல் மேம்பாட்ட்டுத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. சுகாதாரமான உணவு சேமிப்பிற்காக சூரிய சக்தியைப் பயன்படுத்த பெண்களுக்குப் பயிற்சி அளித்தது.[15] பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், பெற்றுத்தருதருதல், சுகாதார சிக்கல்களுக்கு உதவுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

90 ஆண்டுகளுக்கும் மேலாக அகில இந்திய மகளிர் மாநாடு அமைப்பு தேசிய அளவிலான சமூகத்திற்கு சேவைகளை வழங்குவதில் எப்போதும் முன்னணியில் உள்ளது. 2020 ஆம் ஆண்டு சூலை 30 அன்று, கோவிட் 19 தொற்றுநோயின் குழப்பம் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில், அமைப்பின் புதிய அலுவலகப் பணியாளர்கள் குழு நமது உலகத்தை பசுமை மற்றும் கிரகத்தை ஆரோக்கியமாக்குவதற்கு ஒரு வரலாற்று நடவடிக்கையை எடுத்தது. கழிவு சேகரிப்பை அமைப்பதன் மூலம் மின் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கு உரிய வசதியை செய்துள்ளது. பழைய மடிக்கணினிகள், கணினிகள் மற்றும் அனைத்து வகையான பழைய மின்னணு சாதனங்கள் போன்றவை மின் கழிவுகளாக கருதப்படுகின்றன.

குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள்[தொகு]

அகில இந்திய மகளிர் மாநாட்டு அமைப்பின் முன்னாள் தலைவர் பொறுப்பில் இருந்தவர்கள் பட்டியல் இங்கு தரப்பட்ட்டுள்ளது.:[16]

மேற்கோள்கள்[தொகு]

  1. "All India Women's Conference". Women's International Network News 23 (1): p. 56. Winter 1997. http://search.ebscohost.com/login.aspx?direct=true&db=f5h&AN=9702066262&site=ehost-live. 
  2. Nair, Usha. "AIWC at a Glance: The First Twenty-Five Years 1927-1952" (PDF). AIWC. 17 April 2018 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 17 April 2018 அன்று பார்க்கப்பட்டது.
  3. "All-India Women's Conference" (in en). The Guardian. 5 February 1938. https://www.newspapers.com/clip/19320441/. 
  4. 4.0 4.1 4.2 Kumar, Radha (1997) (in en). The History of Doing: An Illustrated Account of Movements for Women's Rights and Feminism in India 1800-1990. New Delhi: Zubaan. பக். 68–69. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788185107769. https://books.google.com/books?id=68xTBT1-H4IC&q=%22all%20india%20women's%20conference%22&pg=PA68. 
  5. Pal, Sanchari (2018-03-05). "The Princess Who Built AIIMS: Remembering India's First Health Minister, AmritKaur" (in en-US). The Better India. https://www.thebetterindia.com/133160/rajkumari-amrit-kaur-aiims-india-first-health-minister/. 
  6. Vaidehi (2017-10-26). "A voice for women" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/books/a-voice-for-women/article19924223.ece. 
  7. Aerts, Mieke (2015) (in en). Gender and Activism: Women's Voices in Political Debate. Amsterdam: Uitgeverij Verloren. பக். 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789087045579. https://books.google.com/books?id=PQw9DQAAQBAJ&q=%22all%20india%20women's%20conference%22&pg=PA40. 
  8. Lodhia, Sharmila "All India Women's Conference | Description, History, &Work". EncyclopediaBritannica.  
  9. "History". AIWC : All India Women’s Conference (ஆங்கிலம்). 17 April 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-04-17 அன்று பார்க்கப்பட்டது.
  10. Bone, Pamela (9 February 1990). "Choosing Life Over Death" (in en). The Age. https://www.newspapers.com/clip/19320210/. 
  11. Maffett, M.L. (14 March 1940). "Modern Women" (in en). The Springville Herald. https://www.newspapers.com/clip/19320364/. 
  12. Omvedt, Gail (1975). "Rural Origins of Women's Liberation in India". Social Scientist 4 (4/5): 45. doi:10.2307/3516120. 
  13. "Project Details". Asha for Education (ஆங்கிலம்). 3 March 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-04-17 அன்று பார்க்கப்பட்டது.
  14. Choudhury, NilanjanaGhosh (22 February 2005). "Hope Afloat for Special Tots - Making That Vital Difference". The Telegraph. 23 October 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-04-17 அன்று பார்க்கப்பட்டது.
  15. "Now, healthy and storable 'solar dried food'". The New Indian Express. 21 March 2018. http://www.newindianexpress.com/lifestyle/food/2018/mar/21/now-healthy-and-storable-solar-dried-food-1790597.html. 
  16. "Past Presidents". AIWC: All India Women's Conference. 2014-03-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-03-19 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]