சந்திர ராஜேசுவர ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சந்திர ராஜேஸ்வர ராவ்
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில்
1964–1990
முன்னவர் ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு
பின்வந்தவர் இந்திரஜித் குப்தா
பதவியில்
1950–1954
முன்னவர் பி. டி. ரணதிவே
பின்வந்தவர் அஜய் கோஷ்
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 6, 1914(1914-06-06)
மங்களாபுரம், கிருஷ்ணா மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போது ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு 9 ஏப்ரல் 1994
பிள்ளைகள் சந்திர சந்திரசேகர் (மகன்)
பணி இந்திய விடுதலைப் போராட்ட வீர, சோசலிசவாதி,
தெலுங்கானா கிளர்ச்சியின் தலைவர்
விருதுகள் லெனின் ஆணை

சந்திர ராஜேஸ்வர ராவ் (Chandra Rajeshwara Rao) (ஜூன் 6, 1914 - ஏப்ரல் 9, 1994) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட வீரராவார்.[1] இவர் தெலுங்கானா கிளர்ச்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்தார் (1946-1951). இவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) பொதுச் செயலாளராக 28 ஆண்டுகள் பணியாற்றினார். 1992இல் உடல்நலக் காரணங்களுக்காக வேலையை விட்டுவிட்டார்.[2][3]

வாழ்க்கை[தொகு]

இவர் ஒரு வசதியான விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர். ஜூன் 6, 1914 அன்று இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தின் மங்களாபுரம் கிராமத்தில் பிறந்தார்.[4] வாரணாசியிலுள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்திலும், விசாகப்பட்டினத்திலுள்ள மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவக் கல்வியைப் பெற்றார். பின்னர் 1931இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் (சிபிஐ) சேர்ந்தார். 1954 - 1955இல் அகில இந்திய விவசாயிகள் அமைப்பின் துணைத் தலைவராக இருந்தார்.[5] திசம்பர் 1964 இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தேசிய அமைப்பின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு 1974இல் "லெனின் ஆணை" விருது வழங்கப்பட்டது.

குடும்பம்[தொகு]

இவரது மகன் சந்திர சந்திரசேகரும், பேரன் சந்திர ஜெய்தீப்பும் ஆந்திராவில் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திர_ராஜேசுவர_ராவ்&oldid=3242865" இருந்து மீள்விக்கப்பட்டது