பி. கே. வாசுதேவன் நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. கே. வாசுதேவன் நாயர்
P. K. Vasudevan Nair
7வது கேரள முதலமைச்சர்
பதவியில்
29 அக்டோபர் 1978 – 7 அக்டோபர் 1979
ஆளுநர்ஜோதி வெங்கடாசலம்
முன்னையவர்அ. கு. ஆன்டனி
பின்னவர்சி.எச் முகமது கோயா
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
2004[1] – 12 ஜூலை 2005
முன்னையவர்வி. எஸ். சிவக்குமார்
பின்னவர்பானியன் இரவீந்திரன்
தொகுதிதிருவனந்தபுரம்
பதவியில்
1967[2]–1971
முன்னையவர்உருவாக்கப்பட்டது
பின்னவர்எம். எம். ஜோசப்
தொகுதிபீர்மேடு
பதவியில்
1962[3]–1967
முன்னையவர்பி. டி. புன்னூசு
பின்னவர்சுசீலா கோபாலன்
தொகுதிஅம்பழப்புழா
பதவியில்
1957[4]–1962
முன்னையவர்சாலக்குழி பௌலோசு மாதென்
பின்னவர்இரவீந்திர வர்மா
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1977[5]–1982[6]
முன்னையவர்டி. வி. தாமஸ்
பின்னவர்கே. பி. இராமச்சந்திரன் நாயர்
தொகுதிஆலப்புழா
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் கேரள மாநில அமைப்பின் செயலாளர்
பதவியில்
1984–1998
முன்னையவர்எஸ். குமரன்
பின்னவர்வெலியம் பார்கவன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
படையாத் கேசவப்பிள்ளை வாசுதேவன் நாயர்

(1926-03-02)2 மார்ச்சு 1926
கிடங்கனூர், கோட்டயம், திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியா
இறப்பு12 சூலை 2005(2005-07-12) (அகவை 79)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
துணைவர்கே. பி. இலட்சுமி குட்டியம்மா
பிள்ளைகள்3 மகன்கள், 2 மகள்கள்
முன்னாள் கல்லூரிஅரசு சட்டக் கல்லூரி, திருவனந்தபுரம்

பி.கே.வி என பிரபலமாக அறியப்படும் படையாத் கேசவப்பிள்ளை வாசுதேவன் நாயர் (Padayatt Kesavapillai Vasudevan Nair) (2 மார்ச் 1926 - 12 ஜூலை 2005) கேரளாவின் ஒன்பதாவது முதல்வராகவும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவராகவும் இருந்தார். இவர் 1957, 1962, 1967, 2004 இல் நான்கு முறை மக்களவைக்கும் , 1977, 1980 இல் இரண்டு முறை கேரள சட்டமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அ. கு. ஆன்டனி முதல்வர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, 20 அக்டோபர் 1978இல் இவர் முதல்வர் ஆனார்.[7] எனினும் ஐக்கிய முன்னணியிலுள்ள மற்ற கட்சிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இவர் 7 அக்டோபர் 1979இல் பதவி விலகினார்.

பதவி[தொகு]

இவர் திருவிதாங்கூர் மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு, அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பு ஆகியவற்றின் நிறுவனர்-தலைவராக இருந்தார். 1964இல் பொதுவுடைமை இயக்கத்தில் பிளவு ஏற்பட்ட பிறகு இவர் இந்திய பொதுவுடைமைக் கட்சியுடன் இருந்தார். மேலும், 1982 இல் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இறப்பு[தொகு]

பி. கே. வாசுதேவன் நாயர், நீண்டகால இதய நோயாலும் கடுமையான நீரிழிவு நோயாலும் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் 12 ஜூலை 2005 அன்று பிற்பகல் 3.35 மணியளவில் புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில்இறந்தார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://loksabhaph.nic.in/Members/statedetailar.aspx?state_name=Kerala&lsno=14 Members 14th of Loksabha 2004-09
  2. http://loksabhaph.nic.in/Members/statedetailar.aspx?state_name=Kerala&lsno=4 Members 4th of Loksabha 1967-71
  3. http://loksabhaph.nic.in/Members/statedetailar.aspx?state_name=Kerala&lsno=3 Members 3rd of Loksabha 1962-67
  4. http://loksabhaph.nic.in/Members/statedetailar.aspx?state_name=Kerala&lsno=2 Members 2nd of Loksabha 1957-62
  5. http://www.niyamasabha.org/codes/mem_1_5.htm Members of 5th KLA 1977-80
  6. http://www.niyamasabha.org/codes/mem_1_6.htm Members of 6th KLA 1980-82
  7. 7.0 7.1 "Veteran CPI leader 'PKV' passes on". outlookindia.com/. பார்க்கப்பட்ட நாள் 2020-09-08.

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கே._வாசுதேவன்_நாயர்&oldid=3213180" இலிருந்து மீள்விக்கப்பட்டது