ஸ்ரீனிவாஸ் குமார் சின்ஹா
ஸ்ரீனிவாஸ் குமார் சின்ஹா | |
---|---|
ஜம்மு காஷ்மீரின் 8வது ஆளுநர் | |
பதவியில் 4 ஜூன் 2003 – 25 ஜூன் 2008 | |
முன்னையவர் | கிரிஷ் சந்திர சக்சேனா |
பின்னவர் | நரேந்திரநாத் ஓரா |
பதவியில் 1 செப்டம்பர் 1997 – 21 ஏப்ரல் 2003 | |
முன்னையவர் | உலோகநாத் மிசுரா |
பின்னவர் | அரவிந்த் டேவ் |
இந்திய ராணுவப்படையின் துணைத் தளபதி | |
பதவியில் 1 ஜனவரி 1983 – 1 ஜூன் 1983 | |
முன்னையவர் | ஏ. எம். சேத்னா |
பின்னவர் | அசாமின் 19வது ஆளுநர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பட்னா, பீகார் | 7 சனவரி 1926
இறப்பு | 17 நவம்பர் 2016 | (அகவை 90)
பிள்ளைகள் | மிருணாளினி மனிஷா யஷ்வர்தன் குமார் சினஹா |
Military service | |
பற்றிணைப்பு | இந்தியா இந்தியா |
கிளை/சேவை | பிரித்தானிய இந்திய தரைப்படை இந்தியத் தரைப்படை |
சேவை ஆண்டுகள் | 1944 – 1983 |
தரம் | படைத்துறை தளபதி |
அலகு | 6/9 Jat Regiment |
கட்டளை | Western Army I Corps 10 Infantry Division 23 Mountain Division 71 Mountain Brigade 3/5 Gorkha Rifles |
போர்கள்/யுத்தங்கள் | 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் |
பணி எண் | IC-1536[1] |
Awards | பரம் விசிட்ட சேவா பதக்கம் |
படைத்துறை தளபதி ஸ்ரீனிவாஸ் குமார் சின்ஹா, (Srinivas Kumar Sinha) (பரம் விசிட்ட சேவா பதக்கம்) (ஜனவரி 7, 1926 - நவம்பர் 17, 2016) ஒரு இந்திய இராணுவத் தளபதி ஆவார். இவர் இராணுவத் தளபதியின் துணைத் தலைவராக பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலங்களின் ஆளுநராகப் பணியாற்றினார். [2]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]ஸ்ரீனிவாஸ் குமார் சின்ஹா 1926 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி பீகாரில் உள்ள பாட்னாவில் பிறந்தார். இவர் பீகார் மாநிலத்தின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் மிதிலேஷ் குமார் சின்ஹாவின் மகனும், பிரித்தானியப் பேரரசின் முதல் இந்திய காவல்துறாஇத் தலைவருமான அலக் குமார் சின்ஹாவின் பேரனும் ஆவார். [3] 1943 ஆம் ஆண்டு தனது 17வது வயதில் பாட்னா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், பிறகு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். பெல்ஜியத்தில் உள்ள அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியின் சிறந்த பயிற்சியாளராக அங்கீகரிக்கப்பட்டார். பிறகு இவர் ஜாட் படைப்பிரிவில் நியமிக்கப்பட்டார். பின்னர், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, 5 வது கூர்க்கா படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். [4] [5] இரண்டாம் உலகப் போரின் போது பர்மா மற்றும் இந்தோனேசியாவிலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு காஷ்மீரிலும் போரில் ஈடுபட்டார். நாகாலாந்து மற்றும் மணிப்பூரில் இரண்டு முறை பதவிகளை வகித்தார், அங்கு இவர் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றார்.
முன்னாள் தூதரக அதிகாரியும், தற்போதைய தலைமை தகவல் ஆணையராக பணியாற்றிவரும் யஷ்வர்தன் குமார் சின்ஹா இவரது மகனாவார்.[6]
அசாம் ஆளுநர்
[தொகு]1997 இல், கிளர்ச்சி உச்சத்தில் இருந்த நேரத்தில் அசாமின் ஆளுநராக சின்ஹா நியமிக்கப்பட்டார். ஒருங்கிணைந்த கட்டளை, பொருளாதார மேம்பாடு மற்றும் உளவியல் முன்முயற்சிகள் என்ற மூன்று முனை மூலோபாயத்தை வடிவமைத்தார். ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் தீவிரப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மூலம் போராளிகள் மீது கடும் நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் 100,000 ஆழமற்ற குழாய் கிணறுகளை நிறுவுவதில் இவர் முயற்சி செய்தார். அசாமை அரிசி பற்றாக்குறை மாநிலத்திலிருந்து அரிசி உபரி மாநிலமாக மாற்றினார். [7] இவரது உளவியல் முன்முயற்சிகள் ஒரு பெரிய உணர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஜம்மு காஷ்மீர் ஆளுநர்
[தொகு]ஜூன் 4, 2003 அன்று, தளபதி சின்ஹா ஜம்மு காஷ்மீர் ஆளுநரானார். 2003 ஆம் ஆண்டு, அவர் ஜம்மு காஷ்மீர் ஆளுநராகப் பொறுப்பேற்றபோது, சராசரியாக ஒவ்வொரு நாளும் பத்து பேர் கொல்லப்பட்டனர். மேலும், சுற்றுலாப் பயணிகளின் ஆண்டு வருகை வெறும் 28,000 ஆக இருந்தது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தினசரி கொலை விகிதத்தை பத்தில் இருந்து ஒன்றாகக் குறைத்தது. மேம்பட்ட பாதுகாப்பு சூழ்நிலையுடன், ஆளுநர் நியமனத்தை இவர் கைவிட்டபோது, 2008 ஆம் ஆண்டளவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆண்டுக்கு 28,000 இலிருந்து 600,000 ஆக அதிகரித்தது. மாநிலம் மலைகளில் 1000 நீர்மின்த் திட்டங்களை நிறுவத் தொடங்கியது.
காஷ்மீரின் தாராளவாத இஸ்லாமிய மரபுகளை புதுப்பிக்கும் முயற்சிகளுடன் குடிமை நடவடிக்கையை இவர் ஊக்குவித்தார். பாக்கித்தான் மற்றும் பல மத்திய ஆசிய மாநிலங்களிலிருந்து வந்த அறிஞர்களுடன் காஷ்மீர் பற்றிய கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை ஸ்ரீநகரில் தொடங்கி வைத்தார்.
காஷ்மீர் ஆளுநராக இருந்த இவரது பதவிக்காலம் 25 ஜூன் 2008 அன்று முடிவடைந்தது.
இறப்பு
[தொகு]தனது 90 வயதில் 17 நவம்பர் 2016 அன்று இறந்தார். இவருக்கு பிரேமினி சின்ஹா என்ற மனைவியும், யஷ்வர்தன் குமார் சின்ஹா என்றா ஒரு மகனும், மீனாட்சி, மிருணாளினி மற்றும் மனிஷா ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். [8] [9] [10] [11]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India. 11 March 1967. p. 178.
- ↑ "Former J&K; Governor Lt Gen Srinivas Kumar Sinha Passes Away". 17 Nov 2016. http://www.huffingtonpost.in/2016/11/17/former-jandk-governor-lt-gen-srinivas-kumar-sinha-passes-away/.
- ↑ "Archived copy". Archived from the original on 30 December 2014. பார்க்கப்பட்ட நாள் 14 November 2012.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Lt Gen SK Sinha – Brown Pundits". www.brownpundits.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-10.
- ↑ Roychowdhury, Shankar (2016-11-19). "Tribute: The 'thinking man's soldier'". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-03.
- ↑ Roy, Amit (2 December 2018). "Slice of Patna in Sinha saga". Telegraph India. பார்க்கப்பட்ட நாள் 2022-01-03.
- ↑ "Business News: 'SKY' is not the limit for Assam's strife-hit economy". m.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-10.
- ↑ "No, Kanye, That's Not How It Happened". UConn Today. 2019-01-24. Archived from the original on 17 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-12-03.
Sinha's father, Lt.-Gen. Srinivas Kumar Sinha of the Indian Army
- ↑ "J&K ex-Guv Lt Gen Sinha passes away". Tribune India (in ஆங்கிலம்). 17 November 2016. பார்க்கப்பட்ட நாள் 2022-01-20.
- ↑ "PM condoles death of former J&K Governor Lt Gen SK Sinha". The Indian Express (in ஆங்கிலம்). PTI. 2016-11-17. பார்க்கப்பட்ட நாள் 2022-01-20.
{{cite web}}
: CS1 maint: others (link) - ↑ "SK Sinha passes away". Daily Excelsior. 2016-11-17. பார்க்கப்பட்ட நாள் 2022-01-20.