உள்ளடக்கத்துக்குச் செல்

பிரபுல்ல குமார் மகந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரபுல்ல குமார் மகந்தா (Prafulla Kumar Mahanta) (பிறப்பு 1952) அசாம் இயக்கித்தின் தலைவரும் முன்னாள் அசாம் மாநில முதலமைச்சராக இரு முறை பொறுப்பு வகித்தவரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல் தலைவரும் ஆவார். தற்பொழுது அசாம் கன பரிசத்(மு) கட்சித்தலைவராக பொறுப்பு வகிக்கின்றார்.

அசாமில் இரு முறை முதலமைச்சராக , (1985-1990) மற்றும் (1996-2001), மேலும் நாட்டிலேயே இளவயதில் முதலமைச்சர் பொறுப்பேற்ற முதல் தலைவராவார். அசாம் மாணவர் அணியின் முன்னாள் தலைவராக 1979 முதல் 1985 வரையிலுள்ள காலத்தில் பொறுப்பிலிருந்தவர். ஆகஸ்டு 2005 இல் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தினால் அசாம் கண பரிசத் கட்சியிலுருந்து நீக்கப்பட்டதினால் புதிய கட்சியாக அசாம் கண பரிசத் (முற்போக்கு) என்ற பெயரில் துவக்கப்பட்டு அதன் தலைவராக செப்டம்பர் 15, 2005 முதல் இருக்கின்றார்.

பிரபுல்ல குமார் மகந்தா உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த பொழுது உல்பா உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை கொன்றதில் அசாம் அரசின் உள்துறை அமைச்சர் சம்பந்தப்பட்டிருப்பதாக சைக்கியா ஆணையம் குற்றம்சாட்டியது. இந்நிகழ்வு 1998 முதல் 2001 வரையுள்ள இடைபட்ட காலத்தில் நிகழ்ந்த்தாகும். இந்த குற்றச்சாட்டு அவரின் அரசியல் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது.[1]

மேற்கோளகள்

[தொகு]
  1. சைக்கியா ஆணையம் ரகசிய கொலையில் முன்னாள் முதலவர் பிரபுல்ல குமார் மகந்தாவை சுட்டிகாட்டியது பரணிடப்பட்டது 2007-11-16 at the வந்தவழி இயந்திரம் தி இந்து வெள்ளிக்கிழமை, நவம்பர் 16, 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபுல்ல_குமார்_மகந்தா&oldid=3603922" இலிருந்து மீள்விக்கப்பட்டது