வேத பிரகாசு மர்வா
வேத பிரகாசு மர்வா | |
---|---|
3ஆவது சார்க்கண்டு ஆளுநர் | |
பதவியில் 12 சூன் 2003 – 9 திசம்பர் 2004 | |
முன்னையவர் | இராமா ஜோய்சு |
பின்னவர் | சையத் சிப்தே ராசி |
பீகார் ஆளுநர் (பொறுப்பு) | |
பதவியில் 1 நவம்பர் 2004 – 4 நவம்பர் 2004 | |
முன்னையவர் | இராமா ஜோய்சு |
பின்னவர் | பூட்டா சிங் |
9ஆவது மணிப்பூர் ஆளுநர் | |
பதவியில் 2 திசம்பர் 1999 – 12 சூன் 2003 | |
முன்னையவர் | அவுது நாராயண் சிறீவசுதுவா |
பின்னவர் | அரவிந்த் டேவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வேத பிரகாசு மர்வா 15 செப்டம்பர் 1934 பெசாவர், பிரித்தானிய இந்தியா (தற்பொழுது பாக்கித்தானில்) |
இறப்பு | 5 சூன் 2020 கோவா, இந்தியா | (அகவை 95)
துணைவர் | காமெல் மர்வா |
பிள்ளைகள் | அமிதாப் மர்வா |
முன்னாள் கல்லூரி | மான்செஸ்டர் பல்கலைக்கழகம் |
வேலை | இந்தியக் காவல் பணி பொது நிர்வாகம் |
As of 01 மார்ச், 2020 |
வேத பிரகாசு மர்வா (Ved Marwah)(15 செப்டம்பர் 1934 - 5 சூன் 2020) [1] என்பவர் இந்தியக் காவல்துறை அதிகாரி ஆவார். இவர் காவல் பணி ஓய்வு பெற்றவுடன் மணிப்பூர், மிசோரம் மற்றும் சார்கண்டு மாநிலங்களின் ஆளுநராகப் பணியாற்றினார். மூன்று வார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தனது 87வது வயதில் கோவாவில் காலமானார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர் பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் பெசாவரில் பிறந்து வளர்ந்தார். பகர்சந்த் மர்வாவின் மகனான இவர், இந்தியப் பிரிவினைக்குப் பிறகு இந்திய ஒன்றியத்திற்குக் குடிபெயர்ந்தார். இவர் தனது கல்வியைப் புனித இசுடீபன்சு கல்லூரியில் முடித்தார். இங்கு இவர் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் பட்டயப்படிப்பினை முடித்தார்.
காவல்துறை சேவை
[தொகு]இந்தியக் காவல் பணி அதிகாரியான மர்வா, தனது 36 ஆண்டுக் காலப் பணியின் போது, காவல் ஆணையர் (1985–88), தில்லி மற்றும் தேசியப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் (1988-90) பதவியினை வகித்துள்ளார். 1989-ல் இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ இவருக்கு வழங்கப்பட்டது.
ஆளுஞர் மற்றும் பிற நிர்வாக பதவிகள்
[தொகு]ஜம்மு & காஷ்மீர் மற்றும் பீகார் ஆளுநர்களின் ஆலோசகராகவும், 1999 முதல் 2003 வரை மணிப்பூர் ஆளுநராகவும், 2000 முதல் 2001 வரை மிசோரம் ஆளுநராகவும், 2003 2004 வரை சார்கண்டு ஆளுநராகவும் பணியாற்றினார். இவர் கொள்கை ஆராய்ச்சி மையத்தில் கெளரவப் பேராசிரியராகவும்,[2] புது தில்லியின் கொள்கை ஆய்வு மையத்தின் தலைவராகவும் இருந்தார்.[3]
வெளியீடுகள்
[தொகு]இவரது வெளியீடுகளில் "இந்தியன் இன் டர்மோயில்-ஜே & கே (2009)",[4] "இடது தீவிரவாதம் மற்றும் வடகிழக்கு" மற்றும் "அன்சிவில் வார்ஸ்: இந்தியாவில் பயங்கரவாதத்தின் நோய்க்குறியியல்" ஆகியவை அடங்கும்.[5]
மற்றொரு வெளியீடு "பஞ்சாபில் பயங்கரவாத எதிர்ப்பு" இந்தியானா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. இதே நேரத்தில் "ஜம்மு மற்றும் காஷ்மீரில் சுயாட்சி" ஆம்ஸ்டர்டாமின் கிரெடாவால் வெளியிடப்பட்டது.
இறப்பு
[தொகு]மர்வா 5 சூன் 2020 அன்று வேத பிரகாசு மர்வா இறந்தார்.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lakhani, Somya (5 June 2020). "Ved Marwah, former chief of Delhi Police, passes away in Goa". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 5 June 2020.
- ↑ "Ved Marwah, Honorary Research Professor". Centre for Policy Research. பார்க்கப்பட்ட நாள் 6 June 2020.
- ↑ Desk, Sentinel Digital (2020-06-06). "Ved Marwah, former Governor of Mizoram, Manipur & Jharkhand, dies at 87 - Sentinelassam". www.sentinelassam.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-22.
- ↑ India in Turmoil-J&K. Rupa & Co. 2009. p. 352. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8129114761.
- ↑ Uncivil wars : pathology of terrorism in India. HarperCollins. 1997. p. 472. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8172232217.
- ↑ "Former Delhi Police commissioner Ved Marwah dies". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-06-06. பார்க்கப்பட்ட நாள் 2021-10-22.
- ↑ PTI (2020-06-06). "Ved Marwah, former governor and Delhi Police commissioner, dies at 87". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-22.