உள்ளடக்கத்துக்குச் செல்

வெண்ணிறகு கருப்பு பட்டாணிக் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண்ணிறகு கருப்பு பட்டாணிக் குருவி
எத்தியோப்பாவில் பரிந்துரைக்கப்பட்ட இனம்
மெ. லு. இன்சைனிசு அங்கோலாவில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மெலனிபரசு
இனம்:
மெ. லுகோமீல்சு
இருசொற் பெயரீடு
மெலனிபரசு லுகோமீல்சு
(உருப்பெல், 1840)
வேறு பெயர்கள்
  • பரசு லுகோமீல்சு

வெண்ணிறகு கருப்பு பட்டாணிக் குருவி (White-winged black tit-மெலனிபரசு லுகோமீல்சு) என்பது பாரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குருவி வரிசை பறவை சிற்றினம் ஆகும். இது வெள்ளை இறக்கை பட்டாணிக் குருவி, இருண்ட கண் பட்டாணிக் குருவி அல்லது வடக்கு கருப்பு பட்டாணிக் குருவி என்றும் அழைக்கப்படுகிறது.[2] இந்த சிற்றினம் முதன்முதலில் 1840ஆம் ஆண்டில் எட்வர்ட் ரூபெல் என்பவரால் விவரிக்கப்பட்டது.

விளக்கம்

[தொகு]

இது வெள்ளை இறக்கை திட்டுடன் கருப்பு நிறத்தில் காணப்படும். ஆனால் இது வடக்கு வெந்தோள்பட்டை பட்டாணிக் குருவியிலிருந்து (மெலனிபரசு கினென்சிசு) வேறுபடுகிறது. இது சில நேரங்களில் இருண்ட கண் கொண்டதாகக் கருதப்படுகிறது.

பரவல்

[தொகு]

இது மத்திய ஆப்பிரிக்காவில், மேற்கில் அங்கோலா முதல் கிழக்கில் எத்தியோப்பியா வரை காணப்படுகிறது. இதில் இரண்டு துணையினங்கள் உள்ளன.[3]

வகைப்பாட்டியல்

[தொகு]

வெள்ளை இறக்கை கருப்பு பட்டாணிக் குருவி முன்பு பரசு பேரினத்தில் வைக்கப்பட்டது. ஆனால் 2013இல் வெளியிடப்பட்ட மூலக்கூறு இனவரலாற்றுப் பகுப்பாய்வு புதிய பேரினத்தின் தனித்துவமான உயிரிக்கிளையினை உருவாக்கிய பின்னர் மெலனிபரசுக்கு மாற்றப்பட்டது.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2017). "Melaniparus leucomelas". IUCN Red List of Threatened Species 2017: e.T22731092A118693774. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22731092A118693774.en. https://www.iucnredlist.org/species/22731092/118693774. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Gosler, A. & Clement, P. (2019).
  3. "White-winged Black Tit (Parus leucomelas) - HBW 12, p. 731". Internet Bird Collection. பார்க்கப்பட்ட நாள் 27 June 2016.
  4. Johansson, U.S.; Ekman, J.; Bowie, R.C.K.; Halvarsson, P.; Ohlson, J.I.; Price, T.D.; Ericson, P.G.P. (2013). "A complete multilocus species phylogeny of the tits and chickadees (Aves: Paridae)". Molecular Phylogenetics and Evolution 69 (3): 852–860. doi:10.1016/j.ympev.2013.06.019. பப்மெட்:23831453. 
  5. Gill, Frank; Donsker, David (eds.). "Waxwings and their allies, tits & penduline tits". World Bird List Version 6.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 15 February 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
  • பொதுவகத்தில் M. leucomelas பற்றிய ஊடகங்கள்
  • Data related to M. leucomelas at Wikispecies
  • Sound recordings, xeno-canto