வெடிவேம்பு
Appearance
வெடிவேம்பு | |
---|---|
C. tabularis flowers, leaves and capsule | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம்
|
வரிசை: | சபிண்டேலசு
|
குடும்பம்: | மெலியாசியே
|
பேரினம்: | சுக்ரேசியா
|
இனம்: | சு. டேபுலாரிசு
|
இருசொற் பெயரீடு | |
சுக்ரேசியா டேபுலாரிசு ஏ. சுசு, 1847 | |
வேறு பெயர்கள் | |
சிற்றினப் பட்டியல் |
வெடிவேம்பு (Chukrasia tabularis)(சுக்ரேசியா டேபுலாரிசு) என்பது ஒரு இலையுதிரும், அயன மண்டலக் காட்டு மர இனமாகும். இது வங்காளதேசம், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, இலாவோசு, மலேசியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, வியட்டுநாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தது.[2] இது கமரூன், கோசுட்டாரிக்கா, நிக்கராகுவா, புவேட்டோரிக்கோ, தென்னாபிரிக்கா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.[3]
சுக்குராசியா (Chukrasia) சாதி ஒரு தனிவகையானது. முன்னர் அது தனி இனங்களாக வகைப்படுத்தப்பட்ட போதிலும் தற்போது ஒரே இனமாகக் குறிப்பிடப்படுகிறது.[4] "C. velutina" (இந்த இனம்) தாய்லாந்தின் பிரயே மாகாணத்தின் பூவும் மரமும் எனக் குறிக்கப்படுகிறது.[5] இது ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு முக்கிய மருத்துவத் தாவரமாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
- ஆங்கிலம் - Bastard cedar, White cedar, East-Indian mahogany, Indian redwood, Burma almond wood, Chickrassy, Chittagong wood
- இந்தி - சிக்கராசி (चिकरासी)
- மணிப்பூரி - தைமரெங் (তাঈমৰেঙ)
- தெலுங்கு - கொண்டவேப்பம்
- கன்னடம் - கல்கரிகே
- மலையாளம் - சுவன்னக்கில்
- மியான்மர் - யின்மார்பின் (ယင်းမာပင်) (ယင္းမာ)
- வங்காளி - சிக்கராசி
- அசாமியம் - போகா-போமா
- சிங்களம் - ஹுலன்ஹிக்கு (හුලං හික් ) / ஹிரிக்கித்தை (හිරිකිත)[7]
- வியட்டுநாமியம் - Lát hoa
உசாத்துணை
[தொகு]- ↑ Barstow, M. (2018). "Chukrasia tabularis". The IUCN தீவாய்ப்பு இனங்களின் செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2018: e.T32651A68080787. doi:10.2305/IUCN.UK.2018-1.RLTS.T32651A68080787.en. https://www.iucnredlist.org/species/32651/68080787. பார்த்த நாள்: 2019 திசெம்பர் 16.
- ↑ http://www.biotik.org/india/species/c/chuktabu/chuktabu_en.html
- ↑ http://www.worldagroforestry.org/treedb/AFTPDFS/Chukrasia_tabularis.PDF
- ↑ http://www.theplantlist.org/tpl1.1/search?q=Chukrasia The Plant List
- ↑ மாகாண வலைத்தளம் பரணிடப்பட்டது 2012-01-17 at the வந்தவழி இயந்திரம் (Thai)
- ↑ http://www.flowersofindia.net/catalog/slides/Chikrasi.html
- ↑ http://www.instituteofayurveda.org/plants/plants_detail.php?i=818&s=Family_name
வெளித் தொடுப்புகள்
[தொகு]- Chukrasia tabularis A. Juss. - MELIACEAE, biotik.org