விட்டேக்கர் பூனை பாம்பு
விட்டேக்கர் பூனை பாம்பு | |
---|---|
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மலைப் பகுதியில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | போய்கா
|
இனம்: | போ டைட்டோனி
|
துணையினம்: | விட்டேக்கேரி
|
முச்சொற் பெயரீடு | |
போய்கா டைட்டோனி விட்டேக்கேரி கணேசு மற்றும் பலர், 2021 |
போய்கா டைட்டோனி விட்டேக்கேரி (Boiga dightoni whitakeri) அல்லது விட்டேக்கர் பூனை பாம்பு என்பது கொலுப்ரிடே குடும்ப பாம்புச் சிற்றினம் ஆகும். இந்த பாம்பு இரவாடுதல் வகையினையும் மரங்களில் வாழக்கூடியதாகும். இப்பாம்புகள் வரியுடைய பற்களையும் இதன் மூலம் நச்சினைச் செலுத்தும் தன்மையுடையது. இது தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் காணப்படுகிறது.[1]
சொற்பிறப்பியல்
[தொகு]இந்திய ஊர்வன பாதுகாப்பு, கல்வியின் முன்னோடியான புகழ்பெற்ற இந்திய ஊர்வனவியலாளர் உரோமுலசு விட்டேக்கரின் பெயரால் இப்பாம்பு விட்டேக்கர் பூனைப் பாம்பு எனப் பெயரிடப்பட்டுள்ளது.
கண்டுபிடிப்பின் வரலாறு
[தொகு]சமீபத்தில் (2021) தமிழ்நாடு மற்றும் கேரளா மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த போய்கா ஆய்வின் போது இது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இலங்கையில் காணப்படும் மற்றொரு சிற்றினமான இலங்கை பூனை பாம்பான போய்கா சிலோனென்சிசு உடன் இதற்கு நெருக்கமான தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.[2] எனவே இப்பாம்பு புதிய சிற்றினமாக விவரிக்கப்பட்டது. மேலும் இது போய்கா விட்டேக்கேரி என்று பெயரிடப்பட்டது. 2023ஆம் ஆண்டில், இது போய்கா டைட்டோனியின் துணையினமாகக் கருதப்பட்டது.
மாதிரி சிற்றினம்
[தொகு]- நிறைவகை: பா. இ. வ. ச. 3597 (முன்னர் சி. ஈ. எசு. எசு 255) தேவார் மாலா வகை வட்டாரத்தைச் சேர்ந்த முதிர்ச்சியடைந்த ஆண்.
- மூல வகை: பா. இ. வ. ச. 1863. சேகரிப்பு கேரளா எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள புல்லம்பாராவைச் சேர்ந்த கே. ஜி. அடியோதி.
அடையாள அம்சங்கள்
[தொகு]மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் போய்கா பேரினத்தில் 19 நடுத்தர அளவிலான செங்குத்தான செதில்களைக் கொண்டுள்ளது. வாலடிச் செதில்கள் 88 முதல் 98 வரை காணப்படும். பழுப்பு நுரை வண்ண வெளிப்பகுதியில் ஆரஞ்சு குறுக்கு கோடுகள் மங்கலான அடையாளங்களுடன் காணப்படும். வயிற்றுப் புற பக்கவாட்டில் சிறு புள்ளிகள் காணப்படும்.
பரம்பல்
[தொகு]போய்கா டைட்டோனி விட்டேக்கேரி என்பது இரவில் புதர்கள் மற்றும் மரங்களில் தீவிரமாக இரைதேடும் பாம்பு ஆகும். இந்தச் சிற்றினம் தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இது தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில், தேவர்மலை, குற்றாலம், அகத்தியமலை மற்றும் இடுக்கி மாவட்டம், அதாவது முந்தைய எர்ணாகுளம் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ganesh, S.R.; Malik, A.K.; Achyuthan, N.S.; Shanker, K.; Vogel, G. (2021). "A new species of Boiga (Serpentes: Colubridae) from the Southern Western Ghats of India with a molecular phylogeny and expanded characterisation of related species". Zootaxa 4981 (3): 453–457. doi:10.11646/zootaxa.4981.3.2. பப்மெட்:34186711.
- ↑ Ganesh, S.R.; Achyuthan, N.S.; Chandramouli, S.R.; Vogel, G. (2020). "Taxonomic revision of the Boiga ceylonensis group (Serpentes: Colubridae): re-examination of type specimens, redefinition of nominate taxa and an updated key". Zootaxa 4779 (3): 301–322. doi:10.11646/zootaxa.4779.3.1. பப்மெட்:33055775.