விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் உயிரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலைச்சொற் சிக்கல்கள்[தொகு]

இத் திட்டத்துக்குள் அடங்கக்கூடிய பல கட்டுரைகள் ஏற்கெனவே தமிழ் விக்கியில் உள்ளன. எனவே புதிய கட்டுரைகளை எழுத முயலும்போது குறித்த தலைப்புக்களில் கட்டுரைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக, கலைச்சொற்களில் வேறுபாடுகள் இருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. எனவே தலைப்புக்களைத் தவற விடுவதற்கான வாய்ப்புக்களும் அதிகம். ஏற்கெனவே உள்ளவற்றுள் இத்திட்டத்துக்குள் வரக்கூடியவற்றை அடையாளம் கண்டு அவற்றுக்கு வார்ப்புருவை இடுவதன்மூலம் இப் பிரச்சினையை ஓரளவு குறைக்கலாம்.

மயக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில கலைச்சொல் வேறுபாடுகள்:

 • Ecology - சூழ்நிலையியல் / சூழியல்
 • Evolution - கூர்ப்பு / படிமலர்ச்சி
 • Bio-technology - உயிரித்தொழில்நுட்பம் / உயிர்த் தொழில்நுட்பவியல்

மயூரநாதன் 18:34, 19 ஜூலை 2009 (UTC)

திட்டத்தைப் பற்றிய கருத்து[தொகு]

இத் திட்டம் மிகவும் பெரியதாக உள்ளது. அதனால் தவறில்லை, ஆனால் முதல் கட்டத்தில் உள்பகுப்புகள் எவை எவையாக இருக்க வேண்டும் என்றும், அவற்றுள் முதன்மை பெறவேண்டிய அவற்றின் உள்பகுப்புகள் யாவை என்றும் சற்று சிந்தித்துத் தொடங்க வேண்டும். உயிரியலில் அடங்கும் நிலைத்திணை (தாவரம்), விலங்கியல் முதலியவை பல மில்லியன் கட்டுரைகள் இருக்ககூடியன (குறைந்தது பல நூறாயிரம் இருக்கும்). எனவே விலங்கியலில் பறவை என்று ஒரு வகுப்பை எடுத்துக்கொண்டால், அதில் உள்ள பறவை இனங்கள் மட்டுமே 9672 உள்ளன. ஆனால் பறவையியலில் இன்னும் எத்தனையோ உள்துறைகள் உண்டு. இது போலவே பாலூட்டிகள் என்னும் வகுப்பில் 5400 இனங்கள் உள்ளன. பிறகு பூச்சிகள், புழுக்கள், செடிகொடிகள், இப்படி கணக்கில்லாமல் பெருக உள்ளன. எனவே, முதற்கட்டமாக சில குறிக்கோள்களை முன் வைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக பறவைகள் என்றால் அவ்வகுப்பில் உள்ள 27 பேரினங்களில் ஒவ்வொன்றிலும் சற்றேறக்குறைய இவ்வளவு இனங்கள் பற்றிக் கட்டுரைகள் (முதற்கட்டமாக) இருக்க வேண்டும். இப்படியாக ஒரு 200-300 கட்டுரைகள் அல்லது 100-200 கட்டுரைகளை முதலில் தேர்வு செய்து அவற்றை ஆக்க முற்பட வேண்டும். இத் திட்டத்திற்கு மாறாக மூலக்கூற்று உயிரியல் பற்றி மட்டும் 200 கட்டுரைகள் என்னும் புதிய திட்டம் தொடங்கி நிறைவேற்றலாம். மூலக்கூற்று உயிரியலில் பயன்படும் ஆய்வுக் கருவிகள், அவற்றின் அறிவியல் அடிப்படைகள் மட்டுமே 200-500 இருக்கும். மேலோட்டமாக கட்டுரைகள் இருப்பதை விட சற்று ஆழமாக இருப்பது நல்லது. எனவே மூலக்கூற்று உயிரியல் என்னும் விக்கித்திட்டத்தை முதலில் செயல்படுத்தலாம். எடுத்துக் காட்டாக அமினோக்காடிகள் எல்லாவற்றையும் பற்றி கட்டுரைகள் எழுதலாம். டி.என்.ஏ பற்றியும் அது தொடர்பானவற்றைப் பற்றியும் எழுத நிறைய கட்டுரைகள் உள்ளன. உயிரணு கட்டுரையை முதலில் மிகச் செப்பமாகச் செய்ய வேண்டும். எனவே மூலக்கூற்று உயிரியல் என்னும் உள்திட்டத்தை முதலில் செயல்படுத்தலாம் என்பது என் கருத்து.--செல்வா 00:19, 20 ஜூலை 2009 (UTC)

ஆம், இத்துறை மிக மிக விரிவானது. அதனால் ஒரு சில குறிக்கோள்களை மையமாக வைத்து அதை நோக்கிப் பணிகளில் ஈடுபடுவது நல்லது தான். (மூலக்கூற்று உயிரியல் அல்லது இந்திய பாலூட்டிகள் என்பவற்றில் ஒரு பகுப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.) அதே வேளையில் இந்த மையக் கட்டுரைகளைச் சுற்றி விளிம்பில் உள்ள கட்டுரைகளையும் எழுதி வரலாம். இதனால் சலிப்பு தட்டாமல் இருக்கும். மையக் கட்டுரைகளை நாடி வருபவர்கள் இணைப்புகள் வழியாகப் புதிய துறைகளைச் சேர்ந்த கட்டுரைகளையும் சென்றடையும் வண்ணம் இருக்க வேண்டும். (காட்டாக மாந்தவுருபியம் கட்டுரையிலிருந்து மொழி, இலக்கியம், உளவியல், சமயம், உயிரியல் என பல துறைகளைச் சேர்ந்த கட்டுரைகளுக்கு இணைப்பு உள்ளதைப் பாருங்கள்.) -- சுந்தர் \பேச்சு 09:23, 21 ஜூலை 2009 (UTC)
செல்வா நீங்கள் சொல்வது போல் இது மிகப்பெரிய திட்டம். பாதை மாறி போக வாய்ப்புகள் அதிகம்!!! ஆதாலால் நீங்கள் எச்சரித்துள்ள கருத்தை மேற்கொண்டு திட்டத்தை விரிவாக்க வேண்டும். நாம் அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்குகளைக் குறித்து முதலில் கட்டுரைகள் ஆக்கப்போவதில்லை. முதலில் ஆக்கப்படும் கட்டுரைகள்,
 • தமிழகம் மற்றும் இலங்கையில் மிகவும் சாதாரணமாக காணப்படும் தாவரங்கள் மற்றும் விலங்குகள் பற்றிய கட்டுரைகள் - இத்தலைப்புகளில் நான் பெரிதும் எதிர்பார்ப்பது இப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் பெயர்கள் (தோராய எண்ணிக்கை = 200 கட்டுரைகள்)
 • உயிரியல் கோட்பாடுகள் (சுமார் 100 கட்டுரைகள் ஆகலாம்)
 • உயிரியல் அறிஞர்கள் (சுமார் 50 கட்டுரைகள் ஆகலாம்)
 • மூலக்கூற்று உயிரியல் பற்றிய அடிப்படை கட்டுரைகள் (சுமார் 100 கட்டுரைகள் ஆகலாம்)
 • நுண்ணுயிரியல் பற்றிய அடிப்படை கட்டுரைகள் (சுமார் 100 கட்டுரைகள் ஆகலாம்)
 • ஒவ்வாமையியல் பற்றிய அடிப்படை கட்டுரைகள் (சுமார் 50 கட்டுரைகள் ஆகலாம்)
 • உயிர்வேதியல் பற்றிய அடிப்படை கட்டுரைகள் (சுமார் 50 கட்டுரைகள் ஆகலாம்)
 • சூழியல் பற்றிய அடிப்படை கட்டுரைகள் (சுமார் 100 கட்டுரைகள் ஆகலாம்)
விரைவில் கட்டுரைகளில் தலைப்பையும் இட முயல்வேன், ஆதலால் நம் பயண சற்று தெளிவானதாக இருக்கும் :) தங்களின் கருத்துக்கு நன்றி செல்வா--கார்த்திக் 12:00, 21 ஜூலை 2009 (UTC)
ஆம், இப்படித் தெளிவாக வகுத்துக் கொள்வது நல்லது. என் நினைப்பு என்னவென்றால், உயிரியல் என்னும் திட்டத்துக்குள் ஒரு 10-15 தனி உள்திட்டங்கள் இருக்கலாம். விக்கித்திட்டம் மரங்கள் என்பது ஒரு திட்டமாக இருக்கலாம், விக்கித்திட்டம் பறவைகள் என்பது ஒரு திட்டமாக இருக்கலாம், விக்கித்திட்டம் பாலூட்டிகள், விக்கித்திட்டம் மாந்தர் உடற்கூறு (அதற்குள் விக்கித்திட்டம் எலும்புகள்)....இப்படி பல திட்டங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தால், நிறைவேற்றுவதும் எளிதாக இருக்கும். சுந்தர் சொன்னது போல அலுப்பு தட்டாமல் இருக்க பல்வேறு திட்டங்களில் பங்குகொள்ளலாம். இவை எல்லாவற்றிலும் முதல் கட்டமாக இந்தியத் துணைக்கண்ட வகைகளைப் பற்றி எழுதலாம். ஆனால் மூலக்கூற்று உயிரியலில், நுண்ணியிரியல் முதலியவற்றில் பொதுவாக எழுதலாம். முதலில் ஒரு 5-6 திட்டங்களை (ஒவ்வொன்றிலும் 50-60 கட்டுரைகள் என்னும் அளவில்) ஒரே நேரத்தில் முன்னெடுக்கலாம். இவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்பானவையாக இருக்கும். இத் தலைப்புகளில் ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளைப் பட்டியலிட வேண்டும். விக்கித்திட்டம் உயிரியல் 1.0.0, விக்கித்திட்டம் நிலைத்திணையியல் 1.1.0, விக்கித்திட்டம் மரங்கள் 1.1.1, விக்கித்திட்டம் விலங்கியல் 1.2.0, இப்படி..--செல்வா 01:57, 22 ஜூலை 2009 (UTC)

ஆம். சிறிய திட்டங்களாக வகுத்துக் கொள்வது நல்லது. எல்லா உயிரியல் கட்டுரைகளிலும் உயிரியல் திட்ட வார்ப்புரு இடுவது தேவையற்றது. சாத்தியமற்றது. துணைத்திட்ட வார்ப்புருக்களை மட்டும் இடலாம்--ரவி 03:53, 22 ஜூலை 2009 (UTC)

எப்படிப் படிப்படையாய், தாய்-சேய் வகையில் ஒன்றன்கீழ் ஒன்றாக திட்டங்கள் வகுத்து ஆங்கில விக்கியில் செய்கிறார்கள் என்பதை இங்கு பார்க்கலாம். நாமும் இது போலவே தக்க உள்பகுப்புத் திட்டங்களுடன் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். இல்லாவிடில் இது மிகப்பெரிய திட்டமாக, உள்ளொழுக்கம் குறைந்ததாக, வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறு கட்டுரைகள் என்னும் விதமாக அமையக்கூடும். ஒழுங்கான வகைப்பாட்டின் படி திட்டங்கள் செய்தால், ஒவ்வொன்றிலும் சில கட்டுரைகளே இருப்பினும், அவற்றை முறைப்படி வளர்க்க உதவும். --செல்வா 18:22, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

பெரும் பிரிவுகள்[தொகு]

--Natkeeran 02:19, 22 ஜூலை 2009 (UTC)

கலைச் சொற்கள்[தொகு]

சூழியல் என்பது சூழலியல் என்றும் அறியப்பட்டுள்ளது. சூழலியல் என்பதும் சரியா? அதேபோல் வேதியல் என்பதை வேதியியல் எனவும் கொள்ளலாமா? -- கலை

சூழியல் என்பது embryology குறிக்கும் என நினைக்கிறேன்.

மலர்களில் (பெண்) காணப்படும் உள் அமைப்புகளை அச்சூல் ஒட்டுமுறை என படித்துள்ளேன். அதனால் சூழியல் என்பது embryology என்பதையும், சூழலியல் என்பது environmental science என்பதை குறிக்கும் என நினைக்கிறேன். செல்வா போன்ற பெரியவர்கள் இதற்க்கு தக்க விடை தரவும்.

நன்றி

--Munaivar. MakizNan 23:33, 31 ஜூலை 2009 (UTC)

சூழ் என்பதையும் சூல் என்பதையும் குழ்ப்பி விட்டேன்.. அதனால் பொருந்து கொள்ளவும்

--Munaivar. MakizNan 23:54, 31 ஜூலை 2009 (UTC)

Embryology என்பதை தமிழில் முளையவியல் என படித்திருந்தோம். -- கலை

பூனைக்குடும்பம்[தொகு]

பூனைக்குடும்ப விலங்குகளுக்கான தமிழ்ப்பெயர்களை அறிய விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 16:19, 5 ஆகஸ்ட் 2009 (UTC) tiger - வரிப்புலி, வேங்கை, புலி lion - அரிமா, சிங்கம், ஆளி cheetah - சிறுத்தை? leopard - சிவிங்கி? (ஒட்டகச் சிவிங்கிக்கும் இதற்கும் மேல்தோல் pattern தான் ஒற்றுமையா?) panther - jaguar - cat - பூனை civet - புனுகுப்பூனை ...


கட்டுரைகள இயற்றுதலுக்கான வழிமுறைகள்[தொகு]

கட்டுரைகள இயற்றுதலுக்கான வழிமுறைகள் ஒரு பொதுவான வழிகாட்டி. அதை ஒரு தனிப்பக்தில் இட்டு இங்கு இணைப்புத் தரலாம். --Natkeeran 03:14, 6 ஆகஸ்ட் 2009 (UTC)

விக்கிசெய்திகளில் உயிரியல் தொடர்பான கட்டுரைகள், செய்திகள்[தொகு]

பார்க்க: கூடு கட்டும் தவளை. --சிவக்குமார் \பேச்சு 21:21, 7 செப்டெம்பர் 2009 (UTC)

நிலைக்கருசவ்விலி:நிலைக்கருசவ்வுயிரி அல்லது மெய்க்கருசவ்விலி:மெய்க்கருசவ்வுயிரி[தொகு]

Eukaryote என்பதை நாம் மெய்க்கருவுயிரி என்று அழைத்து வந்தோம். மென்சவ்வால் சூழப்பட்ட நிலையான கருவைக் கொண்டிருப்பதனாலேயே இப்பெயரை வழங்கி வந்தோம். நீங்கள் பல இடங்களில் மெய்க்கருவிலி என்ற சொல்லைப் பாவித்திருக்கின்றீர்கள். காரணம் அறியலாமா? கருவிலி என்னும்போது, அது நிலையான கருவற்ற என்பது போன்ற கருத்தைத் தரக் கூடும் என்பதாலேயே கேட்கின்றேன். நன்றி--கலை 11:46, 3 மார்ச் 2011 (UTC)

மதிப்பிற்குரிய கலையவர்களே, இது நான் உங்களுக்கு எழுதும் மூன்றாவது விளக்கக் கட்டுரை. நன்றிகள். ஆனால் ஒரே வருத்தம் நான் கட்டுரையைத் தொகுக்க வேண்டிய நேரமுழுதும் இக்கட்டுரையிலேயே செலவழிக்கிறேன். எல்லாம் ஒரு புரிதலுக்காதத்தான். நன்றிகள். இங்கு நடந்தது என்னுடையத்தவறே. நான் பொருள் உணராது மாற்றிவிட்டேன். மன்னிக்கவும். நான் தமிழில் புலமைக்கொஞ்சம் குறைவு. சீக்கிரத்தில் அது நிறைவாகும்.

மேலும் prokaryote மற்றும் eukaryote என்பது புதுமையும் ஒற்றுமைக்குமான வார்த்தை. இங்கே கேர்யான் என்னும் வார்த்தை கரு என்னும் அர்த்ததைக்குறிக்கும் சொல். இங்கே நான் சொல்ல வருவது இவைகளுக்குள்ள ஒற்றுமையே என்னை அவ்வாறு செய்யத்தூண்டியது. அதே ஒற்றுமையைத் தமிழில் எதிர்ப்பார்க்கிறேன். ஆகையால் நிலைக்கருவிலி மற்றும் மெய்க்கருவிலி என உருவம் கொடுத்தேன். ஆனால் இங்கே தமிழிலும் மொழிமாற்றத்திலும் ஒரு பிழையுள்ளது. நிலை என்பது மெய் என்றப் பொருளைக்குறிக்கும். இது எவ்வாறு சாத்தியமாகும். இயற்கையின் படைப்பில் மெய்யெது. நாம் காணக்கூடிய அனைத்து படைப்புகளுமே மெய். கவனிக்க:- நுண்ணுழையாட்கள் மற்றும் ஆர்கி வகை இரண்டும் தான் நிலைக்கருவிலிக்குள் வரும். இங்கே இவ்வுயிர்களுக்கு இக்கரு மெய். நாம் எவ்வாறு நிலைக்கருவிலி என்றுரைக்கலாம். அதேப்போல் நீங்களே மேலே கூறியிருக்கிறீர்கள்:- கருச்சவ்வு பெற்றிருப்பதால் மெய்க்கருவிலி என அழைக்கிறோமென்று. கரு என்பது nucleus எனப் பொருளாகும். இங்கு எங்கே கருச்சவ்வு சொல்லப்பட்டிருக்கிறது. நிலைக்கருவிலி என்றால் நிலையான கருவில்லை என்று பொருள் படும். அப்போது அவை மாற்றம் பெற்றுக்கொண்டிருக்கிறதே என்று பொருள் கொள்ளவேண்டும் (pleomorphic nucleus) என்ற புதிய சொல்லின் பொருளாக்கம் இவை. இங்கே சவ்வை முன்வைப்பது தான் தலையாயப் பிறிவிற்கே காரணம். அதை உணர்த்தாமல் நாம் கருவை இருக்கு இல்லை என்பது போன்று கூறினால் எவ்வாறு சாத்தியமாகும்.

1. நிலைக்கருசவ்விலி:மெய்க்கருசவ்வுயிரி (prokaryote:eukaryote)
2. நிலைக்கருசவ்விலி:நிலைக்கருசவ்வுயிரி
3. மெய்க்கருசவ்விலி:மெய்க்கருசவ்வுயிரி

ஆகிய பெயர்கள் சரியாக வருமென்று பரிந்துரைக்கிறேன். இவ்விக்கிப்பீடியாவின் பல அம்சம்கள் எனக்குத் தெறியாது. அதான் என் தகவல் தொடர்புகளில் கொலருபடிகள். எனது கட்டுரையில் மேலும் இத்தவறு நடவாமல் பார்த்துக்கொள்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. மேலும் நீங்கள் சொன்ன குழுவில் இன்றே இணைவதற்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்கிறேன். நன்றிகளுடன் - --சிங்கமுகன் 13:53, 3 மார்ச் 2011 (UTC) உங்களை இங்கே அதிகமாக எழுத வைத்ததற்கு வருந்துகின்றேன். ஆனாலும் நீங்கள் கூறியவாறு ஒரு புரிதலுக்காக சிலவற்றை எழுத வேண்டியுள்ளது. எனது புரிதல் எவ்வாறு உள்ளது என்பதையும் கூறிவிடுகின்றேன்.

முதலில் கலங்களில் காணப்படும் கரு என்பதன் வரைவிலக்கணத்தைப் பார்த்தோமானால், மென்சவ்வினால் வரையறைப்படுத்தப்பட்ட, பாரம்பரிய மூலக்கூறுகளை உள்ளடக்கிய ஒரு அணு உள்ளமைப்பு. In cell biology, the nucleus (pl. nuclei; from Latin nucleus or nuculeus, meaning kernel) is a membrane-enclosed organelle found in eukaryotic cells. The prokaryotes (pronounced /proʊˈkæri.oʊts/ or /proʊˈkæriəts/) are a group of organisms that lack a cell nucleus (= karyon), or any other membrane-bound organelles. எனவேதான் Prokaryote க்களில் 'கரு' என்ற அமைப்பு எதுவும் வரையறை செய்யப்பட்டிருக்கவில்லை என்பதால், கருவற்றவை எனக் கருதி நிலைக்கருவிலி எனக் கூறுகின்றோம். Eukaryote க்கள் கருவைக் கொண்டிருப்பதனால் மெய்க்கருவுயிரி என அழைக்கின்றோம்.--கலை 14:36, 3 மார்ச் 2011 (UTC)
கரு என்பது மையம் அவை நிலைக்கருவிலிகளுக்குள்ளும் இருக்கிறது - மெய்க்கருவுயிரிகளுக்கும் இருக்கிறது. பகுத்தலின் முக்கிய நோக்கம் - கருச்சவ்வு என்பதாகும். ஆராய்க.

மேலும், ஆங்கிலத்தில் ஒரு வகையில் பிழை இன்னொரு வகையில் நியாயம். Prokaryote - first formed nucleus - என்பதே பொருள் Eukaryote - true nucleus - என்பதே பொருள்:- உணர்க. pro - first; before என்கிற பொருள்; eu - true என்ற பொருள். விளக்கம் ஆங்கில் விக்கிப்பீடியாவிலேயே உள்ளது. இவர்கள் கரு இல்லை என்ற வாதத்தையே முன்வைக்கவில்லை. ஆகையால், அவர்கள் தப்பித்துக்கொண்டார்கள். நாம் முன்தோன்றிகள். எதிலும் ஒரு முன்னுதாரணம். ஆகையால், சவ்வு என்பதை உள்ளடக்கி உருவாக்குவதே சரி. மேலும் ஐயங்களுக்கு தயங்காமல் கேள்வி எழுப்புங்கள். என் மொழியைக் கற்றவர்கள் அறியாதவர்களாகவே இருக்கக்கூடாது. மேலே நான் குறிப்பிட்டுள்ளதில் 2 மற்றும் 3 வது பொருள் வார்த்தை ஒற்றுமை பொறுள் வேற்றுமையை உணர்த்தும். ஆகையால், அது இரண்டில் ஏதாவது ஒன்றை உறுதிப்படுத்தி அனைவரையும் கலந்து ஆலோசித்து தீர்மாணம் இயற்றுவோம். இனி மாறுதலுக்கே வழியில்லை. நன்றிகளுடன். --சிங்கமுகன் 17:15, 3 மார்ச் 2011 (UTC)

இது எனக்கும் மதிப்பிற்குரிய கலை அவர்களுக்கும் நடந்த உரையாகும். அவர் அனுமதியின்றி இங்கு இட்டது என் தவறாகும். மன்னிக்கவும் மரியாதைக்குரிய கலை. இச்சிக்கலைத் தீர்த்துவைக்க அனைவரும் முன்வாருங்கள். எவ்வித ஐயமாயினும் முன்வையுங்கள் அது தீர்த்துவைக்கப்படும். நன்றிகள். --சிங்கமுகன் 17:22, 3 மார்ச் 2011 (UTC)

கலைச்சொல்லாக்க வேண்டுகோள்[தொகு]

நான் ஏற்கனவே உதவி கோரி இருந்தேன். உயிர் என்பதற்கு வேறு சொற்கள் தேவை. எக்காரணம் கொண்டும் எனது கட்டுரைகளில் உயிர் என்ற வார்த்தை பொருந்திய கலைச்சொல்லாக்க கட்டுரைகள் அமையாத படி பார்த்துக்கொள்வேன்.

-

இப்போது இன்னொரு உதவி தமிழ் நண்பர்களுக்கு, முதல் என்ற வார்த்தைக்கும் வேறு சொற்கள் தேவை. கலைச்சொல்லாக்கம் விரைவாக நடைபெறவேண்டும். உதவுங்கள்.

ஆர்க்கியா - என்பது தோற்றம்/தொடக்கம்/முதல்/பழைய என்ற பொருளைக்குறிக்கும். இவை நுண்ணுழையாட்களிலிருந்து (பாக்டீரியா) மாறுபட்ட நுண்ணுயிரி. இவை மெய்க்கருவிலிகள் மற்றும் நிலைக்கருவிலிகளிலிருந்து மாறுபட்டதால் இவை ஆர்க்கியா என்னும் புதுக்கிளைகளில் கார்ல் ஊச் என்பவர் இதை உயிர்களில் தனிக்கிளையாகவே பிரித்துள்ளார். இவைகள் நுண்ணுழையாட்களைப் போன்று கலக்கரு அற்றவைகளாக இருந்தாலும் இவை தனி நுண்ணுயிரி இனத்தைச் சாறும். ஏனென்றால் அப்பண்பைத்தவிர வேறு எந்தப்பண்பும் ஒத்துவராது. இவை பெரும்பாலும் உச்ச விரும்பிகளாக (Extremophiles) இருக்கின்றன. ஆகையால் இவைகளுக்குப் பெயர் பரிந்துரை செய்யுங்கள். என்னுடைய பரிந்துரைகள்.

 • வாழ்தோன்றி
 • பழயுயிரி
 • நுண்ணுச்சவாழி
 • தோன்றின்நுண்ணுழையாட்கள்
 • விசித்திரநுண்ணுழையாட்கள்
 • பழைநுண்ணி

மேலும் இருந்தால் தெறியப்படுத்துகிறேன். கட்டுரைத்தயார் நிலையில் உள்ளது. விரைந்து செயலாற்றுங்கள். பெயர்பரிந்துரை செய்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். ’கௌ’ முதல் ‘னௌ’ வரை ஞு, ஞூ, ஙு, ஙூ ஆகிய பயனற்றுக்கிடக்கும் தமிழெழுத்துக்கள் கலைச்சொல்லாக்கத்தில் இணைத்தால் அவை காலத்தால் சிதைவுறாமல் காக்க முடியும். தமிழன்னை எழுச்சியுறுவாள். உதவுங்கள். நீங்கள் இல்லையேல் வெறுயாறுண்டு நம் அன்னையைக் காக்க. இது என் சிறம் தாழ்ந்த வேண்டுகோள். இவைகள் கலந்த வார்த்தைகளை யார் வேண்டுமானாலும் எனது மின்னஞ்சல் முகவரியில் (augustusleo13@gmail.com) தொடர்புக்கொண்டுத் தெறிவிக்கலாம்.

இணைந்து வாருங்கள். அழிக்க சிதைக்க ஷிங்கலவன் இல்லை உலகமே வந்தாலும் “நாம் நிற்போம் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு நிலைக்கும் குடி என் மறக்குடி என்று”. உதவுங்கள். எனக்குப் பொது வேண்டுகோள் எவ்வாறு வைப்பதென்று தெறியவில்லை. ஆகையால் இதை வாசிப்போர்.எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் படி செய்யுங்கள். வாழ்வே தமிழாக, நன்றிகளுடன் --சிங்கமுகன் 12:28, 3 மார்ச் 2011 (UTC) நன்றிகளுடன் - --சிங்கமுகன் 18:33, 3 மார்ச் 2011 (UTC)

தமிழறிவியல் பயனர் பரிந்துரை[தொகு]

பரிந்துரை :- இங்கே நோயெதிர்ப்பாற்றலியலை ஒருத் துறையாக உருவாக்குங்கள். இப்படிக்கு தமிழறிவியல்

Genome தமிழில்[தொகு]

 • "மரபகராதி" என்று Genome தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு "அகர" வரிசை முதன்மை பெறுவது போலவும் இது ஏதோ ஒருவிதமான அகராதியோ என்றும் தோன்றுவதால் "மரபுத்தொகை" என்று மாற்றினால் நலம் என்று கருதுகிறேன். "தொகை" என்னும் சொல் தமிழ் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றது. எட்டுத்தொகை, குறுந்தொகை என்னும் சொல்லாடல் தவிர, வள்ளுவரும் "சொல்லின் தொகை" (குறள் 711), "நூலோர் தொகுத்தவற்றுள்" (குறள் 312) என்றெல்லாம் கூறுவதைக் கருத்தில் கொள்ளலாம்.

அதுபோலவே human genome project என்பதை "மனித மரபுத்தொகைத் திட்டம்" என்று மாற்றலாம்.--பவுல்-Paul 12:21, 27 மே 2011 (UTC)

நீங்கள் சொல்வதுபோல் அகராதி என்ற சொல் பொருந்தவில்லை என்றே எனக்கும் தோன்றியது. ஆனால், ஏற்கனவே மரபகராதி என இருந்தமையால், அப்படியே நானும் குறிப்பிட்டேன். எவரும் மறுப்புத் தெரிவிக்கவில்லையாயின் நீங்கள் கூறுவதுபோல் மரபுத்தொகை மாற்றி விடுகின்றேன். மேலும் விக்சனரியில் மரபுரேகை, மரபுப்பதிவு என்ற சொற்களும் உள்ளன. அவற்றையும் கருத்தில் எடுத்து, எது மிகவும் பொருத்தமான சொல்லாக இருக்கும் என்பதைக் கூறினால், அவ்வாறே மாற்றி விடலாம்.--கலை 13:23, 27 மே 2011 (UTC)
 • "ரேகை", "பதிவு" என்னும் சொற்கள் "தொகுப்பு" (பல தகவல்களை ஓரிடத்தில் கூட்டி இணைத்தல்) என்னும் பொருளை நேரடியாகத் தராததால் "தொகை" என்பது அதிகப் பொருத்தம் எனக் கருதுகிறேன். --பவுல்-Paul 13:50, 27 மே 2011 (UTC)
சிறு அவகாகம் தரவும். விரிவாகப் பதில் தருகிறேன். --Natkeeran 17:39, 27 மே 2011 (UTC)

உதவி[தொகு]

இத்திட்டத்தில் உள்ள யாராவது பயாலஜிக்கல் லைஃப் செக்கிள் en:Biological life cycle பற்றி கட்டுரை ஒன்று எழுதுமாறு வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் 08:59, 7 திசம்பர் 2011 (UTC)

புதிய கட்டுரை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தகவல்களை சிறிது சிறிதாக இணைக்கின்றேன்.--கலை 14:31, 7 திசம்பர் 2011 (UTC)

இத்திட்டத்தில் உள்ள யாராவது en:MBBS பற்றி கட்டுரை ஒன்று எழுதுமாறு வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் 14:52, 17 திசம்பர் 2011 (UTC)

தற்போதைக்கு இளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவையியல் (இந்தியா)‎‎ என்று ஒரு கட்டுரை துவங்கப்பட்டுள்ளது. ஆனால் இது பெரும்பாலும் இந்தியாவில் வழங்கப்படும் மருத்துவப் பட்டப் படிப்பை பற்றியே உள்ளது. தனியாக எம்பிபிஎஸ் என்ற கட்டுரை துவங்கப்பட வேண்டும்.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 18:50, 17 திசம்பர் 2011 (UTC)

பட்டாம்பூச்சி[தொகு]

பட்டாம்பூச்சிகள் பற்றிய கட்டுரைகளை எழுத விரும்புகிறேன். அவற்றின் பெயர்களை தமிழில் எப்படி எழுதுவது? எ.கா: Smooth-eyed Bush-brown (Orsotriaena medus mandata) --Anton (பேச்சு) 01:43, 13 சூன் 2012 (UTC)

திட்ட மேலாண்மை[தொகு]

இத்திட்டத்தின் கீழ் வரும் அனைத்துக் கட்டுரைகளையும் ஒரே இடத்தில் பார்க்க பகுப்பு / பட்டியல் உள்ளதா? இது தமிழ் விக்கிப்பீடியாவின் மிகப் பெரிய திட்டமாக வளர்ந்து வருகிறது. இதனை தாவரங்கள், பறவைகள், விலங்குகள் போன்ற பெரும் துணைப் பகுப்புகளாகப் பிரிப்பது உதவுமா? இதில் இடம்பெற்ற சில கட்டுரைகள் விக்கித்திட்டம்:மருத்துவம் பிரிவுக்கு நகர்ந்துள்ளதைக் காணலாம்--இரவி (பேச்சு) 05:19, 20 செப்டெம்பர் 2012 (UTC)

விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தாவரங்கள்[தொகு]

w:en:Category:Articles with 'species' microformats என்ற பகுப்பிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள், உயிரியல் வகைப்பாட்டியல் பெயர்களைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன. நம் தமிழ்விக்கிப்பீடியாவிலும் இதுபோன்ற கட்டுரைகளை உருவாக்க எண்ணியுள்ளேன். மாற்றுக் கருத்து இருப்பவர்கள் கருத்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். --≈ உழவன் ( கூறுக ) 18:56, 9 ஆகத்து 2013 (UTC)

 • Acrocarpus fraxinifolius என்ற கட்டுரையை, மேற்கூறியப் பகுப்பின், மாதிரிக் கட்டுரையாக அமைத்துள்ளேன். கருத்திடவும். --≈ உழவன் ( கூறுக ) 14:11, 11 செப்டம்பர் 2013 (UTC)