விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வழிகாட்டுதல்களில் முகமது அலியின் ஒரு கேள்வியை இட்டால் பொருத்தமாக இருக்கும். அவர், யானை, புலி இரண்டையுமே இயற்கையில் கொண்டிராத பகுதியிலுள்ள ஆங்கிலத்தில் இவற்றைப் பற்றிப் படிக்கிறோம். ஆனால், இவற்றை நெடுங்காலமாக தமிழ்நாட்டில் கண்டு பல பொருத்தமான பெயர்கள் சூட்டியிருந்தும் இவற்றைப் பற்றி இந்நாளில் தமிழில் ஏன் எழுதவோ படிக்கவோ செய்யவில்லை என்பது போன்ற ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதன் உரை சான்றுடன் இருந்தால் சேர்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 19:57, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

இப்பொழுதுள்ள இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகளின் பட்டியலைத் தொகுக்க வேண்டும்[தொகு]

கார்த்திக், இதுவரை எழுதப்பட்டுள்ள இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகளின் (1) பட்டியலை தொகுக்க வேண்டும். (2)அவற்றின் தரமும் ஓரளவுக்கு தேர்தல் வேண்டும். (3) பின்னர் எவ்வெவ் விலங்குகள் பற்றி முதலில் எழுதவேண்டும் என்றும் பட்டியல் இட வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலாக பாலூட்டிகள் என்றால் என்ன? அறிவியலில் இவை எவ்வாறு விளக்கி வகைப்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றி சற்று விரிவாக எழுதுதல் வேண்டும். இப்பொழுதுள்ள பாலூட்டி என்னும் கட்டுரை போதாது (இதனைப் பெரிதும் விரிவாக்க வேண்டும்).--செல்வா 20:39, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

ஆம் செல்வா முதலில் பாலூட்டி கட்டுரையை பெரிதும் விரிவாக்க வேண்டும். இதன் ஆங்கில கட்டுரையை பார்த்தேன், அதைகாட்டிலும் நன்றாக ஆக்க வேண்டும். இதில் மேலிருந்து கீழ் நோக்கத்தில் ஈடுபட வேண்டும் என்பது என் கருத்து.

1.பாலூட்டி 2.வகுப்புகள் - அதன் உறுப்பினர்கள் 3.வரிசை - அதன் உறுப்பினர்கள் 4.குடும்பம் - அதன் உறுப்பினர்கள் 5.துணைக் குடும்பம் - அதன் உறுப்பினர்கள் 6.பேரினம் - அதன் உறுப்பினர்கள் 7.சிற்றினம் - அதன் உள் உறுப்பினர்கள் இப்போது வார்ப்புரு:இந்திய_பாலூட்டிகள் வார்புருவில் 2ஆம் கட்டத்தில் உள்ளோம். பிறகு ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் ஒவ்வொரு வார்ப்புரு என கீழ்நோக்கி போய்கொண்டே இருப்போம். அதே சமயத்தில் 7ஆம் கட்டம் தன்னிச்சையாக ஒவ்வொரு விலங்குகள் கட்டுரைகளால் வளர்ந்துவரும் (எ.கா நீலான்). 7ஆம் கட்டத்தில் இரண்டு நடவடிக்கைகள் உள்ளது ஒன்று புதிய கட்டுரை எழுதுவது இரண்டாவது ஏற்கனவே உள்ள கட்டுரைகளை புதிய வடிவமைப்பிறகு கொனர்தல். அனைவரின் கருத்துக்களும் வரவேற்க்கப்படுகிறது.--கார்த்திக் 21:01, 3 ஆகஸ்ட் 2009 (UTC)

காரணம்[தொகு]

இந்தியாவில் எத்தனையோ வகையான விலங்குகள் இருக்கையில், பாலூட்டிகளுக்கு மட்டும் தனித்திட்டம் தொடங்கியதிற்கு ஏதேனும் சிறப்புக்காரணம் உண்டா? அறிந்து கொள்ள ஆவல்.--தென்காசி சுப்பிரமணியன் 18:01, 29 ஆகத்து 2011 (UTC)

. ஒரு குறிப்பிட்ட தலைப்பினைப் பற்றிய கட்டுரைகளைத் தொகுப்பதை ஒருங்கிணைக்கும் இடமே விக்கித் திட்டப் பக்கம். பயனர்கள் ஆர்வப்பட்டால் எந்த தலைப்பிலும் விக்கித்திட்டம் தொடங்கலாம்--சோடாபாட்டில்உரையாடுக 19:04, 29 ஆகத்து 2011 (UTC)

Sodabottle, நன்றி--தென்காசி சுப்பிரமணியன் 19:35, 29 ஆகத்து 2011 (UTC)

வேங்கைத்திட்டம் 2.0[தொகு]

@Karthickbala, செல்வா, SivakumarPP, MakizNan, பரிதிமதி, தகவலுழவன், மற்றும் Jey:

வேங்கைத்திட்டத் தலைப்புகளில் இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகள் தொடர்பான கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுவோம். அதன்மூலம் இரண்டு திட்டங்களும் வளரும். தலைப்புகளை இங்கே காணலாம். -- சுந்தர் \பேச்சு 11:42, 31 அக்டோபர் 2019 (UTC)

  • பட்டியல் தாருங்கள். அதோடு கட்டற்ற தரவுகள் உள்ள, பத்தாண்டுகளுக்கும் மேலாக பலரால் உழைத்து உருவாக்கப் பட்ட கலைக்களஞ்சியத் தொகுப்புகளில் இருந்து முதலிலும், பிறகு ஆங்கிலவிக்கியில் இருந்தும், பொதுவகத்தில் இருந்தும், விக்கியினங்களில் இருந்தும், அதோடு தேவையான மாற்றங்களை விக்கித்தரவிலும் பங்களிக்கிறேன். ஆனால், கட்டற்ற பனுவல் குறித்த புரிந்துணர்வும், படிநிலையான வளர்ச்சிகளை குறித்த தெளிவின்மையும் தற்போது கட்டுரைகளை உருவாக்குவதில் தடைகளாக உள்ளன. ஆய்வேடுகளைப் போல ஒவ்வொன்றுக்கும் சான்றுகளை சக விக்கியர் எதிர்பார்ப்பதால், எனக்கு தயக்கம் ஏற்படுகிறது. இதுவரை அக்கலைக்களஞ்சியத்தின் வழி உருவாக்கிய கட்டுரைகளைக் கண்டு வழிகாட்டவும். பல புதிய பெண் பயனர்களை அழைத்து வர இக்கொள்கை முடிவு அடித்தளமானது. ஆவலுடன்..--உழவன் (உரை) 14:30, 31 அக்டோபர் 2019 (UTC)
    • நன்றி, தகவலுழவன். இங்குள்ள பட்டியலில் எனது பெயருக்குக்கீழே சிலவும் திவ்யாவின் பெயருக்குக் கீழே குளம்பிகள் எனும் தலைப்பும் உள்ளன. கூகுள் கட்டுரைகளிலும் சில தலைப்புகள் இருக்கும். பிறகு பார்க்கிறேன். என்னிடம் விவேக் மேனனின் இந்தியப் பாலூட்டிகள் நூல் உள்ளது, ஆகையால் சான்றுகளைச் சேர்க்கவியலும். -- சுந்தர் \பேச்சு 16:53, 31 அக்டோபர் 2019 (UTC)
      • காட்டுப்பன்றியை, ஏற்காடு இளங்கோ விரிவாக்கம் செய்துள்ளார். திவ்யா விரைவில் குளம்பிகள் செய்து முடிப்பார். பட்டியல் தந்தால் எனக்கு இன்னும் சில நண்பர்களை ஈடுபடுத்த இயலும். தொடர்ந்து உருவாக்கிய கட்டுரைகளைக்கு விவேக் மேனனின் நூலோதியைத் தாருங்கள். அது வளரவிருக்கும் கட்டுரைகளுக்கு இன்னும் உதவியாக இருக்கும். --உழவன் (உரை) 01:52, 3 நவம்பர் 2019 (UTC)
      • காட்டுப்பன்றி;குளம்பிகள் கலைக்களஞ்சிய தரவுகளில் இருந்தும், ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்தும் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பேச்சுப்பக்கத்தில், பின்னூட்டமும், பிற பாலூட்டிகள் குறித்த பட்டியலும் எதிர்நோக்குகிறேன்.