விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/பண்பாட்டுச் சுற்றுலா
தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 28, 29 ஆகிய நாட்களில் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறும். முதல் நாளான செப்டம்பர் 28 அன்று பண்பாட்டுச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்கிறோம். இதில் சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரம் அல்லது காஞ்சிபுரம் சென்று வரலாம். நேரம் கிடைத்தால் சென்னையில் உள்ள பண்பாட்டு முக்கியத்துவம் உள்ள சில இடங்களைப் பார்க்கலாம். இதற்காக 50 பேர் வரை செல்லக்கூடிய ஒரு பேருந்து ஏற்பாடு செய்ய முனைந்து வருகிறோம்.
பண்பாட்டுச் சுற்றுலாவுடன் இணைந்து விக்கிப்பீடியர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி, வருங்காலம் பற்றி திறந்த நிலையில் ஆழ்ந்த உரையாடல்களை மேற்கொள்வதும் ஒரு முக்கிய நோக்கமாக இருக்கும். இது ஒரு வகையில் தமிழ் விக்கிப்பீடியர் அணியை வலுவூட்டும் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் (team building and informal brainstorming) எனவே, தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே முனைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிற, பல நோக்குப் பார்வைகளைத் தரக்கூடியோர் மட்டும் இந்நிகழ்வில் பங்கு கொள்வதே சிறப்பாக இருக்கும். எனவே, இதற்கான அழைப்பு உள்ளோர் மட்டும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு செய்வதே சரியாக இருக்கும். ஞாயிறன்று உள்ள நிகழ்வு போல் திறந்த அழைப்பாக அழைக்க முடியாது. அவ்வாறு செய்வதில் பேருந்து வசதி போன்ற நடைமுறைச் சிக்கல்கள் தவிர, மேலே குறிப்பிட்டுள்ள நோக்கமும் நீர்த்துப் போகும்.
இந்நிகழ்வை எப்படித் திறம்பட ஒருங்கிணைக்கலாம் என்பது குறித்த கருத்துகளை வரவேற்கிறேன். இந்நிகழ்வை "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" (invite-only) என்ற முறையில் செய்வதற்கான ஒப்புதலைக் கோருகிறேன். 50 பேர் வரை செல்லலாம் என்பதால் முனைப்பான விக்கிப்பீடியர்கள் எவரும் விட்டுப் போக மாட்டார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.--இரவி (பேச்சு) 22:35, 11 செப்டம்பர் 2013 (UTC)
- மாற்றுக் கருத்துகள் ஏதும் வராததால், இந்நிகழ்வை "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற முறையில் நடத்த முடிவு செய்கிறோம். 52 பேர் செல்லக்கூடிய பேருந்து கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த வார இறுதியில் அதனை உறுதி செய்து விட்டு, உரியவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். கூடல் நிகழ்வுக்கான திட்டமிடலில் இரு நாட்களும் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்த 90%+ பேருக்கு அழைப்பு விடுக்க முடியும். விக்கிப்பீடியா பங்களிப்பை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பல்வேறு பின்னணிகளில் இருந்து கருத்துகளையும் வருங்காலத்தில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பளிப்பவர்களுக்கும் அழைப்பு விடுக்க எண்ணியுள்ளேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:13, 17 செப்டம்பர் 2013 (UTC)
- நானும், வி. பி. மணிகண்டனும் வரும் அனந்தபுரி விரைவுத் தொடருந்து 28-09-2013 அன்று காலை 8.45க்குதான் சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் வந்து சேர்கிறது. எனவே சுற்றுலாப் பயணத் தொடக்க நேரத்தை மாற்ற இயலுமா?--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 10:31, 17 செப்டம்பர் 2013 (UTC)
- நிகழ்வு இடத்துக்கு அருகே அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளது. அடுத்து சென்னைக்குள்ளேயே வேறு ஏதாவது இடத்தைப் பார்க்க பயனர்கள் விரும்பினால் அங்கு சில மணித்துளிகள் செலவழிக்கலாம். இதன் மூலம் உங்களைப் போன்று வரும் அனைவரையும் பொறுத்திருந்து சென்னையின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து அழைத்துச் செல்ல முடியும். அனைவரும் இணைந்து கொண்ட பிறகு மாமல்லபுரம் நோக்கிச் செல்வோம். --இரவி (பேச்சு) 10:59, 17 செப்டம்பர் 2013 (UTC)
நிகழ்ச்சி நிரல்
[தொகு]28 செப்டம்பர் சனி காலை 10 மணிக்குக் கிளம்பி மீண்டும் இரவு 8 மணிக்கு அறைகளுக்குத் திரும்புமாறு திட்டமிடலாம். சென்னை - > மாமல்லபுரம் - > சென்னை என்பது என் பரிந்துரை. ஏனெனில், மாமல்லபுரம் ஒரு உலக மரபுச் சின்னம். போய் வரும் கடற்கரைச் சாலை எழிலாக இருக்கும். கடற்கரை வெளியும் சிறு உரையாடல்களுக்கு ஏற்றாக இருக்கும். இது போக போய் வரும் வழியில் வேறு ஏதேனும் முக்கிய இடங்கள் இருந்தால் முன்கூட்டியே பரிந்துரைத்தால் அதற்கு ஏற்றவாறு திட்டமிடலாம். நிகழ்வு இடத்துக்கு அருகேயே சென்னை அண்ணா நூறாண்டு நூலகம் உள்ளது. அதனையும் சில மணித்துளிகள் பார்வையிடலாம்.--இரவி (பேச்சு) 08:44, 17 செப்டம்பர் 2013 (UTC)
- மாமல்லபுரமே எனது விருப்பமும். ---மயூரநாதன் (பேச்சு) 10:28, 17 செப்டம்பர் 2013 (UTC)
- மாமல்லபுரம் சிறந்த தேர்வு. ஆனால் முதல்நாள் 10 மணியிலிருந்து இரவு 8 மணிவரை என்பது ஒருங்கிணைப்பாளர்களுக்கு அயர்ச்சியாக இருக்கலாம். நெடுந்தூரத்திலிருந்து வந்தவர்களுக்கும் இறுக்கமாக இருக்கலாம். முற்பகலில் பதிதல், அறிமுகம் போன்றவற்றிற்குப் பயன்படுத்தினால் சற்று நெகிழ்ச்சி கிடைக்கும். உணவிற்குப் பிறகு மதியம் 1400 மணிக்குக் கிளம்பி நேராக மாமல்லபுரம் சென்று சிற்பங்களைப் பார்வையிடலாம். 1700 மணிக்குப் பிறகு கடற்கரையோரத்தில் கூடி உரையாடலாம். வரும்வழியில் கேளிக்கை கூடங்களையும் பார்க்கலாம். எனவே 1400-2200 என பேருந்து முன்பதிவு செய்வது சரியாக இருக்கும் என்பது எனது துணிபு.--மணியன் (பேச்சு) 12:11, 17 செப்டம்பர் 2013 (UTC)
- //10 மணியிலிருந்து இரவு 8 மணிவரை என்பது ஒருங்கிணைப்பாளர்களுக்கு அயர்ச்சியாக இருக்கலாம். நெடுந்தூரத்திலிருந்து வந்தவர்களுக்கும் இறுக்கமாக இருக்கலாம். //
- விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:19, 17 செப்டம்பர் 2013 (UTC)
- முக்கியமான விசயத்தைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. அதற்கு ஏற்றவாறு சற்று காலம் தாழ்த்திப் புறப்படுவதோடு நிறைய ஓய்வும் இருப்பது போல் பார்த்துக் கொள்கிறோம்.--இரவி (பேச்சு) 12:15, 17 செப்டம்பர் 2013 (UTC)
- //10 மணியிலிருந்து இரவு 8 மணிவரை என்பது ஒருங்கிணைப்பாளர்களுக்கு அயர்ச்சியாக இருக்கலாம். நெடுந்தூரத்திலிருந்து வந்தவர்களுக்கும் இறுக்கமாக இருக்கலாம். //
- மாமல்லபுரம் கலையை ரசிப்பவர்களுக்கு சரியான தேர்வு. இரண்டு மூன்று முறை பயணம் செய்தவர்களே நிறைய இடங்களைப் பார்க்கத் தவறிவிடுகின்றனர். அத்துடன் மாமல்லபுரத்திலிருக்கும் சிற்பங்களை காணுதலுடன் அதனைப் பற்றியும் அறிந்து கொண்டால்தான் ரசித்தல் சாத்தியமாகும். இவையன்றி அண்ணா நூலகம், கன்னிமாரா நூலகம், அரசு அருங்காட்சியகம் போன்றவற்றை காண கற்றோர்கள் விருப்பப்படுவார்கள். இருப்பினும் இவைகளை முழுவதுமாக காண ஒரு நாள் முழுவதும் தேவையுரும். சென்னை வெயிலில் மாமல்லபுரத்தில் அதிக தூரம் நடைக்க வேண்டியிருக்கும் என்பதால் அதனையும் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். மாமல்லபுரத்தில் எவற்றையெல்லாம் காணப்போகிறோம், அவற்றின் பெருமை என்ன? என்பதோடு திட்டமிடலும் அவசியமாகிறது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:40, 17 செப்டம்பர் 2013 (UTC)
- மாமல்லபுரத்தில் சுற்றுலா வழிகாட்டிகள் கிடைப்பார்கள் எனில், அவர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வோம். இத்துறையில் ஆர்வமுள்ள பயனர்கள் முன்பே இது குறித்து அறிந்து வந்து ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டாலும் சரி.--இரவி (பேச்சு) 09:11, 18 செப்டம்பர் 2013 (UTC)
மாமல்லபுர மரபுச்சின்னங்கள் - இதில் வரும் அனைத்தும் யுனெசுக்கோ இந்திய பாரம்பரிய சின்னங்கள். சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில் தமிழகத்தின் மிகப்பழைய கோயிலில் ஒன்று. பார்க்க அனுமதி கிடைக்குமா எனத் தெரியவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:21, 18 செப்டம்பர் 2013 (UTC)
- மாமல்லபுரத்தில் சில் பகுதிகளுக்குள் செல்வதற்கும், ஒளிப்படம், நிகழ்படங்கள் எடுப்பதற்கும் கட்டணம் உண்டு என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். ---மயூரநாதன் (பேச்சு) 07:46, 19 செப்டம்பர் 2013 (UTC)
சட்டமன்ற வளாகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டை, கோட்டை அருங்காட்சியகம் போன்றவையும் முடிந்தால் செல்லலாம். இவையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்ல 2:00 மணி நேரம் ஆகும். மேலும் மாலை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே செல்ல வேண்டும் பின்மாலை நேரத்தில் அங்கிருக்க அனுமதியில்லை என்பதையும் கவனத்தில் கொண்டு நேரத்தைத் திட்டமிடலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:01, 19 செப்டம்பர் 2013 (UTC)
முற்பகலில் ஒரு பகுதியாக அடையாறு ஆலமரத்தடி கூட்டம் நடத்தலாம்--ஸ்ரீதர் (பேச்சு) 16:31, 23 செப்டம்பர் 2013 (UTC)
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளவர்கள்
[தொகு]நிகழ்வில் கலந்து கொள்ள முன்பே விருப்பம் தெரிவித்திருந்தவர்கள், கலந்து கொள்ள விருப்பம் ஆனால் உறுதி இல்லை என்று கூறியிருந்தவர்களில் 95%+ பேருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். இது போக, நிகழ்வு பற்றி தெரியாதிருக்கக்கூடிய பல்வேறு முன்னாள், தொடக்க கால, முனைப்பான பங்களிப்பாளர்கள் என்று மொத்தம் 100+ பேருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். யாரேனும் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளருக்கு அழைப்பு விடுபட்டிருந்தால் தெரிவியுங்கள். இவர்கள் போக, இந்திய விக்கிமீடியா கிளையின் மேலாளரும், CIS-A2K அமைப்பின் இயக்குநரும் தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தை அறிந்து கொள்ளும் நோக்கில் நம்முடன் இணைந்து கொள்வார்கள். இன்னும் சில பிற மொழி விக்கிப்பீடியர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன். எனினும், அவர்கள் கலந்து கொள்வது இன்னும் உறுதி இல்லை. எல்லாரும் கலந்து கொண்டால் இரண்டு பேருந்துகள் கொள்ளாது :) எனினும், முக்கியமான இந்நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புள்ள பங்களிப்பாளர் விடுபட்டுப் போனதாக உணரக்கூடாது என்பதற்காக அனைவரையும் அழைத்துள்ளேன். கூடிய பயனர்கள் கலந்து கொண்டால் தேவைக்கேற்ப மாற்று ஏற்பாடுகள் செய்வோம்.--இரவி (பேச்சு) 21:33, 18 செப்டம்பர் 2013 (UTC)
இடம்
[தொகு]//தமிழ் விக்கிப்பீடியாவின் ஏற்பாட்டில் உள்ள அறைகளில் தங்கியுள்ளோரை பேருந்து இருக்கும் இடத்துக்கே வந்து ஏற்றிக் கொள்ளும்.
//சென்னையில் இருந்து வரும் மற்றவர்கள் ஏறுவதற்கான பொதுவான இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
- சென்னையில் இருந்து வரும் மற்றவர்கள் ஏறிக்கொள்ள ஏதுவான இடங்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனவா? --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 05:23, 25 செப்டம்பர் 2013 (UTC)
- நிகழ்வில் கலந்து கொள்ள முன்பே விருப்பம் தெரிவித்திருந்தேன்,மேலும் ஒழுங்கமைவு பணிகளில் ஈடுபட முன்னதாக வரமுடியும் என்றும் தெரிவித்து இருந்தேன். இன்று (27.09.2013) வேளச்சேரியில் உள்ளேன்,பணிகள் இருப்பின் தெரிவிக்கவும்--யோகிசிவம் (பேச்சு) 02:45, 27 செப்டம்பர் 2013 (UTC)
வருத்தம்
[தொகு]உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் முன்னரே தெரிவித்தபடி விக்கி கூடலில் பங்கேற்க இயலாது என்று வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். முத்துராமன் (பேச்சு) 13:29, 27 செப்டம்பர் 2013 (UTC)