விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Wifi[தொகு]

நிகழ்வு நடக்கும் அரங்கு, பயிற்சியறைகளில் அன்று ஒரு நாள் மட்டும் wifi வசதி தேவைப்படுகிறது. சென்னையில் இத்தகையை வசதியைச் செய்து தரும் தனியார் சேவையாளர்கள் யாரையாவது அறிவீர்கள் என்றால் தெரிவிக்க வேண்டுகிறேன். நான் இணையத்தில் தேடியவரை யாரும் சிக்கவில்லை.--இரவி (பேச்சு) 06:52, 17 செப்டம்பர் 2013 (UTC)

நிகழ்ச்சி நிரல்[தொகு]

 • 12:00 முதல் 03:00 இடைவேளை அதிகம் என்று கருதுகிறேன். ஒன்று அல்லது ஒன்றரை மணித்தியால இடைவேளை போதுமானது. மாற்றாக பயிற்சி நேரத்தைக் கூட்டலாம் என்று நினைக்கிறேன். ஏன் என்றால் முதல் நாள் informal ஆக இருப்பதால், இந்த நாளை அவ்வாறு திட்டமிடுவது அவசியமில்லை.
 • தமிழ்க் கலைக்களஞ்சிய, கலைச்சொல்லாக்க பணிகளில் ஈடுபட்டவர்களின், ஈடுபட்டு இருப்பவர்களின் கருத்துக்களை, அனுபவங்களைப் பெற முடிந்தால் நன்று.
 • எ.கா இதனை http://www.tamilstudiesconference.ca/tsc2012/program.php

--Natkeeran (பேச்சு) 13:42, 19 செப்டம்பர் 2013 (UTC)

நற்கீரன், எந்த ஒரு நிகழ்விலும் நாம் முழுமையான பயிற்சியை அளித்து விட முடியாது. சிறு அறிமுகம் தந்து கோடிட்டுக் காட்டி உரையாடலைப் பயிற்சிக்கு வெளியிலும் விக்கிக்கு உள்ளேயும் இழுத்து வர வேண்டும். முதல் நாள் நிகழ்வன்று சில விக்கிப்பீடியர்கள் மட்டுமே கலந்து கொள்கிறோம். மேலும் பலர் ஞாயின்றன்று மட்டும் வரலாம். தவிர, தமிழார்வலர்கள், இணைய ஆர்வலர்கள், ஊடகக்காரர்கள் என்று பலரும் அன்று வரக்கூடும். முகநூலில் நிகழ்வுப் பக்கத்தைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 75 பேர் வருகை தருவதாக பதிந்துள்ளார்கள். இவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகிப் பேசிக் கொள்ள இந்த பெரிய உணவு இடைவேளை இன்றியமையாதது என்று கருதுகிறேன். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் இது போதிய கால இடைவெளியைத் தரும்.

//தமிழ்க் கலைக்களஞ்சிய, கலைச்சொல்லாக்க பணிகளில் ஈடுபட்டவர்களின், ஈடுபட்டு இருப்பவர்களின் கருத்துக்களை, அனுபவங்களைப் பெற முடிந்தால் நன்று.//

இயன்றவரை இவர்களின் கருத்துகளை ஆவணப்படுத்த முனைகிறேன். ஒளிப்பதிவுகள் இதற்கு உதவும். நன்றி. --இரவி (பேச்சு) 16:55, 19 செப்டம்பர் 2013 (UTC)

விளக்கத்துக்கு நன்றி. எனினும் முன்னர் யேசித்தது மாதிரி 9:00 இருந்து 1:00 அல்லது 12:30 மட்டும் பயற்சிகளை வைக்கலாம் என்று கருதுகிறேன்.--Natkeeran (பேச்சு) 17:00, 19 செப்டம்பர் 2013 (UTC)
சரி நற்கீரன். 12.30 வரை பயிற்சி நேரத்தைக் கூட்டியுள்ளேன்.--இரவி (பேச்சு) 08:09, 20 செப்டம்பர் 2013 (UTC)

குறு நிகழ்ச்சிகள்[தொகு]

காலை பயிற்சியின் போது அரங்கின் ஒரமாகவோ வெளியிலோ சில குறு நிகழ்ச்சிகள் செய்யலாம். இவை வேடிக்கையாகவும் மறைமுகமாக விக்கியை மனதில் பதிய வைப்பதாகவும் இருக்கும்.

எடுத்துக்காட்டுக்கு:

 • விக்கி வினாடி வினா - சில கேள்விகளைக் கேட்டு அதற்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் உலாவி கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்குச் சிறு பரிசுகள். தமிழ் விக்கிப்பீடியா உலாவல், உள்ளடக்கத்தை அறிமுகப்படுத்தும்.
 • உங்கள் படம் விக்கியில் - பார்வையாளர்கள் தாங்கள் எடுத்த சில படங்களைத் தந்தால் உடனடியாக காமன்சில் ஏற்றிக் காட்டுதல்.
 • உடனடி கட்டுரைப் பரிசுப் போட்டி - நிகழ்வுக்கு வரும் பார்வையாளர்கள் அன்றே அங்கேயே சில கட்டுரைகளை எழுதிக் காட்டினால் அவர்களுக்குச் சில பரிசுகள்.
 • தமிழ்த் தட்டச்சுப் பந்தயம் - யார் வேகமாக தட்டச்சுகிறார்கள் என்று ஒரு பந்தயம் :)--இரவி (பேச்சு) 16:55, 19 செப்டம்பர் 2013 (UTC)

நல்ல பரிந்துரைகள். --Natkeeran (பேச்சு) 16:59, 19 செப்டம்பர் 2013 (UTC)

நல்ல பரிந்துரை. பங்குபற்றுநர்களை உற்சாகப்படுத்தும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:34, 20 செப்டம்பர் 2013 (UTC)

பங்குபற்றுபவர்களை நிகழ்வுடன் பிணைத்து வைத்திருக்க நல்ல வழி. ---மயூரநாதன் (பேச்சு) 07:35, 20 செப்டம்பர் 2013 (UTC)

 • விக்கிமீடியாவின் எல்லா அல்லது முக்கிய திட்டங்களை எல்லாம் மேசையோ காகிதத்தட்டியோ போட்டுக் காட்சிப்படுத்த வேண்டும். ஞாயிறு அன்று நடந்த கட்டற்ற மென்பொருள் நாள் நிகழ்ச்சியில் சந்தித்த சிலருக்கு விக்கிப்பீடியாவைத் தவிற மற்ற திட்டங்கள் பற்றி அவ்வளவாக தெரியவில்லை என்று அறிந்தேன்.
 • பின்னூட்டப் படிவங்களை விழா ஆரம்பத்தில் கொடுக்கும் போழுதே எழுத்துப் போட்டிக்கான தாள்களைக் கொடுத்து உணவு இடைவேளையில் திருப்பி வாங்கி, முடிவுகளை இறுதியாக அறிவித்துப் பரிசளிக்கலாம்.--நீச்சல்காரன் (பேச்சு) 18:58, 24 செப்டம்பர் 2013 (UTC)
நீச்சல்காரன், இந்தக் குறு நிகழ்ச்சிகளையும் மற்ற உங்களது ஆலோசனைகளையும் பொறுப்பெடுத்துச் செய்ய முடியுமா? நன்றி. அரங்கில் wifi இல்லாது போகலாம் என்பதால் அவற்றுக்கு மாற்று ஏற்பாடாக நிறைய data cardகள் தேவை.--இரவி (பேச்சு) 19:32, 24 செப்டம்பர் 2013 (UTC)
நிகழ்ச்சிகளைச் செய்துவிடுவோம். ஒரு தரவட்டை என் சார்பாக விழா அரங்கிற்கு வரும். கைவசமுள்ள தற்போதைய குறுநிகழ்ச்சிகள்:
 • இணைய வழி புதிர்ப் போட்டி ஒன்றை நடத்தி முடிவுகளை விழா நாளில் வெளியிட்டுப் பரிசளிக்கலாம். இதன் மூலம் புதியவர்களுக்கு விழா அறிமுகம் கிடைக்கும். பரிசை நேரிலோ அல்லது (இந்திய முகவரிக்கு) தபாலிலோ அனுப்பிவைக்கலாம். அல்லது வெளிநாடுகளுக்குப் பரிசை அனுப்பும் வழிமுறைச் சிக்கல்கள் பற்றி அறியில. கேள்விகளுடன் இன்றிரவு 9 மணிக்குள் இங்கு பதிவு செய்கிறேன். சமூகத்தின் சம்மதம் கிடைத்தால் tamilwikipedia.blogspot.com (அனுமதி கிடைத்தால்) என்ற முகவரியிலோ அல்லது tawiki10.neechalkaran.com என்ற முகவரியிலோ 12 மணி வாக்கில் வெளியிடலாம். நேரடி கேள்விகளாக இல்லாமல் புதிர் போலவும் விக்கியைப் பயன்படுத்துவது போலவும் இருக்கும். 40% எளிமை 40% நடுமை 20%கடுமை என்கிற விதத்தில் அமையும். மறுமொழிகளை மட்டுறுத்துவதன் மூலம் விடைகள் மற்றவர்களுக்குத் தெரியாமல் தடுக்கலாம்.
 • தானியக்கத்தில் tawiki10 என்ற குறிச்சொல்லுடன் வரும் கீச்சுக்களைத் திரட்டி சிறந்தவோன்றைத் தேர்வு செய்யலாம். ஆதரவு இருக்குமா என்பது ஐயம்? ஆனால் இதுவொரு நல்ல விளம்பரயுக்தி என நினைக்கிறேன்.

--நீச்சல்காரன் (பேச்சு) 01:24, 25 செப்டம்பர் 2013 (UTC)

நீச்சல்காரன், இதனைப் பொறுப்பு எடுப்பற்கு நன்றி. உங்கள் கூகுள் மின்மடல் முகவரி தந்தால் நமது வலைப்பதிவில் சேர்த்து விடுகிறேன். என்ன பரிசு, எத்தனைப் பரிசுகள், எத்தனை உரூபாய் மதிப்புக்குத் தரலாம் என்று நினைக்கிறீர்கள்? கிழக்குப் பதிப்பகம் வழங்கும் சில பரிசு couponகள் உள்ளன. அவற்றைத் தந்தால் அவர்களே இணையத்தில் வாங்கிக் கொள்ளலாம். நமக்கு அஞ்சல் பொறுப்பு இல்லாமல் போகும்.

hashtagக்குப் பரிசு கொடுப்பது நிறைய மொக்கைகளுக்கு வழி வகுக்கலாம் என்பதால் விட்டு விடலாம் :) --இரவி (பேச்சு) 03:46, 25 செப்டம்பர் 2013 (UTC)

முதல் பத்து புதிர்கள் இந்த மணல்தொட்டியில் தயார். கூகிள் தேடலுக்குள் சிக்காத விதமாகவே கடுமையான புதிர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் விக்கிப் பயனர்கள்(போட்டியில் பங்கு கொள்ளாதவர்கள்) அவர்கள் விருப்பப் புதிர்களையும் எனக்கு அனுப்பலாம். neechalkaran at gmail dot com இறுதி வடிவத்தை இரவுக்குள் தயாரித்து விடுகிறேன். நாளை காலையில் தயார் நிலையில் புதிர்ப் பக்கத்தை வடிவமைத்துவிடிகிறேன். தள அணுக்கத்தை இந்த மின்னஞ்சலுக்கே அனுப்பிவிடவும். பரிசுக்கான நிதி மதிப்பு பற்றி எந்த கருத்தும் தற்போதுயில்லை. குழுவின் கருத்தை எடுத்துக் கொள்வோம்.
புதிர் அருமையாக உள்ளது. தொடருங்கள். வலைப்பதிவுக்கான அழைப்பு இட்டுள்ளேன். நீங்களே பதிப்பித்து விதிகளையும் தெரிவித்து விடுங்கள். 1500 இந்திய உரூபாய் மதிப்பில் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகப் பரிசுகளை வழங்கலாம். ஒருவருக்கு 500 என மூன்று பரிசுகள். --இரவி (பேச்சு) 08:36, 25 செப்டம்பர் 2013 (UTC)

நிகழ்வுக்கு முன்பும் பின்பும் சென்னையில் இருப்பவர்கள்[தொகு]

நான் செப்டம்பர் 25 முதல் செப்டம்பர் 30 மாலை வரை சென்னையில் இருப்பேன். நிகழ்வுக்கு முன்பும் பின்பும் சென்னையில் தங்கியிருப்பவர்கள், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் சந்தித்து அளவளாவலாம் என்றால் இங்கே சொல்லுங்கள். தமிழ் விக்கிப்பீடியா சார்பாக, ஏதேனும் தமிழ் நிறுவனங்கள், பல்கலைகளில் முறையாக பேசுவதற்கான பரிந்துரைகள் இருந்தாலும் கலந்து கொள்கிறேன். --இரவி (பேச்சு) 08:13, 20 செப்டம்பர் 2013 (UTC)

நானும் செப்டெம்பர் 27 பிற்பகல் சென்னை வருகின்றேன். ஒக்டோபர் 1ந் திகதி இலங்கை பகலில் திரும்புவேன். ஆகவே, செப்டெம்பர் 30 வரை வேறு கலந்துரையாடல் இருப்பினும் கலந்து கொள்ளலாம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:23, 20 செப்டம்பர் 2013 (UTC)

நான் செப் 27 ஆம் தேதி அதிகாலையில் சென்னை வந்து சேருவேன். அக்டோபர் 2 ஆம் தேதி அதிகாலை சென்னையில் இருந்து புறப்படுகிறேன். இந்த 5 நாட்களிலும் பிற பயனர்களைச் சந்திக்கவும் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளவும் முடியும். ---மயூரநாதன் (பேச்சு) 21:55, 20 செப்டம்பர் 2013 (UTC)

நான் செப் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை சென்னையில் இருப்பேன் --ஸ்ரீதர் (பேச்சு) 09:44, 21 செப்டம்பர் 2013 (UTC)

TAG அரங்கம் -> ராக்/டாக் (TAG) அரங்கம்[தொகு]

இடப்பெயரை தமிழில் எழுதும் போது எழுத்துப்பெயர்ப்புச் செய்து, தேவைப்படும் பொழுது அடைப்புக்குறிக்குள் தரலாம். நன்றி. --Natkeeran (பேச்சு) 02:27, 25 செப்டம்பர் 2013 (UTC)

டாக் என்று மாற்றி உள்ளேன். --இரவி (பேச்சு) 03:19, 25 செப்டம்பர் 2013 (UTC)

முகநூலில் தமிழில் கொண்டாட்டம் என்றும் ஆங்கிலத்தில் Celebrations[தொகு]

முகநூலில் தமிழில் கொண்டாட்டம் என்றும் ஆங்கிலத்தில் Celebrations என்றும் உள்ளது. அது சரியா? --Natkeeran (பேச்சு) 03:59, 25 செப்டம்பர் 2013 (UTC)

சரியில்லையா :) ? பொருதமான சொற்களைப் பரிந்துரையுங்கள். ஒரு வேளை ஒருமை / பன்மையைச் சுட்டுகிறீர்களோ? எனக்கு இப்பவே கண்ணைக் கட்டுதே :) --இரவி (பேச்சு) 04:04, 25 செப்டம்பர் 2013 (UTC)

ஆமாம். ஒருமை பன்மையையே. --Natkeeran (பேச்சு) 04:22, 25 செப்டம்பர் 2013 (UTC)