விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதற்கட்ட உரையாடல்[தொகு]

ஸ்ரீதர். ஞா[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் விதமாக அனைத்துப் பயனர்களின் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றது. கோவையில் நடைபெற்ற வேங்கைத் திட்ட பயிற்சி சமயத்தில் கலந்துரையாடியதன் விளைவாக சில கருத்துக்களைப் பரிந்துரைக்கிறேன். ஓரிரு நாட்கள் கொண்டாடும் நிகழ்வாக அல்லாமல் வருடம் முழுவதும் நிகழ்வுகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக, கட்டுரைப் போட்டி நடத்துதல் (புதுப் பயனர்களுக்கு, மாணவர்களுக்கு), பரப்புரை செய்தல் (டுவிட்டர், முகநூல் போன்றவற்றில் #தமிழ்விக்கிப்பீடியா20 பயன்படுத்துதல், கல்லூரிகளில் பரப்புரை நிகழ்வுகள்), தமிழ் விக்கிப்பீடியா20 என்பதற்கான இலச்சினைப் போட்டியினை தமிழகம் முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு வைப்பது, குறுங்கட்டுரைகளை விரிவாக்குதல் போன்ற நிகழ்வுகளை மேற்கொள்ளலாம். நிகழ்வு நடைபெறும் இடமாக பாண்டிச்சேரி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் வைக்கலாம் என்ற கருத்தும் இருந்தது என்பதனை அனைவரது கவனத்திற்கும் கொண்டுவருகிறேன். ஸ்ரீதர். ஞா (✉) 14:09, 12 பெப்ரவரி 2023 (UTC)

TNSE Mahalingam VNR[தொகு]

20 ஆண்டுகள் நிறைவென்பதை பல்வேறு காலகட்டங்களிலும் விக்கிப்பீடியர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் நிகழ்வாகவும் கொண்டாட வேண்டும். போட்டிகள் நடத்தலாம். கல்லூரிகளில் ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டு வரும் கணித்தமிழ் பேரவையின் வழியாக மாணவர்களை அணுகி பல்வேறு விதமான விக்கிமீடியத் திட்டங்களில் பங்களிக்கும் விதமாக நிகழ்வுகளைத் திட்டமிடலாம். இறுதியாக விழா வடிவில் நடக்கும் போது 2 அல்லது 3 நாள் நிகழ்வாக தமிழ்நாட்டில் விக்கிப்பீடியர்கள் ஒருங்கிணைப்பிற்கு ஏதுவாகவும், பன்னாட்டுப் பயனர்களையும் வரவழைக்கப் பொறுப்பேற்கும் பல்கலை அல்லது தமிழ் மன்றங்களோடு ஒன்றிணைந்து நடத்தலாம். எல்லாவற்றிற்குமான ஆலோசனைகளை இணைய வழியிலான கூட்டங்களின் வழியாக மேற்கொண்டு பொதுக்கருத்தினை எட்டி முன்னெடுக்கலாம். மூத்த பயனர்களின் ஆலோசனைகளை நாடுகிறோம். TNSE Mahalingam VNR (பேச்சு) 15:06, 12 பெப்ரவரி 2023 (UTC)

Selvasivagurunathan m[தொகு]

இந்த மிக முக்கியமான கொண்டாட்ட நிகழ்வுகளை நடத்துவதற்காக, முன்வரைவு எழுத ஆரம்பித்த சிறீதரன் அவர்களுக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, நிகழ்வுகளை ஒருங்கிணைத்து, வெற்றிகரமாக நடத்துவோம். தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் கொண்டாட்ட இறுதி நிகழ்வை கன்னியாகுமரியில் நடத்துவதற்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். அருகில் திருவனந்தபுரம் வானூர்தி நிலையம், கன்னியாகுமரி தொடருந்து நிலையம், பேருந்து வசதிகள், அங்கும் சுற்றுப்புறத்திலும் இருக்கும் சுற்றுலா இடங்கள் என கன்னியாகுமரி சிறந்த தெரிவாகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:40, 12 பெப்ரவரி 2023 (UTC)

நீச்சல்காரன்[தொகு]

உரையாடலைத் தொடங்கியதற்கு நன்றி ஸ்ரீதர். 20ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வினைத் தமிழ் விக்கிப்பீடியா நடத்துவதில் மாற்றுக் கருத்திருக்காது. அதனால் நிகழ்விற்குத் தேவையான முதற்கட்டப் பணிகளைத் தொடங்கலாம். முதலில் இடத்தினைத் தேர்வு செய்ய வேண்டும். உள்ளூர் பயனரின் முன்னெடுப்பு முக்கியம். இரண்டாவது, வெநிஒச(FCRA) அனுமதி பெற்ற அமைப்பை நிதிப் பங்காளராக இணைத்துக் கொள்ளவேண்டும். மற்றவர்கள் தெளிவிற்காகக் கூடுதல் விளக்கம்:வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் வரும் நிதியினை வெநிஒசப்படிதான் வேறு வெளிநாட்டினருக்குப் பயன்படுத்த முடியும். இந்தக் கொண்டாட்டத்தில் நிச்சயமாகப் பன்னாட்டுப் பயனர்களை அழைப்போம். தனிநபர்களோ பயனர்குழுவோ வேறு சாதாரண அமைப்பின் வழியாகவோ வாங்கினால் செலவிடமுடியாது. அதற்காக நிதியைக் கையாள நமது நோக்கிற்கு ஒத்துப்போகும் ஒரு அமைப்புடனே விண்ணப்பிக்கமுடியும். சிஐஎஸ் என்பது அந்த அனுமதியைப் பெற்ற அமைப்பில்லை அதனால் தான் வேங்கைத்திட்டப் பயிற்சிக்கு இலங்கைப் பயனர்களை அழைக்க இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து(நிதி கையாள மட்டுமே) செயல்படும் வெநிஒச அனுமதி பெற்ற அமைப்பினை அடையாளம் காண வேண்டும். பொதுவாகப் பெரிய கல்விநிலையங்கள் இந்த வரையறைக்குள் வரலாம். (அவ்வாறு தமிழகத்தில் நிறுவனப் பங்காளர் கிடைக்காவிட்டால் இந்த ஆண்டு நடைபெறும் விக்கிமாநாட்டின் நிறுவனப் பங்காளரான ஐஐஐடி ஹைதராபாத்துடன் இணைந்து தமிழ் விக்கிப்பீடியா சார்பாக நடத்தலாம். ஐஐஐடி ஹைதராபாத் அமைப்பிற்கு விக்கிமாநாட்டுச் செலவிற்கான ஜிஎஸ்டி நெறிமுறைகள், தணிக்கை போன்றவற்றில் ஏற்கனவே கையாண்ட அனுபவமுமுள்ளது).

மற்ற நிகழ்ச்சித் திட்டங்களை அதன்பின்னர் வகுப்பது சரியாக இருக்கும். 15ஆம் ஆண்டு கொண்டாட்டத்திற்கு நிதி நல்கை ஓராண்டு தாமதமான அனுபமிருப்பதால் நிதிநல்கை கிடைக்கும் பட்சத்திலேயே களத்தில் நிகழ்ச்சி நிரல்களை முடிவு செய்யலாமெனப் பரிந்துரைக்கிறேன். எனவே நிகழ்வு நடைபெறும் ஊரும் நிறுவனப் பங்காளரும்(Institutional partner) முதலில் இறுதி செய்து நிதிநல்கைக்கு விண்ணப்பிக்க வேண்டும். @Balurbala and சத்திரத்தான்: உங்கள் பரிந்துரைகளையும் முன்வையுங்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 13:53, 13 பெப்ரவரி 2023 (UTC)

சத்திரத்தான்[தொகு]

20ஆம் ஆண்டின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரிகளில் நடத்தப்படும் பயிற்சிக்கு (மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்) மாநில அளவில் ஒருங்கிணைக்கவோ அல்லது நடத்தப்படும் தெரிவு செய்யப்படும் இடங்களில் உள்ள கல்லூரிகளுடன் தொடர்புகொள்ளும் பணிக்கு என்னுடைய விருப்பத்தினை தெரிவித்துக்கொள்கிறேன். கல்லூரிகளில் வழங்கப்படும் பயிற்சியினைப் பொறுத்தவரை பயிற்சி வழங்க முன்வரும் நமது முன்னோடிப் பயனருக்கான போக்குவரத்து தங்குமிட செலவுகளே பிரதானமாக இருக்கும். விக்கிப்பீடியா பயனர்கள் சந்திக்கும் நிகழ்வினைப் பொறுத்தவரை ஐதராபாத் ஐஐஐடியினை @Neechalkaran: அவர்கள் கூறியதுபோல அணுகலாம். ஐதராபாத்தில் தமிழ்ச் சங்கம் இருக்கும் என எண்ணுகிறேன் தேவைப்படின் அவர்களையும் இணைத்துக்கொள்ளலாம். தற்பொழுது நடைபெற உள்ள விக்கிமாநாட்டில் கலந்துகொள்ள செல்லும் நிர்வாகிகள் இது குறித்த பணிகளைத் துவங்கலாம். வேலூர் விஐடி, சென்னை எஸ். ஆர். எம். (கோவையில் பேசியது போல்) போன்ற பெரு கல்வி நிறுவனங்களை புரிந்துணர்வு அடிப்படையில் (MoU) நாம் அணுகலாம். நிதிச்சுமையும் நமக்கு குறையும். அவர்களுடைய வளங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அரசு நிறுவனங்களை நான் தொடர்புகொண்டபோது நிதியினை அவர்களின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நாம் கையாளவேண்டியது உள்ளது. நிகழ்வின் துவக்கமாக போட்டிகளையும் பயிற்சியினையும் குறித்த காலத்தில் கொண்டாட்டத்தினை எதிர்நோக்கித் துவக்கிவிடலாம். --சத்திரத்தான் (பேச்சு) 15:16, 13 பெப்ரவரி 2023 (UTC)

இரா. பாலா[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் 20 ஆண்டுக் கொண்டாட்ட நிகழ்வினை பிற பயனர்கள் கருதுவது போல கன்னியாகுமரியில் நடத்துவதாக இருந்தால் அதற்கான ஒருங்கிணைப்பினைச் செய்ய விழைகிறேன். வெநிஒச(FCRA) அனுமதி பெற்ற அமைப்பை அடையாளம் கண்டு பன்னாட்டுப் பயனரையும் அழைப்பது சாலச் சிறந்தது. நிகழ்ச்சி தொடர்பான கருத்துகளை வரும் நாட்களில் உரையாடும்போது தெரிவிக்கிறேன்.--இரா. பாலாபேச்சு 05:17, 15 பெப்ரவரி 2023 (UTC)

கன்னியாகுமாரியில் எத்தனை உள்ளூர் பயனர்கள் ஒருங்கிணைப்பில் உதவ இயலும், போக்குவரத்து வசதி, சுமார் ஐம்பது நபர்களுக்குத் தங்கும் வசதி, உள்ளூரில் ஏதேனும் கல்வி அமைப்புகள் நம்முடன் இணைய வாய்ப்புள்ளதா போன்ற தகவல்களைப் பகிர இயலுமா? கன்னியாகுமரியை மற்றவர்கள் ஆதரிக்க அதன் சாதகபாதகங்கள் தெரிந்தால் விரைவாக மற்றாவர்கள் முடிவெடுக்க முடியும்? -நீச்சல்காரன் (பேச்சு) 09:00, 15 பெப்ரவரி 2023 (UTC)
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பயனர்கள் எவரேனும் தமிழ் விக்கியில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அருகாமை மாவட்டங்களில் சிலர் உள்ளனர். அவர்களும் பணி நிமித்தம் பெருநகரங்களில் இருப்பதாகவே அறிகிறேன். உள்ளூர் போக்குவரத்து வசதி மற்றும் சுமார் ஐம்பது நபர்களுக்குத் தங்கும் வசதி ஆகியவற்றை தேடிக் கண்டடைய இயலும்.--இரா. பாலாபேச்சு 02:09, 16 பெப்ரவரி 2023 (UTC)

//குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பயனர்கள் எவரேனும் தமிழ் விக்கியில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை??//

பயனர்:வைகுண்ட ராஜா என்பவர் இருக்கிறார்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:19, 22 பெப்ரவரி 2023 (UTC)

பயனர்:வைகுண்ட ராஜா கடைசியாக 2014 ஆம் ஆண்டில் பங்களித்துள்ளார். தற்போது விக்கிப்பீடியாவில் பங்களிக்கிறாரா எனத் தெரியவில்லை.--இரா. பாலாபேச்சு 03:21, 12 மார்ச் 2023 (UTC)

சிவகோசரன்[தொகு]

விக்கிப்பீடியா இருபதாம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் தொடர்பான உரையாடல் ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி. ஆண்டு நிறைவு நிகழ்வுகள் செப்டம்பர் மாத இறுதியில் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இருபதாம் ஆண்டு நிறைவை 2023 செப்டம்பரில் நடாத்த நிதிநல்கை பெறுவதற்கான காலம் கடந்து விட்டது. விக்கி மாநாடுகளுக்கான நிதிநல்கை விண்ணப்பங்கள் ஆண்டுக்கு இருமுறை பரிசீலிக்கப்படுகின்றன. 2023 பின்னரையாண்டில் நிகழ்வு நடாத்துவதற்கு நாம் பெப்ரவரி 6ஆம் திகதிக்கு முன்னர் முன்மொழிவைச் சமர்ப்பித்திருக்க வேண்டும். பார்க்க: மாநாட்டு நிதிநல்கை. நாம் 2023 ஆகத்து/செப்டம்பர் தொடங்கிப் போட்டிகள், பயிலரங்குகள் போன்ற நிகழ்வுகளை ஆரம்பித்து 2024 ஆரம்பத்தில் ஒன்று கூடலை நிகழ்த்தலாம். பதினாறாம் ஆண்டுக் கொண்டாட்டங்களுக்கு நாம் $7600 அளவில் பெற்றிருந்தோம். $5000 வரையான நிதிநல்கைகளுக்கு நாம் விரைவு நிதிநல்கைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் முன்னோடி நிகழ்வுகளை நடாத்தலாம். ஒன்றுகூடலுக்கான முன்மொழிவை இவ்வாண்டு செப்டம்பருக்கு முன் இறுதிசெய்வதன் மூலம் 2024 ஆரம்பத்தில் நிகழ்வை நடாத்தலாம். --சிவகோசரன் (பேச்சு) 16:31, 15 பெப்ரவரி 2023 (UTC)

ஏற்பாட்டுக் குழு[தொகு]

ஏறக்குறைய ஒரு மாதமாக வேறு உரையாடல்கள் நிகழவில்லை. யாரேனும் முன்னின்று திட்டமிடலாம். ஏற்பாட்டுக் குழுவினை நீங்களாக உருவாக்கி இருபதாவதாண்டு நிகழ்வினைத் திட்டமிடலாம். நடப்புச் சுற்றில் பொது நிதி கோரலுக்கு மார்ச் 16 கடைசி நாள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். --நீச்சல்காரன் (பேச்சு) 11:03, 10 மார்ச் 2023 (UTC)

விக்கிப்பீடியர்கள் சந்திப்பு[தொகு]

செப்டம்பர் 2023 இல், விழா போன்றதொரு நிகழ்வினை நடத்துவதற்கான நிதியைக் கோருவதற்கு போதிய நேரம் இல்லை. எனவே, விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் ஒரு நாள்/ இரு நாள் நிகழ்வொன்றை ஏதேனும் ஒரு ஊரில் நடத்தலாம். எதிர்காலப் பணிகள் குறித்து திட்டமிடுதல்களை இந்தச் சந்திப்பின்போது செய்யலாம். நேரடி மாரத்தான் நிகழ்வினையும் இணைத்துச் செய்யலாம். இவ்வகையான நிகழ்விற்கு Rapid Fund அல்லது CIS-A2K நிதி ஆகியனவற்றை கோர இயலும் எனக் கருதுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:04, 11 மே 2023 (UTC)[பதிலளி]