விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 28, 2008
முக்கோணவியலில் ஈரோனின் வாய்பாடு (Heron's formula) என்பது ஒரு முக்கோணத்தின் பரப்பளவை அதன் பக்கங்களின் நீளங்களின் அளவுகளைக் கொண்டு கணிக்கப் பயன்படும் ஒரு பயன்மிகுந்த வாய்பாடு. ஈரோன் (Heron or Hero) அல்லது ஈரோவின் வாய்பாட்டின்படி, ஒரு முக்கோணத்தின் பக்க நீளங்கள் a, b, c ஆகவும், அம்முக்கோணத்தின் சுற்றளவின் பாதி s ஆகவும் இருந்தால், அதன் பரப்பளவு என்பது கீழ்க்காணும் சமன்பாட்டின்படி உறவு கொள்ளும்.
பஞ்சாப் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் மேற்கில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபும், வடக்கில் ஜம்மு காஷ்மீரும், வட கிழக்கில் இமாசல பிரதேசமும், தென் கிழக்கில் அரியானாவும், தென் மேற்கில் ராஜஸ்தானும் உள்ளன. லூதியானா, ஜலந்தர், பாட்டியாலா, அம்ரித்சர் ஆகியவை இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள். பஞ்சாபின் எல்லைக்கு வெளியே உள்ள சண்டிகர் பஞ்சாபின் தலைநகராகும். பஞ்சாபி மொழி அதிகாரப்பூர்வ மொழி. சீக்கிய மக்களே இங்கு பெருமளவில் வசிக்கின்றனர். கோதுமை பஞ்சாபில் அதி்கமாக விளையும் பயிராகும்.
உங்களுக்குத் தெரியுமா
- கருங்குழிகள் (படத்தில் கூவசர் கருங்குழி) என்பன, இவற்றின் எல்லைக்குட் செல்லும், ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.
- ஆசியாவில் உள்ள 47 நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளில் மட்டுமே ஆங்கிலம் ஒரு ஆட்சி மொழியாக இருக்கிறது.
- மொங்கோலியப் பேரரசு (1206 - 1368) அதன் உச்சநிலையில் 36 மில்லியன் சதுர கிமீ பரந்து ஏறத்தாழ 100 மில்லியன் மக்களைக் கொண்டிருந்த உலக வரலாற்றில் மொத்த பரப்பளவு அடிப்படையில் இரண்டாவது பெரிய பேரசு.
- தமிழின் முதல் முழுநீள முப்பரிணாம இயங்குபடம் 2007 ஆண்டில் வெளிவந்த இனிமே நாங்கதான் ஆகும்.
- தானுந்து வழிகாட்டி என்பது தானுந்து செல்ல வேண்டிய இடத்துக்கு நிகழ்நேரத்தில் வழிகாட்டும் கருவி.