தானுந்து வழிகாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தானுந்து வழிகாட்டி என்பது தானுந்து செல்ல வேண்டிய இடத்துக்கு நிகழ்நேரத்தில் வழிகாட்டும் கருவி. முகவரியைக் கருவியில் இட்ட பின்பு, தானுந்து வழிகாட்டி நிலப்பட தரவுத்தளத்தைப் பயன்படுத்தி போக வேண்டிய வழியைத் தேர்வு செய்யும். தானுந்து செல்கையில் பூமியில் இடத்தைக் காட்டும் கருவித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தானுந்து எங்குள்ளது என்பதைக் கண்டுணர்ந்து எப்படி செல்ல வேண்டும் என்ற தகவல்களைச் சொல்லும். மேற்கு நாடுகளில் தானுந்து வழிகாட்டி தற்போது பரவலான பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தானுந்து_வழிகாட்டி&oldid=2084581" இலிருந்து மீள்விக்கப்பட்டது