விக்கிப்பீடியா:தமிழ் இணையம் நூலில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் இணையம் என்ற தலைப்பில் நண்பர் ஒருவர் எழுதும் நூலுக்குப் பின்வரும் விவரங்கள் தேவைப்படுகின்றன.

  1. விக்கி தொடங்கப்பட்ட ஆண்டு? சனவரி 15, 2001.
  2. தமிழ்ப்பகுதி எந்த ஆண்டில் உருவானது? செப்டம்பர் 30, 2003
  3. தமிழ் விக்கி பகுதிக்கு அதிகமாக உழைத்தவர்கள் யார் யார்? 250 உக்கும் மேலானவர்கள் உழைத்துள்ளனர், அவர்களுள் குறிப்பிடத்தக்க சிலர்:மயூரநாதன், சிறீதரன் கனகு, நற்கீரன், சுந்தர், ரவி, சிவக்குமார், செல்வா, டெரன்சு, கோபி, கிருஷ்ணமூர்த்தி, உமாபதி, தானியேல் பாண்டியன், மயூரன், நிரோஜன் சக்திவேல், சிந்து, வி.ஆர்.வாசு, கலாநிதி, குறும்பன், வெர்க்லோரும், மயுரேசன், ஜேகே, செல்வராசு,செல்வம் தமிழ், மகிழ்நன், கார்த்திக், ராஜ்குமார், சந்திரவதனா, மணியன். இவர்கள் தவிர மிகச்சிறந்த கட்டுரைகளை நல்கிய பாப்படு போன்ற ஒருசிலரும் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழ் விக்கி புள்ளிவிவரங்கள் பக்கத்தில் 50 அண்மையில் ஈடுபாடுடன் உள்ள விக்கியர்கள் (recently active wikipedians), 20 அண்மையில் பங்களிப்பில் இல்லாத விக்கியர்கள் (recently absent wikipedians) என்னும் பட்டியலையும் பார்க்கவும். தொகுப்புகளின் எண்ணிக்கையைக் கொண்டோ, தொடங்கிய கட்டுரைகளின் எண்ணிக்கையைக் கொண்டோ மட்டும் பங்களிப்பாளர்களின் உழைப்பின் பயனை எளிதில் கணிக்க இயலாது. மேலே குறிப்பிடாத சிலர் அளவில் சிறிதே பங்களித்திருந்தாலும் அது மற்றவர்கள் பெருமளவில் பங்களிக்க வாய்ப்பையும் ஊக்கத்தையும் நல்கியிருக்கக் கூடும் என்பதையும் கருத்தில் கொள்வது நலம்.
  4. தமிழ் விக்கி பரவலுக்கு யார் யார் செயல்படுகிறார்கள்?
    1. ரவி (இதழ்கள் மற்றும் வலைப்பதிவு),
    2. சுந்தர் (பிற விக்கி), இந்திய விக்கிமீடியா தொடர்பு
    3. நற்கீரன் (பல்வேறு முயற்சிகள்)
    4. செல்வா (தொடர்புகள்)
    5. மு. மயூரன் (வலைப்பதிவுகள்)
  5. தமிழ் விக்கியின் சிறப்பு?
    1. இந்திய மொழி விக்கிகளில் உள்ளடக்கத்தில் முதல் இடம்,
    2. பல கட்டுரைகள் வேறு எந்த மொழியிலும் இல்லாதவை,
    3. தரம் குறையாமல் காப்பதில் அக்கறை,
    4. பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் பங்களிப்பு,
  6. தமிழைப் பயன்படுத்தி எப்படி செய்திகள் உள்ளிடுவது?
    1. எ-கலப்பை (e-Kalaippai) போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி நேரடியாக உள்ளிடுதல்,
    2. தமிழில் ஒருங்குறியில் உள்ளீடு செய்யும் வசதி கொண்ட பிற மென்பொருட்களில் எழுதி அவற்றை வெட்டி விக்கிப்பீடியாவில் ஒட்டுதல், எடுத்துக்காட்டாக ஐகோப்பி (HiGopi) என்னும் இணையத்தில் கிடைக்கும் மென்கலத்தைப் பயன்படுத்தி எழுதி வெட்டி ஒட்டி உள்ளீடு செய்யலாம்.
  7. வடிவமைப்பு எப்படி தரவேண்டும்?
  8. தமிழில் இதுவரை எத்தனை தலைப்புகளில் கட்டுரை உள்ளது? 18,699 (10 சூலை, 2009 அன்று)
  9. தமிழ் விக்கி வளர என்ன என்ன வழிகள்?
    1. தமிழ் விக்கிப்பீடியாவைப் கூடிய அளவினர் அறியும்படி செய்தல் (இலவசமாக இணையத்தில் கிடைக்கும் பொதுக் கலைக்களஞ்சியம்),
    2. தமிழ் விக்கிப்பீடியாவை வளர்த்து எடுப்பதனால் விளையக்கூடிய நன்மைகள் பற்றிய உணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல்,
    3. பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், உயர்கல்வி மாணவர்கள் ஈடுபாடு கொண்டு உள்ளடக்கம் சேர்த்தல்.
    4. தற்போதுள்ள கட்டுரைகளை புத்தகம் மற்றும் குறுவட்டு வடிவில் தயாரித்தல்,
    5. தமிழில் உள்ளீடு செய்வதற்கான வசதிகளைப் பரவலாக்கல்,
    6. பயனுள்ள தலைப்புக்களில் முழுமையானதும் உள்ளடக்கச் செறிவு கொண்டதுமான கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயலுதல்,
    7. தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்துதல். மக்களின் அன்றாடத் தேவைகள் நிறைவானால் தான் இது போன்ற பொதுத் திட்டங்களுக்குப் பங்களிக்க இயலும்.
    8. தமிழர் பகுதிகளில் கணினி, இணைய நுட்ப வசதிகளைப் பெருக்கல்.
    9. பள்ளி, கல்லூரிகளில் தமிழ் இணையம், கணினியில் தமிழ் பயன்பாடு, தமிழ்த் தட்டச்சு குறித்து பயிற்சி அளித்தல்.
    10. தமிழில் ஏற்கனவே அச்சில் உள்ள கலைக்களஞ்சியங்கள், அரசு ஆவணங்கள், துறை சார் நூல்கள் முதலிய உசாத்துணை ஆதாரங்களை மின் வடிவில் கிடைக்கச் செய்தல்.
  10. தமிழ் விக்கியில் உள்ள குறைகள்?
    1. வளர்ந்து வரும் இக்கலைக்களஞ்சியத்தில், அடிப்படையான பல துறைகளில் முதல்நிலைக் கட்டுரைகளே இன்னும் நிறைய எழுத வேண்டியிருத்தல்,
    2. பல கட்டுரைகளில் சான்றுகள் சுட்டும் அளவும், தரமும் கூடவேண்டிய நிலையில் இருப்பது,
    3. நிறைவான தகவல்கள் கொண்ட ஆழமான கட்டுரைகள் போதிய அளவு இல்லாதிருப்பது,
    4. எழுதப்படும் கட்டுரைகளில் காணப்படும் பொருட்பிழைகள், எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் போன்றவற்றை உடனுக்குடன் திருத்துவதற்குப் போதிய அளவு பங்களிப்பவர்கள் இல்லாமை,
  11. தமிழ் மொழி வளர்ச்சிக்கு விக்கி எந்த வகையில் துணைநிற்கும்?
    1. தரமான படங்களுடன் ஏராளமான தகவல்கள் கொண்ட பல்துறை தலைப்புகளில் நல்ல தமிழில் கட்டுரைகள் இலவசமாகக் கிடைத்தல். கருத்து சூழல் இருப்பதாலும் பல்துறை வல்லுநர்கள், ஆர்வலர்கள் பங்களிப்பதாலும், இயல்பாக புதிய கலைசொற்களும் சொல்லாட்சிகளும் இயல்பாய் ஏற்படுதல். அனைத்து துறைகளை பற்றிய கட்டுரைகள் தமிழில் இலவசமாக கிடைத்தல்,
    2. தமிழில் எழுத்துமொழியில் இருக்கக்கூடிய வேறுபட்ட பயன்பாடுகளை எல்லாத் தரப்பினரும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுவதுடன், இயலக்கூடிய இடங்களில் அவற்றைத் தரப்படுத்துவதற்கும் வாய்ப்பு உள்ளது,
    3. தமிழ் வளர்ச்சியில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கு இலகுவாக இருப்பது (இதுவே இப்படிப்பட்ட பலநாட்டுத் தமிழர்களின் முதல் முயற்சி),
    4. இதனால் தமிழ் எல்லாப் பகுதிகளிலும் சீர்தரத்துடன் வளருவதற்கான வாய்ப்பை உருவாக்குவது,
    5. பிற வழிகளில் தமிழ் வளர்ச்சிக்கு உதவுவதற்கான நேரமும், வசதியும் கிடைக்காத பலர் அம் முயற்சியில் ஈடுபடுவதற்கு தமிழ் விக்கிப்பீடியா வாய்ப்பளிக்கிறது,
    6. தமிழ் வளர்ச்சிக்காக எவ்வளவு குறைந்த நேரத்தைச் செலவு செய்யத் தயாராக இருந்தாலும் அவர்களுக்கும் வசதியளிப்பதன் மூலம் சமூகத்தின் பெருந்தொகையினரது ஈடுபாட்டைத் தமிழ் வளர்ச்சி நோக்கிப் பயன்படுத்தக்கூடிய வல்லமை தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உண்டு. முறையான திட்டம் இருந்தால், இவ்வழியில் பல்லாயிரக்கணக்கான பயனுள்ள மனித உழைப்பு நேரத்தை தமிழ் வளர்ச்சிக்காக உருவாக்கலாம்,
    7. புதிய சொற்களையும் கலைச் சொற்களையும் உருவாக்குவதற்கான தேவையை உணரத்தருவது,
    8. புதுச் சொற்களையும் கலைச் சொற்களையும் அது பயன்படுத்தப்படும் வேளையிலேயே முறைப்படி கலந்துரையாடி உருவாக்குவதற்கான களமாக அமைவது,
    9. தமிழில் இல்லாத புதிய அறிவுத்துறைகளைத் தமிழுக்குக் அறிமுக அளவிலாவது இலகுவாகக் கொண்டு வரும் வாய்ப்பை அளிப்பது,