விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 23
Appearance
சூலை 23: எகிப்து – புரட்சி நாள் (1952)
- 1914 – ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட்டின் கொலையாளியைக் கண்டுபிடிக்க ஆத்திரியா-அங்கேரி சேர்பியாவுக்கு காலக்கெடு விதித்தது. இதனை அடுத்து சூலை 28, 1914 இல் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.
- 1927 – அனைத்திந்திய வானொலியின் முதலாவது வானொலி நிலையம் பம்பாய் நகரில் தனது ஒலிபரப்பு சேவையை ஆரம்பித்தது.
- 1967 – அமெரிக்காவின் வரலாற்றில் மிகப் பெரும் கலவரம் ஆபிரிக்க அமெரிக்கர்கள் செறிந்து வாழும் டிட்ராயிட் நகரில் இடம்பெற்றது. 43 பேர் கொல்லப்பட்டு 342 பேர் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் எரிக்கப்பட்டன.
- 1983 – கறுப்பு யூலை: இலங்கையில் இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆரம்பமானது (படம்).
- 1995 – ஏல்-பாப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.
- 1999 – ஊதிய உயர்வு கேட்டு தமிழ்நாடு, திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியின் போது காவல்துறை நடத்திய தடியடியில் பதினேழு பேர் உயிரிழந்தனர்.
பெரி. சுந்தரம் (பி. 1890) · சுப்பிரமணிய சிவா (இ. 1925) · சி. நயினார் முகம்மது (இ. 2014)
அண்மைய நாட்கள்: சூலை 22 – சூலை 24 – சூலை 25