ஏல்-பாப் வால்வெள்ளி
கண்டுபிடிப்பு | |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்): | ஆலன் ஃஏல், தாமசு பாப் |
கண்டுபிடித்த நாள்: | 1995 ஜூலை 23 |
வேறு குறியீடுகள்: | 1997 இல் பெரும் வால்வெள்ளி, C/1995 O1 |
சுற்றுவட்ட இயல்புகள் A | |
ஊழி: | 2450460.5 |
ஞாயிற்றுச்சேய்மைத் தூரம்: | 370.8 AU[1] |
ஞாயிற்றண்மைத் தூரம்: | 0.914 AU[1] |
அரைப்பேரச்சு: | 186 AU |
மையப்பிறழ்ச்சி: | 0.995086 |
சுற்றுக்காலம்: | 2520[2]–2533[1] yr (Barycentric 2391 yr)[3] |
சாய்வு: | 89.4° |
கடைசி அண்மைப்புள்ளி: | ஏப்ரல் 1, 1997[1] |
அடுத்த அண்மைப்புள்ளி: | ~4385[4] |
ஏல்-பாப் வால்வெள்ளி அல்லது ஹேல்-பொப் வால்வெள்ளி (Comet Hale-Bopp; C/1995 O1) என்பது 20ம் நூற்றாண்டில் பரவலாக பல ஆண்டுகளாக வானில் பார்க்கப்பட்ட ஒரு வெளிச்சமான வால்வெள்ளி ஆகும். இது கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு வானில் வெற்றுக் கண்களுக்குத் தெரிந்தது. கடந்த பல பத்தாண்டுகளுக்கு மேலாக இவ்வளவு பொலிவான வால்வெள்ளியை யாரும் பார்த்த்தில்லை. இது வெற்றுக்கண்ணால் ஒரு திறந்த பதிவாக, 18& மாதங்களாக, முந்தைய 1811 பெரு வால்வெள்ளிப் பதிவினும் இருமடங்கு நேரம்வரை பார்க்கமுடிந்தது. இதற்கு முன்னர் 1811 இல் தெரிந்த பெரு வால்வெள்ளி 260 நாட்களே வெற்றுக் கண்களுக்குத் தெரிந்தது.
ஹேல்-பொப் 1995 சூலை 23 இல் சூரியனில் இருந்து நெடுந்தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டபோது சூரியனுக்குக் அருகாக வரும்போது இது மிகவும் வெளிச்சமாகத் தெரியலாம் என அன்றே எதிர்பார்க்கப்பட்டது. வால்வெள்ளிகளின் பொலிவைத் துல்லியமாகக் கணிப்பது அரிதே என்றாலும், 1997 ஏப்பிரல் 1-இல் கதிர் அண்மையை அடைந்தபோது இது எதிர்பார்ப்பையெல்லாம் மிஞ்சிவிட்டது. இது 1997இன் பெரு வால்வெள்ளி எனப் புகழப்பட்டது. இது சுற்றுப்பாதை வீச்சை 1997 ஏப்ரல் 1 இல் கடந்தது.
கண்டுபிடிப்பு
[தொகு]இந்த வால்வெள்ளி 1995 ஜூலை 23இல் தனித்தனியாக அமெரிக்கர்களான ஆலன் ஃஏல் (வானியலாளர்), தாம்சு பாப் ஆகிய இருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[5]
ஃஏல் பன்னூறு மணிக்கணக்காக வால்வெள்ளிகளைத் தேடிக் கொண்டிருந்துள்ளார். வெற்றி ஏதும் கிடைக்கவில்லை.என்றாலும் நியூ மெக்சிகோவில் நள்ளிரவில் தனது பயணத்தின்போது இந்த வால்வெள்ளியை பார்த்துள்ளார். அப்போது இதன் தோற்றப் பொலிவு 10.5 ஆக இருந்துள்ளது. இதைp பெரு விண்மீன்கொத்து M70அருகில் [[சகாரிட்டசு விண்மீன்திரளில் கண்டுள்ளார்.[6] ஃஏல் M70 அருகில் வேறு ஆழ்வான்பொருள் ஏதும் இல்லை என உறுதியானதும் புதிய வால்வெள்ளிகளின் நிரல்பட்டியலிலும் வானின் இப்பகுதியில் அறிந்த பொருள் ஏதும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார். பிறகு இப்பொருள் விண்மீன்கள் பின்னணியில் சார்பியக்கம் கொண்டுள்ளதைக் கண்ணுற்றதால் வானியல் தொலைவரி மையக்குழுமத்துக்குத் தன்கண்டுபிடிப்பை மின்னஞ்சல் செய்துள்ளார்.[7]
பாப்பிடம் அவருக்குச் சொந்தமான தொலைநோக்கி ஏதும் இல்லை. அவர் விண்மீன்திரள்களையும் பால்வெளிகளையும் நோக்க நண்பர்களுடன் அரிசோனாவில் உள்ள சுட்டேன்ஃபீல்டுக்குச் சென்றுள்ளார். அங்கு தற்செயலாக இந்த வால்வெள்ளியை நண்பரின் தொலைநோக்கிக் காட்சிவில்லை வழியாகக் காண நேர்ந்துள்ளது.அப்போதே அவர் தான் ஏதோ ஒரு புதிய பொருளைக் கண்டுள்ளோம் என உணரலானார் இவரும் ஃஏலைப் போலவே, M70 அருகில் வானின் அப்பகுதியில் வேறு ஆழ்வான்பொருள் ஏதும் இல்லை என்பதை விண்மீன் அட்டவணைகளில் இருந்து உறுதிப்படுத்திக் கொண்டதும் வெசுட்டர்ன் யூனியன் தொலைவரி வாயிலாக வானியல் தொலைவரி மையக் குழுமத்துக்குத் தகவல் அளித்து விழிப்புறுத்தியுள்ளார். அக்குழுமத்தை 1968இல் இருந்தே இயக்கிவந்த பிரையான் ஜி. மார்சுடென், " இனிமேலும் யாராவது தொலைவரியேதும் அனுப்பாமல் இருக்கவேண்டும். இந்தத் தொலைவரி வருவதற்குள், ஃஏல் மூன்றுமுறை கண்டுபிடித்த வால்வெள்ளியின் விண்ணாயங்களோடு மின்னஞ்சல் செய்துவிட்டாரே” எனச் சொல்லிச் சிரித்துள்ளார்."[8]
மறுநாள் காலையில் இது புதிய வால்வெள்ளிதான் என்பது உறுதியாகியது. மேலும் C/1995 O1 எனவும் பெயரிடப்பட்ட்து. அதோடு இக்கண்டுபிடிப்பு பன்னாட்டு வானியல் ஒன்றியச் சுற்றறிக்கை 6187வழி அறிவிக்கப்பட்டுள்ளது.[6][9]
இது பண்டைய எகிப்தியர்களால் பெப்பி பரோவா காலத்தில் (கிமு2332-2283) நோக்கப்பட்டதாக அறியப்படுகிறது. சக்காராவில் உள்ள பெப்பியின் கூம்புப் பட்டகத்தில் (கல்லறையில்) என்-மீன் (nhh-star) என்பது வானுலகில் பரோவாவுக்குத் துணையாக இருப்பதாக ஒரு உரை உள்ளது. "nhh" என்ற அந்த சொற்றொடரின் பொருள் நீண்டமுடி என்பதாகும்.[10]
இவ்வால்வெள்ளி கண்ணில் இருந்து மறைந்தாலும், தற்போதும் இது வானியலாளர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. 2005 சனவரித் திங்களில் பெறப்பட்ட தரவுகளின்படி சூரியனில் இருந்து யுரேனசைவிட நெடுந்தொலைவில் பூமியில் இருந்து 21 AU தொலைவில் ஏல்-பாப்பு (ஹேல்-பொப்) சென்று கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பெரும் தொலைநோக்கிகளைக் கொண்டு தற்போதும் அவதானிக்க முடிகிறது. பெரும் தொலைநோக்கிகளைக் கொண்டு 2020ம் ஆண்டு வரையில் இதனை அவதானிக்க முடியும் என்றும் 4377 ஆம் ஆண்டில் இது மீண்டும் திரும்பும் எனவும் வானியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "JPL Small-Body Database Browser: C/1995 O1 (Hale–Bopp)" (2007-10-22 last obs). பார்க்கப்பட்ட நாள் 2008-12-05.
- ↑ Syuichi Nakano (2008-02-12). "OAA computing section circular NK 1553". OAA Computing and Minor Planet Sections. பார்க்கப்பட்ட நாள் 2009-12-17.
- ↑ Horizons output. "Barycentric Osculating Orbital Elements for Comet C/1995 O1 (Hale-Bopp)". பார்க்கப்பட்ட நாள் 2011-01-31. (Solution using the Solar System Barycenter and barycentric coordinates. Select Ephemeris Type:Elements and Center:@0)
- ↑ "Solex 10 estimate for Next Perihelion of C/1995 O1 (Hale-Bopp)". Archived from the original on 2012-08-10. பார்க்கப்பட்ட நாள் 2009-12-18.
- ↑ Shanklin, Jonathan D. (2000). "The comets of 1995". Journal of the British Astronomical Association 110 (6): 311. Bibcode: 2000JBAA..110..311S.
- ↑ 6.0 6.1 Hale, A.; Bopp, T.; Stevens, J. (July 23, 1995). "IAU Circular No. 6187". IAU. பார்க்கப்பட்ட நாள் 2011-07-05.
- ↑ Lemonick, Michael D. (March 17, 1997). "Comet of the decade Part II". Time இம் மூலத்தில் இருந்து 2008-11-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081130085357/http://www.time.com/time/magazine/article/0,9171,986055,00.html. பார்த்த நாள்: 2008-10-30.
- ↑ Newcott, William (December 1997). "The Age of Comets". National Geographic Society. பார்க்கப்பட்ட நாள் 7 December 2009.
Nobody sends telegrams anymore...
- ↑ Bopp, Thomas (1997). "Amateur Contributions in the study of Comet Hale–Bopp". Earth, Moon, and Planets 79 (1–3): 307–308. doi:10.1023/A:1006262006364. Bibcode: 1997EM&P...79..307B.
- ↑ "The Lost Tomb", Kent Weeks, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-297-81847-3, page 198
வெளி இணைப்புகள்
[தொகு]- Cometography.com: ஹேல்-பொப் வால்வெள்ளி - (ஆங்கில மொழியில்)
- நாசாவின் ஹேல்-பொப் பக்கம் - (ஆங்கில மொழியில்)
- CometBase: Comet Hale-Bopp
- CometWatch: Comet Hale-Bopp
- வார்ப்புரு:JPL Small Body
- Shadow and Substance.com: Static orbital diagramபரணிடப்பட்டது 2011-08-27 at the வந்தவழி இயந்திரம்
- Comet Nucleus Animation பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்
- A Dynamical Analysis of the Dust Tail of Comet C/1995 O1 (Hale-Bopp) at High Heliocentric Distances (Kramer : 9 Apr 2014 : arXiv:1404.2562)