தாமசு பாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாமசு பாப் (1997)

தாமசு பாப் (Thomas J. Bopp, பிறப்பு: 1949) ஓர் அமெரிக்க வானியலாளர். இவர் 1995 இல் ஃஏல்-பாப் என்ற வால்வெள்ளியைக் கண்டறிந்ததால் மிகவும் அறியப்படுபவர்.[1] கண்டுபிடிப்பின்போது இவர் கட்டுமானப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாளராக இருந்தார். மேலும் ஃபீனிக்சு பகுதி வட்டார பயில்நிலை வானியலாளராகவும் இருந்தார். இதுவே இவர் கண்டறிந்த முதல் வால்வெள்ளி ஆகும்.

அமெரிக்காவின் கொலராடோவைச் சார்ந்த டென்வரில் 1949இல் பிறந்தார். பிறகு இவர் தன் குடும்பத்தை யங்டவுன், ஓகியோ எனும் இட்த்துக்கு மாறினார். இங்கு இவர் 1967இல் சானே உயர்நிலைப் பள்ளியில்படித்து பட்டம் பெற்றார்.இவர் மகோனிங் கணவாய் வானியல் கழகத்தில் வாழ்நாள் உறுப்பினர் ஆனார். அந்தக் கழகத்தின் 16 இன்ச் எதிர்பலிப்புத் தொலைநோக்கிதான் இவரை வானவெளியின் காதல் கொள்ள வைத்தது. இவர் ஓகியோ மாநிலத்தின் யங்டவுனில் இருந்தயங்டவுன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். இவர் 1980க்குப் பிறகு டசுக்கானைச் சேர்ந்த அரிசோனாவில் வாழ்ந்து வருகிறார்.[2]

1995 சூலை 22ஆம் நாளன்று, இன்று ’ஹேல்-பாப்’ வால்வெள்ளி என்று அழைக்கப்படும் புது வால்வெள்ளியை முதன் முதலாகக் கண்டார். ஆலன் ஃஏல் அவர்களும் இதே வால்வெள்ளியைத் தனியாகக் கண்டுபிடித்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. https://books.google.co.in/books?id=fMVoBQAAQBAJ&pg=PA288&lpg=PA288&dq=Thomas+J.+Bopp+D.Sc&source=bl&ots=0RYcBH5mdK&sig=53J2-Wo4yqSwIz8ANc0SFJEr8Po&hl=ta&sa=X&ved=0CFIQ6AEwCGoVChMI39OI-oyXxwIVBQuOCh3GaQ9y#v=onepage&q=Thomas%20J.%20Bopp%20D.Sc&f=false
  1. https://www.amazon.jobs/team/evi-technologies#jobresults

மேற்கோள்கள்[தொகு]

  1. Ramamurthy G. (August, 2005). Biographical Dictionary of Great Astronomers, Surah Books (pvt) Ltd., Chennai, ISBN 81-7478-697-X.
  2. Newcott, William R. (Dec. 1997). "The age of comets". National Geographic, p. 101.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசு_பாப்&oldid=2720120" இருந்து மீள்விக்கப்பட்டது