விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை
ஆண்டு நிறைவுகள்/இந்தநாளில் தொகுப்பு
சனவரி - பெப்ரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - டிசம்பர்
இப்போது 13:10 மணி வியாழன், சனவரி 24, 2019 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க
சூலை 1: சோமாலியா, ருவாண்டா, புருண்டி - விடுதலை நாள், கானா - குடியரசு நாள், கனடா நாள்
- 1825 – ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.
- 1947 – இந்தியாவுக்கு முழு விடுதலையை ஆகத்து 15 ஆம் நாளன்று வழங்க பிரித்தானிய நாடாளுமன்றம் முடிவெடுத்தது.
- 1949 – கொச்சி, திருவிதாங்கூர் சமத்தானங்கள் திருவாங்கூர்-கொச்சி என்ற ஒரே மாநிலமாக (பின்னைய கேரளம்) இணைந்தன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கொச்சி இராச்சியம் முடிவுக்கு வந்தது.
- 1997 – ஆங்காங்கின் அதிகாரத்தை சீனா பொறுப்பெடுத்துக் கொண்டதன் மூலம் 156 ஆண்டுகால பிரித்தானியக் குடியேற்றவாத அரசு முடிவுக்கு வந்தது.
- 2004 – காசினி-இயூஜென்சு (படம்) விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.
அண்மைய நாட்கள்: சூன் 30 – சூலை 2 – சூலை 3
- 1776 – அமெரிக்கப் புரட்சி: பெரிய பிரித்தானியாவுடனான தொடர்புகளைத் துண்டிக்கும் தீர்மானத்தை அமெரிக்கக் காங்கிரசு எடுத்தது. ஆனாலும் இறுதி விடுதலைச் சாற்றுரை சூலை 4 இலேயே வெளியிடப்பட்டது.
- 1881 – அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் (படம்) சுடப்பட்டுப் படுகாயமடைந்து செப்டம்பர் 19இல் இறந்தார்.
- 1897 – பிரித்தானிய-இத்தாலியப் பொறியாளர் மார்க்கோனி வானொலிக்கான காப்புரிமத்தை இலண்டனில் பெற்றார்.
- 1976 – வியட்நாம் குடியரசின் வீழ்ச்சியை அடுத்து 1954 முதல் பிரிந்திருந்த கம்யூனிச வடக்கு வியட்நாம் தெற்கு வியட்நாமுடன் வியட்நாம் சோசலிசக் குடியரசு என்ற பெயரில் இணைந்தது.
அண்மைய நாட்கள்: சூலை 1 – சூலை 3 – சூலை 4
சூலை 3: பெலருஸ் - விடுதலை நாள் (1944)
- 1844 - பெரிய ஓக் (படம்) பறவைகளின் கடைசி சோடி ஐசுலாந்தில் கொல்லப்பட்டன.
- 1872 – 1923 இல் ஆரம்பிக்கப்பட்ட பட்டிக்கோட்டா குருமடம் யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் வட்டுக்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் பிடியில் பிரெஞ்சுப் போர்க்கப்பல்கள் சிக்குவதைத் தடுக்க ஜிப்ரால்ட்டரில் இருந்து புறப்பட்ட பிரித்தானியப் போர்க் கப்பல்களால் தாக்கப்பட்டதில் பிரான்சின் மூன்று கப்பல்கள் 1200 கடற்படையினருடன் மூழ்கின.
- 1988 – அமெரிக்க போர்க் கப்பல் வின்செனசு பாரசிக வளைகுடா மீது பறந்த ஈரானிய பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 290 பேரும் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: சூலை 2 – சூலை 4 – சூலை 5
சூலை 4: ஐக்கிய அமெரிக்கா - விடுதலை நாள்
- 1776 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா விடுதலை பெறும் அமெரிக்க விடுதலைச் சாற்றுரையை அமெரிக்க காங்கிரசு ஏற்றுக் கொண்டது.
- 1837 – உலகின் முதலாவது அதி-தூர தொடர்வண்டிப் போக்குவரத்து, பர்மிங்காம், லிவர்பூல் நகர்களுக்கிடையே தொடங்கப்பட்டது.
- 1902 – இந்தியாவின் சமயத் தலைவர் சுவாமி விவேகானந்தர் (படம்) இறப்பு.
- 1946 – 381 ஆண்டு கால குடியேற்றவாதிகளின் ஆட்சியின் பின்னர் பிலிப்பீன்சு ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1947 – பிரித்தானிய இந்தியாவை இந்தியா, பாக்கித்தான் என இரண்டு நாடுகளாகப் பிரிக்கும் சட்டமூலம் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையில் முன்வைக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: சூலை 3 – சூலை 5 – சூலை 6
சூலை 5: வெனிசுவேலா, அல்ஜீரியா, கேப் வேர்ட்: விடுதலை நாள்
- 1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீசப் படையினர் பேரோ லொபேஸ் டி சூசா தலைமையில் கண்டி இராச்சியம் மீது திடீர்த் தாக்குதலை ஆரம்பித்துத் தோல்வியடைந்தனர்.
- 1687 – ஐசாக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை (படம்) வெளியிட்டார்.
- 1977 – பாக்கித்தானில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் சுல்பிக்கார் அலி பூட்டோ பதவி இழந்தார்.
- 1987 – ஈழப் போர்: விடுதலைப் புலிகளின் முதல் கரும்புலித் தாக்குதல் மில்லரினால் யாழ்ப்பாணம், நெல்லியடி இராணுவ முகாம் மீது நடத்தப்பட்டது.
- 2016 – யூனோ விண்கலம் வியாழன் கோளை அடைந்து தனது 20-மாத ஆய்வை அக்கோளில் ஆரம்பித்தது.
அண்மைய நாட்கள்: சூலை 4 – சூலை 6 – சூலை 7
சூலை 6: மலாவி (1964), கொமொரோசு (1975) - விடுதலை நாள்
- 1535 – சேர் தாமஸ் மோர் நாட்டுத் துரோகத்துக்காக இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரினால் தூக்கிலிடப்பட்டார்.
- 1885 – லூயி பாஸ்ச்சர் தான் கண்டுபிடித்த தடுப்பூசி மருந்தை வெறிநாய்க்கடியினல் நோய் வாய்ப்பட்ட 9 வயது யோசப் மைசிட்டர் (படம்) என்ற சிறுவனில் வெற்றிகரமாகச் சோதனை செய்தார்.
- 1947 – சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கிகளைத் தயாரிக்க ஆரம்பித்தது.
- 1962 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவைக் கொலை செய்த குற்றத்திற்காக சோமாராம தேரர் என்ற பௌத்தத் துறவி தூக்கிலிடப்பட்டார்.
- 2006 – 44 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய சீனப் போரின் போது மூடப்பட்ட நாதூ லா கணவாய் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: சூலை 5 – சூலை 7 – சூலை 8
சூலை 7: சொலமன் தீவுகள் - விடுதலை நாள் (1978)
- 1799 – பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங் (படம்) தலைமையில் அவனது படையினர் லாகூரை அடுத்துள்ள பகுதிகளைப் பிடித்தனர்.
- 1865 – ஆபிரகாம் லிங்கன் கொலை தொடர்பான நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1896 – இந்தியாவில் முதற் தடவையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1915 – 1915 சிங்களவர் முசுலிம்கள் கலவரம்: இலங்கையில் முசுலிம்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விட்டார் என்ற குற்றச்சாட்டில் என்றி பெதிரிசு என்ற இராணுவ அலுவலர் கொழும்பில் தூக்கிலிடப்பட்டார்.
- 2005 – லண்டனில் 4 சுரங்கத் தொடருந்து நிலையங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: சூலை 6 – சூலை 8 – சூலை 9
- 1497 – வாஸ்கோ ட காமா (படம்) இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணத்தை ஆரம்பித்தார்.
- 1985 – திம்புப் பேச்சுவார்த்தைகள்: இலங்கை அரசுக்கும் ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
- 1988 – பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்குச் சென்று கொண்டிருந்த ஐலண்டு விரைவுவண்டி பெருமண் பாலத்தில் தடம் புரண்டு அஷ்டமுடி ஏரியில் வீழ்ந்ததில் 105 பயணிகள் உயிரிழந்தனர், 200 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- 1989 – ஈழத்து நாடகத்துறையின் முன்னோடி, நடிகமணி வி. வி. வைரமுத்து இறப்பு.
அண்மைய நாட்கள்: சூலை 7 – சூலை 9 – சூலை 10
சூலை 9: விடுதலை நாள் (அர்கெந்தீனா)
- 1868 – அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் முழுக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.
- 1956 – யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில், வண்ணார்பண்ணை சிவன் கோவில், பெருமாள் கோயில் ஆகியன தாழ்த்தப்பட்டோரின் வழிபாட்டுக்காகத் திறந்து விடப்பட்டன.
- 1995 – நவாலி தேவாலயத் தாக்குதல்: யாழ்ப்பாணத்தில் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 141 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
- 2011 – தெற்கு சூடான் (படம்) சூடானில் இருந்து பிரிந்து தனி நாடானது.
அண்மைய நாட்கள்: சூலை 8 – சூலை 10 – சூலை 11
ஜூலை 10: பகாமாசு - விடுதலை நாள் (1973)
- 1796 – ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை கார்ல் பிரீடிரிஷ் காவுஸ் (படம்) கண்டுபிடித்தார்.
- 1913 – கலிபோர்னியாவின் சாவுப் பள்ளத்தாக்கில் வெப்பநிலை 134 °ப (57 °செ) ஆகப் பதியப்பட்டது. உலகில் பதியப்பட்ட அதியுயர் வெப்பநிலை இதுவாகும்.
- 1947 – முகம்மது அலி ஜின்னா பாக்கித்தானின் முதலாவது ஆளுநராக பிரித்தானியப் பிரதமர் கிளமெண்ட் அட்லீயினால் பரிந்துரைக்கப்பட்டார்.
- 1973 – வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாக்கித்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- 1997 – நியண்டர்தால் மனிதனின் எலும்புக்கூட்டில் இருந்து பெறப்பட்ட டி. என். ஏ. ஆய்வுகளில் இருந்து கூர்ப்பின் "நவீன மனிதரின் ஆப்பிரிக்கத் தோற்றக் கோட்பாட்டுக்கு" ஆதரவான முடிவுகள் இலண்டனில் பெறப்பட்டன.
அண்மைய நாட்கள்: சூலை 9 – சூலை 11 – சூலை 12
- 1735 – குறுங்கோள் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்தினுள் இந்நாளில் வந்ததாகக் கணிப்புகள் தெரிவித்தன. இது பின்னர் 1979 இல் மீண்டும் நிகழ்ந்தது.
- 1973 – பிரேசில் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 134 பேரில் 123 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தை அடுத்து விமானங்களில் புகைத்தல் தடை செய்யப்பட்டது.
- 1895 – லூமியேர் சகோதரர்கள் (படம்) அறிவியலாளர்களுக்கு திரைப்படத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினர்.
- 1979 – அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் ஸ்கைலேப் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்து அழிந்தது.
- 2006 – மும்பை தொடருந்துக் குண்டுவெடிப்புகள்: மும்பாயில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: சூலை 10 – சூலை 12 – சூலை 13
சூலை 12: சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி (1975), கிரிபட்டி (1979) - விடுதலை நாள்
- 1799 – ரஞ்சித் சிங் (படம்) லாகூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பஞ்சாபின் (சீக்கியப் பேரரசு) ஆட்சியைப் பிடித்தான்.
- 1806 – 16 செருமானிய மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்.
- 1961 – கடக்வாசுலா, பான்செத் அணைகளில் ஏற்பட்ட பழுதின் காரணமாக புனேயில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தில் மூழ்கி 2,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1967 – அமெரிக்காவின் நுவார்க் நகரில் பெரும் இனக்கலவரம் வெடித்தது. 26 பேர் உயிரிழந்தனர், 700 பேர் காயமடைந்தனர்.
அண்மைய நாட்கள்: சூலை 11 – சூலை 13 – சூலை 14
- 1869 – இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.
- 1878 – பெர்லின் உடன்பாட்டை அடுத்து ஐரோப்பிய நாடுகள் பால்கன் குடாவின் வரைபடத்தை மாற்றியமைத்தன. செர்பியா, மொண்டெனேகுரோ, உருமேனியா ஆகியன முழுமையாக உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலை அடைந்தன.
- 1930 – முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் உருகுவையில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.
- 1989 – இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கம் (படம்), வெ. யோகேசுவரன் ஆகியோர் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: சூலை 12 – சூலை 14 – சூலை 15
ஜூலை 14: பிரான்சு - பாஸ்டில் நாள்
- 1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசு மக்கள் பாஸ்டில் (படம்) சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர்.
- 1933 – செருமனியில் நாட்சி கட்சி தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.
- 1965 – மரைனர் 4 விண்கலம் செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.
- 1976 – கனடாவில் மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டது.
- 2016 – பிரான்சில் நீசு நகரில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 86 பேர் உயிரிழந்தனர், 400 பேர் காயமடைந்தனர்.
அண்மைய நாட்கள்: சூலை 13 – சூலை 15 – சூலை 16
- 1099 – முதலாம் சிலுவைப் போர்: கிறித்தவப் போர் வீரர்கள் கடினமான முற்றுகையின் பின்னர், எருசலேம் திருக்கல்லறைத் தேவாலயத்தைக் கைப்பற்றினர்.
- 1799 – நெப்போலியனின் எகிப்தியப் படையெடுப்பின் போது, எகிப்தின் ரொசெட்டா என்ற இடத்தில் பிரெஞ்சுக் கப்பல் கலபதி ரொசெட்டாக் கல் ஒன்றைக் கண்டெடுத்தார்.
- 1857 – சிப்பாய்க் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.
- 1903 - பெருந்தலைவர் காமராசர் (படம்) பிறப்பு.
- 1991 – ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.
அண்மைய நாட்கள்: சூலை 14 – சூலை 16 – சூலை 17
- 622 – முகம்மது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இசுலாமிய நாட்காட்டியின் தொடக்கமாகும்.
- 1849 – காத்தலோனியாவில் அந்தோனி மரிய கிளாரட் அமல மரியின் மறைப்போத மைந்தர்கள் சபையை நிறுவினார்.
- 1942 – பெரும் இன அழிப்பு: பிரெஞ்சு அரசு பாரிசில் உள்ள அனைத்து 13,152 யூதர்களையும் கைது செய்து அவுசுவிட்சு வதை முகாமுக்கு அனுப்பக் காவற்துறையினருக்கு உத்தரவிட்டது.
- 1945 – மன்காட்டன் திட்டம்: ஐக்கிய அமெரிக்கா புளுட்டோனியம்-கொண்ட அணுக்கரு ஆயுதங்களை நியூ மெக்சிகோ, அலமொகோர்தோ என்ற இடத்தில் வெற்றிகரமாக சோதித்தது (படம்).
- 2004 – தமிழ்நாடு கும்பகோணத்தில் தனியார் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 93 பிள்ளைகள் தீயிற் கருகி மாண்டனர்.
அண்மைய நாட்கள்: சூலை 15 – சூலை 17 – சூலை 18
- 1911 – யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தின் திருமண விதிகளுக்கு மாற்றாக "யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்" கொண்டுவரப்பட்டது.
- 1918 – போல்செவிக்குகளின் உத்தரவின் பேரில் உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசும் அவரது முழுக் குடும்பத்தினரும் (படம்) எக்கத்தரீன்பூர்க் நகரில் கொல்லப்பட்டனர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் மூன்று முக்கிய தலைவர்கள் வின்ஸ்டன் சர்ச்சில், ஹாரி எஸ். ட்ரூமன், ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் போரில் தோல்வியடைந்த செருமனியின் எதிர்காலத்தை நிர்ணயிக்க செருமனியின் போட்சுடாம் நகரில் உச்சி மாநாட்டை நடத்தினர்.
- 1996 – நியூயோர்க்கில் லோங் தீவில் பாரிசு சென்றுகொண்டிருந்த போயிங் 747 அமெரிக்க விமானம் வெடித்துச் சிதறியதில் அனைத்து 230 பேரும் உயிரிழந்தனர்.
- 2014 – மலேசியா எயர்லைன்சு விமானம் 17 உக்ரைன்-உருசிய எல்லையில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைத்து 298 பேரும் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: சூலை 16 – சூலை 18 – சூலை 19
ஜூலை 18: நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள்
- 64 – உரோமில் பெரும் தீ பரவி நகரின் வணிக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ (படம்) மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.
- 1916 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் உயிரிழந்தனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.
- 1994 – ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டன் நாட்டுப்பற்று முன்னணியினர் ருவாண்டாவின் வடமேற்குப் பகுதியைக் கைப்பற்றினர். இடைக்கால அரசு சயீருக்குத் தப்பியோடியது. இனப்படுகொலை முடிவுக்கு வந்தது.
- 1996 – ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது. 1,200 படையினர் கொல்லப்பட்டனர்.
அண்மைய நாட்கள்: சூலை 17 – சூலை 19 – சூலை 20
ஜூலை 19: மியான்மார் – மாவீரர் நாள்
- 1845 – அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் பரவிய தீ 30 பேர் உயிரிழந்தனர், 345 கட்டடங்கள் அழிந்தன.
- 1947 – இசை ஆய்வாளர் சுவாமி விபுலாநந்தர் (படம்) இறப்பு.
- 1947 – பர்மாவின் நிழல் அரசின் பிரதமரும் தேசியவாதியுமான ஆங் சான் மற்றும் அவரது ஆறு அமைச்சர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
- 1979 – நிக்கராகுவாவில் அமெரிக்க சார்பு சமோசா அரசு சண்டினீஸ்டா கிளர்ச்சிவாதிகளால் கவிழ்க்கப்பட்டது.
- 1983 – மனிதத் தலையின் முதலாவது முப்பரிமாண வடிவ வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி வெளியிடப்பட்டது.
அண்மைய நாட்கள்: சூலை 18 – சூலை 20 – சூலை 21
சூலை 20: அனைத்துலக சதுரங்க நாள், விடுதலை நாள் (கொலம்பியா, 1810)
- 1951 – யோர்தான் மன்னர் முதலாம் அப்துல்லா எருசலேமில் வெள்ளிக்கிழமைத் தொழுகையின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1960 – உலகின் முதலாவது பெண் அரசுத்தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா (படம்) இலங்கையின் பிரதமராகத் தெரிவானார்.
- 1969 – அப்பல்லோ திட்டம்: நாசாவின் அப்பல்லோ 11 சந்திரனில் இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்றோங், எட்வின் ஆல்ட்ரின் ஆகியோர் முதல் மனிதர்களாக சந்திரனில் காலடி வைத்தனர்.
- 2015 – ஐம்பதாண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்காவும் கியூபாவும் முழுமையான தூதரக உறைவை ஏற்படுத்திக் கொண்டன.
அண்மைய நாட்கள்: சூலை 19 – சூலை 21 – சூலை 22
ஜூலை 21: குவாம் - விடுதலை நாள் (1944), சிங்கப்பூர் - இன சமத்துவ நாள்
- 1954 – ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
- 1964 – சிங்கப்பூரில் மலே இனத்தவர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் கலவரம் மூண்டதில் 23 பேர் உயிரிழந்து பலர் காயமடைந்தனர்.
- 1969 – நீல் ஆம்ஸ்ட்ராங் (படம்) சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றார்.
- 2001 – புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் இறப்பு.
- 2011 – நாசாவின் விண்ணோடத் திட்டம் அட்லாண்டிசு தரையிறங்கியதுடன் நிறைவு பெற்றது.
அண்மைய நாட்கள்: சூலை 20 – சூலை 22 – சூலை 23
சூலை 22: மர்தலேன் மரியாள் (படம்) திருவிழா, π அண்ணளவு நாள்.
- 1706 – இங்கிலாந்துக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையில் ஒன்றிணைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது பின்னர் பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவாக வழிவகுத்தது.
- 1823 – யாழ்ப்பாணத்தில் பட்டிக்கோட்டா குருமடம் டானியேல் வாரன் புவர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1944 – போலந்தின் தேசிய விடுதலைக்கான குழு நாட்டில் சீர்திருத்தங்களையும், நாட்சிகளுக்கெதிரான போரை முன்னெடுத்துச் செல்லவும், தொழிற்சாலைகளை தேசிய மயமாக்கும் திட்டத்தையும் அறிவித்தது. போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது.
- 1962 – நாசாவின் மரைனர் 1 விண்கலம் ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது.
- 1963 – முடிக்குரிய குடியேற்றமான சரவாக் சுயாட்சி பெற்றது. இதே ஆண்டு செப்டம்பர் 16 இல் இது மலேசியக் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
அண்மைய நாட்கள்: சூலை 21 – சூலை 23 – சூலை 24
சூலை 23: எகிப்து - புரட்சி நாள் (1952)
- 1927 – அனைத்திந்திய வானொலியின் முதலாவது வானொலி நிலையம் பம்பாய் நகரில் தனது ஒலிபரப்பு சேவையை ஆரம்பித்தது.
- 1983 – கறுப்பு யூலை: இலங்கையில் இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆரம்பமானது (படம்).
- 1995 – ஏல்-பாப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.
- 1999 – மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை: ஊதிய உயர்வு கேட்டு தமிழ்நாடு, திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியின் போது காவல்துறை நடத்திய தடியடியில் பதினேழு பேர் உயிரிழந்தனர்.
அண்மைய நாட்கள்: சூலை 22 – சூலை 24 – சூலை 25
- 1911 – பெருவில் இன்காக்களின் தொலைந்த நகரம் எனக் கருதப்பட்ட மச்சு பிச்சு (படம்) என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க நாடுகாண் பயணி இராம் பிங்கம் கண்டுபிடித்தார்.
- 1915 – சிகாகோ ஆற்றில் ஈஸ்ட்லாண்ட் என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 844 பேர் உயிரிழந்தனர்.
- 1983 – இலங்கையில் தமிழருக்கு எதிரான கறுப்பு யூலை கலவரங்கள் இரண்டாம் நாளாகத் தொடர்ந்தது.
- 2001 – கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்: கொழும்பில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுதலைப் புலிகளினால் தாக்கப்பட்டதில் பல விமானங்கள் அழிக்கப்பட்டன.
அண்மைய நாட்கள்: சூலை 23 – சூலை 25 – சூலை 26
- 1583 – குங்கோலிம் கிளர்ச்சி: கோவாவில் போர்த்துக்கீச ஆட்சிக்கு எதிரான இந்துக்களின் கிளர்ச்சி இடம்பெற்றது. 5 இயேசு சபை மதகுருமார், ஒரு ஐரோப்பியர், 14 இந்தியக் கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியாளர்கள் பலர் பின்னர் அரசினால் கொல்லப்பட்டனர்.
- 1603 – இசுக்கொட்லாந்தின் ஆறாம் யேம்சு இங்கிலாந்தின் மன்னராக (முதலாம் யேம்சு) முடிசூடினார். இதன் மூலம் இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் ஒன்றிணைந்தன.
- 1898 – புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்கா எசுப்பானியாவிடம் இருந்து கைப்பற்றியது.
- 1983 – கொழும்பு வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட 37 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் கைதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர். தெற்கு, மலையகப் பகுதிகளில் கறுப்பு ஜூலை (படம்) படுகொலைகள் உச்சக்கட்டத்தை எட்டியது.
அண்மைய நாட்கள்: சூலை 24 – சூலை 26 – சூலை 27
சூலை 26: லைபீரியா (1847), மாலைதீவு (1965) - விடுதலை நாள்
- 1509 – விஜயநகரப் பேரரசராக கிருஷ்ணதேவராயன் (படம்) முடிசூடினார்.
- 1848 – மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக வீரபுரன் அப்பு தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. வீரபுரன் அப்பு கைது செய்யப்பட்டு ஆகத்து 8 இல் தூக்கிலிடப்பட்டான்.
- 1957 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வாவிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது..
- 1963 – யுகோசுலாவியாவில் ஸ்கோப்ஜே நகரில் (இன்றைய மாக்கடோனியக் குடியரசு) நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,100 பேர் உயிரிழந்தனர்.
- 1974 – ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது.
அண்மைய நாட்கள்: சூலை 25 – சூலை 27 – சூலை 28
- 1921 – இன்சுலின் இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதாக டொராண்டோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
- 1953 – கொரியப் போர் முடிவு: ஐக்கிய அமெரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகியவற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு (படம்) ஏற்பட்டது.
- 1955 – இலண்டனில் இருந்து இசுதான்புல் சென்று கொண்டிருந்த 'எல் அல்' விமானம் பல்கேரியாவின் வான் பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டதில், அனைத்து 58 பயணிகளும் உயிரிழந்தனர்.
- 1983 – கறுப்பு யூலை: வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகள்: கொழும்பு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற இரண்டாம் கட்ட படுகொலை நிகழ்வில் 18 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
- 2002 – உக்ரைனின் லிவீவ் நகரில் வான் களியாட்ட நிகழ்ச்சியின் போது சுகோய் எஸ்.யு-27 போர் விமானம் மக்களின் மீது வீழ்ந்ததில் 85 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்தனர்.
அண்மைய நாட்கள்: சூலை 26 – சூலை 28 – சூலை 29
சூலை 28: உலகக் கல்லீரல் அழற்சி நாள்
- 1868 – ஆபிரிக்க அமெரிக்கர்களுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
- 1914 – செர்பியா மீது ஆத்திரியா-அங்கேரி போர் தொடுத்தது. முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் ஆம்பர்கு நகர் மீது பிரித்தானியா குண்டுத் தாக்குதலை அடுத்து அங்கு நெருப்புப்புயல் உண்டாகியதில் 42,000 செருமனியர்கள் உயிரிழந்தனர்.
- 1945 – அமெரிக்கப் போர் விமானம் ஒன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் (படம்) 79ம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர், 26 பேர் காயமடைந்தனர்.
- 2005 – ஐரியக் குடியரசுப் படை வட அயர்லாந்தில் தனது 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தது.
அண்மைய நாட்கள்: சூலை 27 – சூலை 29 – சூலை 30
- 1818 – பிரெஞ்சு இயற்பியலாளர் பிரெனெல் புகழ்பெற்ற "ஒளியின் விளிம்பு விளைவு பற்றிய தனது குறிப்புகளை" வெளியிட்டார்.
- 1907 – சேர் பேடன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க முதற் படியாக இருந்தது.
- 1948 – 14-வது ஒலிம்பிக் விளையாட்டுகள்: இரண்டாம் உலகப் போர் காரணமாக 12 ஆண்டுகளாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இலண்டனில் ஆரம்பமாயின.
- 1987 – இலங்கை-இந்திய ஒப்பந்தம் கொழும்பில் கையெழுத்திடப்பட்டது. இதனையடுத்து இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது இலங்கை இராணுவத்தினன் ஒருவனால் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி (படம்) துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டுக் காயம் அடைந்தார்.
- 1999 – இலங்கையின் தமிழ் அரசியல்வாதி நீலன் திருச்செல்வம் தற்கொலை குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.
அண்மைய நாட்கள்: சூலை 28 – சூலை 30 – சூலை 31
சூலை 30: வனுவாட்டு - விடுதலை நாள் (1980), பன்னாட்டு நட்பு நாள்
- 1626 – இத்தாலியில் நாபொலி நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர்.
- 1756 – கட்டிடக் கலைஞர் பிரான்செசுக்கோ ராசுத்திரெல்லி சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் தாம் அமைத்த கத்தரீன் அரண்மனையை (படம்) உருசிய அரசி எலிசபெத்திடம் கையளித்தார்.
- 1930 – மொண்டேவீடியோ நகரில் நடைபெற்ற முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் உருகுவை அணி முதலாவது உலகக்கோப்பையை வென்றது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்காவின் கடற்படைக் கப்பலை மூழ்கடித்ததில் 883 கடற்படையினர் உயிரிழந்தனர்.
- 2012 – ஆந்திரப் பிரதேசம், நெல்லூரில் தமிழ்நாடு விரைவுவண்டி தீப்பிடித்ததில் 32 பயணிகள் உயிரிழந்தனர்.
அண்மைய நாட்கள்: சூலை 29 – சூலை 31 – ஆகத்து 1
- 1715 – கியூபா, அவானாவில் இருந்து எசுப்பானியா திரும்பிக் கொண்டிருந்த 12 எசுப்பானிய புதையல் கப்பல்களில், 11 கப்பல்கள் புளோரிடா கரையில் மூழ்கின. சில நூற்றாண்டுகளின் பின்னர் இவற்றின் சிதைவுகளில் இருந்து பெருமளவு புதையல் கண்டுபிடிக்கப்பட்டன.
- 1805 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.
- 1865 – உலகின் முதலாவது குற்றகலத் தொடருந்து சேவை ஆத்திரேலியா, குயின்சுலாந்து மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1971 – அப்பல்லோ 15 (படம்) விண்வெளி வீரர்கள் தளவுளவியை சந்திரனில் செலுத்திச் சாதனை புரிந்தனர்.
- 1992 – நேபாளத் தலைநகர் காட்மாண்டில் தாய்லாந்து விமானம் ஒன்று மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 113 பேரும் உயிரிழந்தனர்.
அண்மைய நாட்கள்: சூலை 30 – ஆகத்து 1 – ஆகத்து 2