விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 23
Jump to navigation
Jump to search
ஏப்ரல் 23: உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்
- 1639 – புனித ஜார்ஜ் கோட்டை (படம்) சென்னை மாகாணத்தில் அமைக்கப்பட்டது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: எர்மன் கோரிங் நாட்சி ஜெர்மனியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு அனுமதி கேட்டு இட்லருக்குத் தந்தி அனுப்பினார்.
- 1966 – முதலாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் நிறைவடைந்தது.
- 1967 – சோவியத்தின் சோயுஸ் 1 விண்கலம் விளாதிமிர் கொமொரோவுடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1971 – வங்காளதேச விடுதலைப் போர்: பாக்கித்தான் இராணுவம் கிழக்குப் பாக்கித்தானில் ஜதிபாங்கா என்ற இடத்தில் 3,000 இற்கும் அதிகமான இந்துக்களைக் கொன்றனர்.
- 1993 – இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
- 1993 – எரித்திரியாவில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் எதியோப்பியாவில் இருந்து பிரிவதற்கு எரித்திரியர்கள் பெருமளவில் ஆதரவாக வாக்களித்தனர்.
- 2005 – முதலாவது யூடியூப் காணொளி வெளியிடப்பட்டது.
அண்மைய நாட்கள்: ஏப்ரல் 22 – ஏப்ரல் 24 – ஏப்ரல் 25