வான் மாகாணம்

ஆள்கூறுகள்: 38°29′57″N 43°40′13″E / 38.49917°N 43.67028°E / 38.49917; 43.67028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வான் மாகாணம்
துருக்கியின் மாகாணம்
துருக்கியில் வான் மாகாணம் அமைந்துள்ள இடம்
துருக்கியில் வான் மாகாணம் அமைந்துள்ள இடம்
நாடுதுருக்கி
பிராந்தியம்மத்திய கிழக்கு அனடோலியா
துணை பிராந்தியம்வான்
அரசு
 • வாக்காளர் மாவட்டம்வான்
பரப்பளவு
 • மொத்தம்19,069 km2 (7,363 sq mi)
மக்கள்தொகை (2018)[1]
 • மொத்தம்11,23,784
 • அடர்த்தி59/km2 (150/sq mi)
தொலைபேசி குறியீடு0432[2]
வாகனப் பதிவு65

வான் மாகாணம் (Van Province) என்பது வான் ஏரிக்கும், ஈரானிய எல்லைக்கும் இடையில் உள்ள கிழக்கு துருக்கியின் ஒரு மாகாணமாகும். இது 19,069 கிமீ 2 பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும் இது, 2010 ஆம் ஆண்டின் இறுதியில் 1,035,418 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. அதன் அருகிலுள்ள மாகாணங்கள் மேற்கில் பிட்லிசு, தென்மேற்கில் சிறிட், தெற்கே அர்னாக், அக்கரி, வடக்கே அரே ஆகியவை. வான் நகரம் இந்த மாகாணத்தின் தலைநகரமாகும். மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் குறுதிசுக்களாகவும், அசர்பைஜான்கள் சிறிய எண்ணிக்கையிலும் (கோரெசன்னி) உள்ளனர். [3] மெக்மத் எமின் பில்மேசு என்பவர் தற்போதைய ஆளுநராவார். [4]

வரலாறு[தொகு]

இந்த பகுதி ஆர்மீனியர்களின் மையப்பகுதியாக இருந்தது. ஆர்மீனியர்கள் கிமு 3 ஆம் நூற்றாண்டில் ஹேக் என்பவரின் காலத்திலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை உதுமானியப் பேரரசு பூர்வீக மக்களிடமிருந்து அனைத்து நிலங்களையும் கைப்பற்றியது வரை இந்த பகுதிகளில் வாழ்ந்தனர். கிமு 9 ஆம் நூற்றாண்டில் வான் பகுதி அராத்து இராச்சியத்தின் மையமாக இருந்தது. [5] இப்பகுதி அதிகளவு ஆர்மீனிய மக்களின் மையமாக இருந்தது. கிமு 7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதி ஆர்மீனிய ஓரண்டிட்கள் வசமும், கிமு 6 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பாரசீகர்களின் கட்டுப்பாட்டிலும் வந்தது. கிமு 2 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இது ஆர்மீனிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கிமு 1 ஆம் நூற்றாண்டில் தைக்ரானகெர்ட் நகரத்தை நிறுவிய ஆர்மீனிய மன்னர் இரண்டாம் டைக்ரேன்சு ஆட்சியின் போது இது ஒரு முக்கியமான மையமாக மாறியது. [6] 1071 ஆம் ஆண்டில் மலாஸ்கர்ட் போரில் செல்யூக் வெற்றியுடன், வான் ஏரிக்கு வடக்கே, [7] இது செல்ஜுக் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. பின்னர் உதுமானியப் பேரரசின் நூற்றாண்டு கால யுத்தங்களில் அவர்களின் அண்டை நாடான ஈரானிய சபாவித்துகளுடனான போரில் முதலாம் செலிம் அந்த பகுதியை கைப்பற்ற முடிந்தது. இப்பகுதியைக் கைப்பற்ற தொடர்ந்து போர் நடந்தது. மேலும், உதுமானியப்பேரரசும் சபாவித்துகளும் (அவர்களின் அடுத்தடுத்த வாரிசுகளான, அப்சரித்துகளும், குவாஜர்களும்) இடையே பல நூற்றாண்டுகளாக சண்டை நடந்தது. இது 19 ஆம் நூற்றாண்டில் வான் நகரத்தின் ஒரு பகுதியாக மாறியது.

நவீன வரலாறு[தொகு]

2012 பெருநகர நகராட்சிகள் சட்டத்தின்படி (சட்டம் எண் 6360), 750, 000 க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட அனைத்து துருக்கிய மாகாணங்களும் ஒரு பெருநகர நகராட்சியைக் கொண்டிருக்கும். மேலும் பெருநகர நகராட்சிகளுக்குள் உள்ள மாவட்டங்கள் இரண்டாம் நிலை நகராட்சிகளாக இருக்கும். தற்போதைய மாவட்டங்களுக்கு கூடுதலாக மாகாணங்களுக்குள் புதிய மாவட்டங்களையும் இந்த சட்டம் உருவாக்குகிறது. [8] இந்த மாற்றங்கள் 2014 இல் நடந்த உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு, 2014 இல், வான் நகரம் ஒரு பெருநகர நகராட்சியாக மாறியது.[சான்று தேவை]

பூகம்பங்கள்[தொகு]

இந்த மாகாணத்தில் பல பூகம்பங்கள் ஏற்பட்டன. 1881 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பூகம்பத்தால் 95 பேர் உயிரிழந்தனர். 1941 ஆம் ஆண்டில், இது 5.9 இரிக்டேர் சக்தி கொண்ட அழிவுகரமான ஒரு பூகம்பத்தை சந்தித்தது. 2011 ல் மேலும் இரண்டு பூகம்பங்கள் ஏற்பட்டன. இதில் 644 பேர் இறந்தனர். 2608 பேர் காயமடைந்தனர். [9] 23 அக்டோபர் 2011 இல் ஏற்பட்ட 7.2 இரிக்டேர் சக்தி கொண்ட பூகம்பத்தில், 500 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். [10] நவம்பர் 9, 2011 அன்று, 5.6 இரிக்டேர் அளவிலான நிலநடுக்கம் பலரையும் கொன்றது. மேலும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.

மாவட்டங்கள்[தொகு]

இந்த மாகாணம் 14 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. [11]

புகைப்படத் தொகுப்பு[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Van Province
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்_மாகாணம்&oldid=3056467" இருந்து மீள்விக்கப்பட்டது