வளைமூக்கு உள்ளான்
வளைமூக்கு உள்ளான் | |
---|---|
இனப் பெருக்கம் செய்யாத காலத்தில் இறகு நிறம் | |
இனப் பெருக்க காலத்தில் இறகு நிறம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கேலிதிரிசு
|
இனம்: | கெ. பெருஜினியா
|
இருசொற் பெயரீடு | |
கேலிதிரிசு பெருஜினியா (பொண்டோபிதான், 1763) | |
வேறு பெயர்கள் | |
எரோலியா பெருஜினியா |
வளைமூக்கு உள்ளான் (Curlew sandpiper) என்பது ஆர்க்டிக் சைபீரியாவின் தூந்திரத்தில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு சிறிய உள்ளான் ஆகும். இது உலகில் பல பகுதிகளிலுக்கு வலசை போகிறது. இவை குளிர்காலத்தில் முக்கியமாக ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, ஆத்திரேலியா, நியூசிலாந்து[2] போன்ற இடங்களுக்கு வலசை போகிறது. மேலும் வட அமெரிக்காவிலும் இப்பறவைக் காணமுடிகிறது.
விளக்கம்
[தொகு]சிறிய பறவையான இது குளிர்காலத்தில் பெரும்பாலும் தோற்றத்தில் டன்லின் உள்ளானை ஒத்திருக்கும்.[3] ஆனால் அதைவிட சற்று பெரியதான தோன்ற்றம, நீண்ட கீழ்-வளைந்த அலகு, நீண்ட கழுத்து, கால்கள் மற்றும் வெள்ளை பிட்டம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதில் வேறுபடுகின்றன. கோடைக் காலத்தில் இதன் தோற்றம் டன்லின் உள்ளானில் இருந்து பெரிதும் மாறுபட்டிருக்கும். இப்பறவை 18–23 செமீ (7.1–9.1 அங்குலம்) நீளமும், 44-117 கிராம் எடையும்,[4] 38–41 செமீ (15–16 அங்குலம்) இறக்கை அகலமும் கொண்டிருக்கும். இனப்பெருக்க காலத்தில் முதிர்ந்த பறவைகளின் மேல் பகுதி அடர் சாம்பல் நிறத்திலும், அடிப்பகுதி செங்கல்-சிவப்பு நிறத்திலும் காணப்படும். குளிர்காலத்தில், இந்த பறவையின் மேல் பகுதி வெளிர் சாம்பல் நிறத்திலும், அடிப்பகுதி வெள்ளையாகவும், கண்களின் மேற்பகுதியில் வெள்ளை புருவமும் காணப்படும்.
பரவலும் வாழ்விடமும்
[தொகு]வளைமூக்கு உள்ளான் சைபீரியன் ஆர்க்டிக்கில் யமல் தீபகற்பத்திலிருந்து கொலியுச்சின் விரிகுடா வரை இனப்பெருக்கம் செய்கிறது.[5]
இனப்பெருக்கம்
[தொகு]இவை சூன் முதல் ஆகத்து இறுதி வரை இனப்பெருக்கம் செய்கின்றன.[6] இனப்பெருக்க காலங்களில் ஆண் பறவை பெண் பறவையைக் கவர வானில் வட்டமிட்டு பல வித்தைகள் காட்டுகிறது.[7] இவை சதுப்பு நிலம் அல்லது குளத்தின் விளிம்பில் அல்லது தூந்திரத்தின் உலர்ந்த திட்டுகளி கூடு அமைக்கிறது. சராசரியாக 3.8 முட்டைகளை இடும். முட்டைகள் பெண் பறவையால் அடைகாக்கப்பட்டு 19-20 நாட்களில் குஞ்சு பொரிக்கின்றது. குஞ்சுகளை பெண் பறவை 14-16 நாட்கள் பராமரிக்கிறது.[5]
உணவு
[தொகு]இது சதுப்பு நிலத்திலும், கடற்கரையிலும் உள்ள சேற்றில் உணவு தேடுகிறது. முக்கியமாக பார்வை வழியாக உணவை தேடி எடுக்கிறது. இது பெரும்பாலும் பூச்சிகள் மற்றும் பிற சிறிய முதுகெலும்பிலி உயிரினங்களை உண்கிறது.[8]
நிலை
[தொகு]தென்னாப்பிரிக்காவில், குறிப்பாக லாங்கேபான் லகூனில் வளைமூக்கு உள்ளான்களின் எண்ணிக்கை, 1975 மற்றும் 2009 க்கு இடையில் 40% சரிவடைந்துள்ளது தெரியவருகிறது. இதேபோன்ற போக்கு ஆத்திரேலியாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இனப்பெருக்கம் செய்யும் இடங்களில் புவி வெப்பமடைதலினால் ஏற்படும் விளைவுகள் காரணமாக இருக்கக்கூடும்.[9] இது மிகப் பெரிய வாழிட எல்லையைக் கொண்டுள்ளது. இவற்றின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் அதைக் கண்டறிவது மிகவும் கடினம். மேலும் இவற்றின் எண்ணிக்கைக் குறைந்து வருவதாகத் தோன்றுகிறது.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2017). "Calidris ferruginea". IUCN Red List of Threatened Species 2017: e.T22693431A110631069. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22693431A110631069.en. https://www.iucnredlist.org/species/22693431/110631069. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Thomas Alerstam (1993). Bird Migration. Cambridge University Press. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521448222.
- ↑ "Curlew sandpiper". RSPB.
- ↑ Oiseaux.net. "Bécasseau cocorli - Calidris ferruginea - Curlew Sandpiper". www.oiseaux.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-30.
- ↑ 5.0 5.1 Piersma, T.; van Gils, J.; Wiersma, P. (1996). "Curlew sandpiper". In del Hoyo, J.; Elliott, A.; Sargatal, J. (eds.). Handbook of the Birds of the World. Vol. 3: Hoatzin to Auks. Barcelona, Spain: Lynx Edicions. pp. 524–525. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-87334-20-7.
- ↑ Cramp 1983, ப. 341.
- ↑ Holmes, Richard T.; Pitelka, Frank A. (1964). "Breeding behavior and taxonomic relationships of the Curlew Sandpiper". The Auk 81 (3): 362–379. doi:10.2307/4082691. https://sora.unm.edu/node/21327.
- ↑ Cramp 1983, ப. 341–342.
- ↑ de Villiers, M.S., ed. (2009). Birds and Environmental Change: building an early warning system in South Africa. Pretoria: SANBI. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-620-45305-9.
- ↑ "Species". Agreement on the Conservation of African-Eurasian Migratory Waterbirds (AEWA). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.