வலைப்பின்னல் கட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலைப்பின்னல் கட்டமைப்பு (network topology) என்பது கணினி வலையமைப்பு உள்ள பல்வேறுபட்ட மூலங்களின் (இணைப்புகள், கணு) தொகுப்பு ஆகும்.[1] அடிப்படையில் இது வலைப்பின்னல் ஒன்றின் இடவியல்[2] கட்டுமானம் ஆகும், மேலும் இக்கட்டமைப்பு பௌதிகரீதியாக அல்லது தருக்கரீதியாக சித்தரிக்க முடியும். பௌதிக கட்டமைப்பு என்பது வலைப்பின்னலுக்குரிய பல்வேறு கட்டமைப்பை கொண்டிருக்கும். மேலும் இது சாதனங்களின் அமைவிடம், கேபிள் நிறுவல்களை கொண்டிருக்கும் அதேவேளை தருக்கரீதியான கட்டமைப்பு(Logical Topology) என்பது வலைபின்னலினுள் எவ்வாறு தரவு (Data) பாய்ச்சல் நடைபெறுகின்றது இதன்போது அதன் பௌதிக கட்டமைப்பு பற்றி கருத்தில் கொள்ளபடாது. இரண்டு வலைப்பின்னல்கள் ஒரே மாதிரியாக காணப்பட்டபோதிலும் பின்வரும் வேறுபாடுகள் காணப்படலாம் அவையாவன கணுக்களுகிடைபட்ட தூரம், பௌதிகரீதியான தொடர்பு, ஊடுகடத்தல் வேகம் ஆகியனவாகும்.

இதன் ஓர் உதாரணம் குறும்பரப்பு வலையமைப்புகள் (LAN) ஆகும். குறும்பரப்பு வலையமைப்பு (Local Area Network) அல்லது அகக்கணினி வலையமைப்பு என்பது ஒரு வீடு, அல்லது ஒரு கல்லூரியின் சில கட்டிடங்கள் போன்று சிறு பரப்பில் அமைக்கப்பட்டிருக்கும் கணினி வலையமைப்பு ஆகும்.இவ்வலையமைப்பில் உள்ள ஏதாவது ஒரு கணு(Node) மற்றைய சாதனத்துடன் பௌதிகரீதியாக ஒன்று அல்லது ஒன்றிக்கு மேற்பட்ட தொடர்புகளை கொண்டிருக்கும்.இவ்வமைப்பை உருவவியல்ரீதியாக வரையும் போது பௌதிக கட்டமைப்பின் கேத்திரகணித வடிவமைப்பை பெற்றுக்கொள்ள முடியும்,இவ்வடிவமைப்பின்முலம் வலைப்பின்னலின் பௌதிக கட்டமைப்பைப்பற்றி விபரிக்கமுடியும்.மாறாக தர்க்கரீதியாயான கட்டமைப்பானது கூறுகளிடையான தரவுப்பாய்ச்சல் முலம் தீர்மானிக்கபடுகின்றது.

கட்டமைப்பு (Topology)[தொகு]

வலைப்பின்னல் கட்டமைப்பு இரண்டு வகைப்படும்:[3] பௌதிக கட்டமைப்பு,தர்க்கரீயான கட்டமைப்பு.

வலைப்பின்னளில் உள்ள பௌதிக கட்டமைப்பை தொடர்புபடுத்துவதற்கு கம்பி இணைப்புகள் பயன்படுத்தபடுகிறது. இந்த குறிப்பானது எவ்வாறு கம்பி இணைப்புகள் இடப்படுகின்றது,கணுக்களின் அமைவிடம்,கணுக்களுக்கிடைப்பட்ட தொடர்பு மற்றும் கம்பி இணைப்புகள் பற்றி அறிந்துகொள்ள முடியும்.[1] வலையமைப்பின் பெளதிக கட்டமைப்பானது பின்வரும் காரணிகளால் தீர்மானிக்கபடுகின்றது அவையாவன வலைப்பின்னளின் அணுகல் சாதனத்தின் திறன் மற்றும் அதன் ஊடகம், விரும்பிய தவறின் சகிப்புதன்மையின் மட்டம்,மற்றும் கம்பிகளினுடன் தொடர்புடைய செலவினங்கள் அல்லது தொலைத்தொடர்புகளின் சுற்றுகளுடன் தொடர்புடைய செலவினங்கள்.

மாறாக தருக்க கட்டமைப்பியல் என்பது,எவ்வாறு சமிக்ஞை வலைப்பின்னல் ஊடகதின் மீது தொழிபடுகின்றது, அல்லது எவ்வாறு வலைபின்னளில் உள்ள தரவுகள் பெளதிக இணைப்பு இல்லாமல் ஒரு சாதனத்திலிருந்து மற்றைய சாதனத்திற்கு பாய்ச்சல் நடைபெறுகின்றது. ஒரு வலைபின்னளின் தருக்க கட்டமைப்பானது அவசியமாக அதே பௌதிக கட்டமைப்பைபுடன் ஒத்திருக்க வேண்டியதில்லை. உதாரணமாக, அசல் முறுக்கிணைக்கப்பட்ட ஈதர்நெட் ஆனது வலைப்பின்னல் மையம் பாவிகின்றது மேலும் இது தர்க்க பாட்டை கட்டமைப்பை பெளதிக விண்மீன் கட்டமைப்பை பயன்பாடுத்துகின்றது. வளைய ஆனது வளைய கட்டமைபை பாவிகின்றது, ஆனாலும் மீடியா அணுகல் அலகு (MAC) இலிருந்து பௌதிக விண்மீன் கட்டமைப்பாக இணைக்கபட்டிறுககின்றது.

வலையமைப்பின் தருக்கரீதியான வகைபடுத்தலும், பெளதிகரீதியான வகைபடுத்தலும் அதே மாதிரியானது ஆனால் கணுகளிடைய தரவு பரிமாற்றமானது பெளதிக இணைப்புக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது. தருக்க கட்டமைப்பியலானது பொதுவாக பின்வரும் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது அவையாவன கம்பிகள்,பிணைய சாதனங்கள் அல்லது மின் சமிக்ஞைகளின் பாய்ச்சல்,வலைப்பின்னல் நெறிமுறைகள்,பல சந்தர்ப்பங்களில் கணுக்களிடையான மின் சமிக்ஞைகள் தரவு தருக்க ஓட்டதுடன் பொறுந்தி காணப்படும் எனவே தருக்க கட்டமைப்பு மற்றும் சமிக்ஞை கட்டமைப்பு என மாறி மாறி பயன்படுத்தப்படுத்தபடுகின்றது.

தருக்க கட்டமைப்பியலானது மீடியா அணுகல் கட்டுப்பாடு, நெறிமுறைகள் (Protocols) உடன் நெருக்கமாக தொடர்புடையது. தருக்க கட்டமைப்பியலானது மாறும் மிக்க வழிமுறைகளில் routers மற்றும் சுவிட்சுகள்(switches) இணைக்கப்பட்டடிருக்கும்.

வெவ்வேறு வலைப்பின்னல் கட்டமைப்பின் வரைபடம்.

வலைப்பின்னல் கட்டமைப்பானது எட்டு அடிப்படை கட்டமைபை கொண்டிருக்கும்:[4] புள்ளிக்குப்புள்ளி, பாட்டை, விண்மீன், வளைய அல்லது வட்ட, கண்ணி, மரம், கலப்பு, அல்லது டைசி சங்கிலி.

புள்ளிக்குப்புள்ளி (Point to Point)[தொகு]

இரண்டு இறுதிப்புள்ளிகளுக்கு இடையில் ஒரு அர்ப்பணிக்கப்பட்ட இணைப்பு எளிய கட்டமைப்பாகும். மாற்றப்பட்ட புள்ளிக்குப்புள்ளி ஆனது வழக்கமான டெலிபோனி மாதிரி ஆகும். ஒரு நிரந்தர புள்ளிக்குப்புள்ளி வலைப்பின்னல் கட்டமைப்பின் பெறுமதியானது இரண்டு இறுதிப்புள்ளிகளுக்கு இடையில் தடுக்கப்படாமல் தொடர்பு இருக்கிறது. புள்ளிக்குப்புள்ளி கட்டமைப்பின் பெறுமதியானது சந்தாதாரர்களின் சாத்தியமான ஜோடிகள் எண்ணிக்கைகு விகிதாசாமானது மெட்காஃபே தான் சட்டம்.

நிரந்தர (அர்ப்பணிக்கப்பட்ட) (dedicated)
புள்ளிக்குப்புள்ளி பெயரிடுமுறைக்கும் வேறுபாடுகள் புரிந்து கொள்ள எளிதானது,புள்ளிக்குப்புள்ளி என்பது communications channel பயனர்ருக்கு இரண்டு இறுதிப்புள்ளிகளுக்கு நிரந்தர தொடர்புடையது போல் தோன்றும். ஒரு குழந்தையின் தகர்த் தொலைபேசி ஆனது பௌதீகரீதியாக அர்ப்பணிக்கப்பட்ட சேனலுக்கு ஓர் உதாரணமாகும்.
மாறியது (Switched):
circuit-switching அல்லது packet-switching தொழில்நுட்பங்கள், மூலம் ஒரு புள்ளிக்குப்புள்ளி சுற்றானது மாறும் வகையில் உருவாக்கப்பட்ட முடியும் மற்றும் தேவையேற்படாத போது அழிக்கவும் முடியும். இதுவே வழமையான தொலைபேசி அடிப்படை முறை ஆகும்.

பாட்டை (Bus)[தொகு]

பாட்டை வலைப்பின்னல் கட்டமைப்பு
பாட்டை வலையமைப்பு (Bus Topology) என்பது வலையமைப்பு வடிமைப்பில் ஒன்றாகும். இதில் வாங்கிகள் (கிளையண்ட்ஸ்) ஒரு பொதுவான ஓர் ஊடகத்தைப் பாவிக்கும் அது பாட்டை (பஸ்) என்று அழைக்கப்படும். பொதுவாக கணினியின் தாய்பலகையில் (மதபோட் Motherboard) கணினி வலையமைப்புக்களிலும் இதைக் காணலாம்.

பாட்டை வலையைப்பானது பல்வேறு வாங்கிகளை ஒன்றாக இணைப்பதற்கு இலகுவான வழிமுறையாக இருந்தாலும் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட வாங்கிகள் தொடர்பினை மேற்கொள்ள முயன்றால் தரவுப் பொதிகள் (Data packets) மோதலிற்கு உள்ளாகும். சில வலையைப்புக்களில் தரவுப் பொதிகளில் மோதற் தவிர்பு யுக்தியைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலான வலையைப்புக்களில் பல் அணுக்கத்திற்கான காவியை உணரும் (Carrier Sense Multiple Access) தொழில் நுட்பத்தையே கொண்டுள்ளன.

இப்பொழுது கம்பியிணைப்புக்கள் பெரும்பாலும் இதைக் கைவிட்டுவிட்டாலும் கம்பியற்ற இணைப்புக்கள் (Wireless) இணைப்புக்கள் பாட்டை இணைப்புக்களாகக் கருதலாம். பாட்டைத் வலையமைப்பில் நேரடியாகவே புதிய சாதனங்களை இணைத்துக் கொள்ளலாம்.

விண்மீன் (Star)[தொகு]

விண்மீன் வலையமைப்பு கட்டமைப்பு

விண்மீன் வலையமைப்பு (star network) இன்று கணினி வலையமைப்பில் மிகவும் பரவலாகப் பாவிக்கப்பட்டு வரும் வலையமைப்பாகும். இது ஈதர்நெற் தொழில் நுட்பத்தில் பாவிக்கக்கூடியது. இவ்வகை வலையமைப்பில் ஒவ்வொரு கணினியும் நிலைமாற்றி (switch) அல்லது கூடுமையத்துடன் (ஹப், hub) இணைக்கப்பட்டிருக்கும். இதனால் ஏதாவது ஒரு மின்கம்பி (cable) அறுந்தாலும் மீதி வலையமைப்புத் தொடர்பு அறாமல் இருக்கும். வளைய வலையமைப்பும் (Ring network) உண்மையில் விண்மீன் வலையமப்பு போன்றே இணைக்கப்படும், பின்னர் மென்பொருள் ஊடாக வளைய வலையமைப்பு நடைமுறைப்படுத்தப்படும்.

விண்மீன் வலையமைப்பில் எல்லா வலையைப்பில் உள்ளனவும் நடு நிலையத்தில் இணைக்கபடுவதால் இவ்வகை இணைப்புக்கள் பழுதடைவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகும். பெருநகர் பரப்பு வலையமைப்புகள் விண்மீன் வலையமைப்பு முறையிலேயே இணைக்கப்படுகின்றது.

வளைய (Ring)[தொகு]

வளைய வலையமைப்பு கட்டமைப்பு
வளைய வலையமைப்பு என்பது கணினி வலையமைப்பில் ஒரு வகையாகும். இதில் ஒவ்வொரு கணினியும் மற்ற இரு கணினிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு தொடர்ந்து கணினிகள் இணைக்கப்பட்டு ஒரு வளையத்தை உருவாக்குகின்றன. இதுவே வளைய வலையமைப்பு என்று அழைக்கப்படுகிறது. வளைய வலையமைப்பில் எந்த இரண்டு இணைப்பிற்கும் ஒரே வழியே உள்ளதால் ஓர் அந்தத்தில் (Node) உள்ள இணைப்பு பழுதடைந்தால் முழுவலையமைப்புமே பாதிப்படையும். கண்ணாடியிழைகளூடாகத் தரவுப் பரிமாற்றத்தில் (FDDI) வலையமைப்பில் பிழை ஏற்படும் போது மணிக்கூட்டுத் திசையாகவும் அதற்கு எதிர்த் திசையாகவும் தரவு அனுப்படுவதால் இந்தப் பிரச்சினை அங்கு இல்லை. இது C வளைய வலையமைப்பு அல்லது ஐபிஎம் டோக்கின் றிங் வலையமைப்பு எனப்படும் இங்கு பௌதீகரிதியாக (Physically) விண்மீன் வலையமைப்பு மாதிரி நடுவில் கணினி சுவிச்சுடன் இணைக்கப்பட்டிருக்கும் பின்னர் தர்க்கரீதியாக வளைய வலையமைப்பில் நடைமுறைப்படுத்தப்படும்.

கண்ணி (Mesh)[தொகு]

கண்ணி வலைப்பின்னலின் பெறுமதியானது அந்த வலைப்பின்னலின் சந்தாதாரர்களின் அடுக்கிற்கு விகிதாசாரமாகும், இரண்டு முடிவுப்புள்ளிகள் தொடர்பு குழுக்களானது ரீட் சட்டம் முலம் அனுமானிக்கபடுகிறது.

முற்றாக இணைக்கப்பட்ட வலைப்பின்னல் (Fully Connected Network)[தொகு]

முற்றாக இணைக்கபட்ட கண்ணி கட்டமைப்பு

முற்றாக இணைக்கப்பட்ட வலைப்பின்னல் கட்டமைப்பில் எல்லா கணுக்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படிருக்கும். (In graph theory this is called as a complete graph.) எளிய முற்றாக இணைக்கபட்ட வலைப்பின்னலானது இரண்டு கணுக்களை கொண்டிருகும். முற்றாக இணைக்கபட்ட வலைப்பின்னலானது பொதி நிலைமாற்றம் or ஒளிபரப்பு கொண்டிருக்காது. எனினும், இணைப்புகளின் எண்ணிக்கையை கணுக்களின் எண்ணிக்கையை சதுர மடங்காக வளரும்:

பெரிய வலைப்பின்னல் கட்டமைபிற்கு இது சாத்தியமற்றதாக உள்ளது..

பகுதியாக இணைக்கப்பட்ட வலைப்பின்னல் (Partially Connected Network)[தொகு]

பகுதியாக இணைக்கப்பட்ட வலைப்பின்னல் கண்ணி கட்டமைப்பு

பகுதியாக இணைக்கப்பட்ட வலைப்பின்னல் கட்டமைப்பில், ஒரு சில கணுக்கல் மட்டும் மற்ற கணுக்கலுடன் இணைக்கப்பட்டிருக்கும்.ஆனால் சில கணுக்கல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணுக்கலுடன் புள்ளிக்குப்புள்ளியாக இணைக்கப்பட்டிருக்கும்.

கலப்பு (Hybrid)[தொகு]

கலப்பின வலையமைப்பானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்டமைப்பை கொண்டிருக்கும். உதாரணமாக, ஒரு மர வலைப்பின்னல் ( அல்லது விண்மீன்-பாட்டை வலையமைப்பு) ஆனது ஒரு கலப்பின கட்டமைப்பாகும் இதில் விண்மீன் வலையமைப்பு ஆனது பாட்டை வலையமைப்பு முலம் இணைக்கபட்டிருக்கும்.[5][6] எனினும், ஒரு மர வலையமைப்பானது(திரீ நெட்வொர்க்) மற்றொரு மர வலையமைப்புடன் இணைக்கப்படிருக்கும் போது அது ஒரு கட்டமைப்புரீதியாக மர வலையமைப்பாக காணப்படும்.கலப்பின வலையமைப்பானது இரண்டு வெவ்வேறு வலைப்பின்னல் கட்டமைப்பபை இணைப்பதன் மூலம் உருவாக்கபடுகின்றது

ஒரு விண்மீன்-வளைய வலைப்பின்னலானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வளையவலைப்பின்னல் கட்டமைப்பை கொண்டிருக்கும். மேலும் இது multistation அணுகல் அலகு (MAU) இணைக்கப்பட்டிருக்கும்.

ஸ்னோஃபிளாக் கட்டமைப்பானது விண்மீன் வலையமைபின் விண்மீன் வலையமைபாகும்.[சான்று தேவை]

மற்ற இரண்டு கலப்பின வலையமைப்பானது கலப்பின கண்ணி மற்றும் படிநிலை விண்மீன்.[5]

டெய்சி சங்கிலி (Daisy Chain)[தொகு]

விண்மீன் வலையமைப்பு கட்டமைப்பு தவிர்ந்த, வலையமைபிற்கு மேலும் கணினிகளை சேர்க்க எளிதான வழிdaisy-chaining, அல்லது அடுத்த அடுத்த தொடரில் ஒவ்வொரு கணினிகளை இணைக்கவேண்டும்.ஒரு செய்தி ஒரு கணினிக்கு அனுப்பும்போது, அதன் ஒரு பகுதியை ஒவ்வொரு முறை,அதன் இலக்கை அடையும் வரை பயணிக்கின்றது. ஒரு டெய்சி சங்கிலி வலையமைப்பானது இரண்டு அடிப்படை வடிவங்களில் காணப்படும்: நேரியல் மற்றும் வளைய அமைப்பு.

 • ஒரு பாட்டை கட்டமைப்பு ஒரு கணினிக்கும் அடுத்த கணினிக்கும் இடையில் இரு வழி இணைப்பை ஏற்படுத்துகின்றது. எனினும், இந்த வழிமுறையானது ஆரம்ப கால கணினி பயன்பாட்டில் செலவு கூடியது, ஒவ்வொரு கணினிக்கும் இரண்டு வாங்கிகள்(Receivers) மற்றும் கடத்திகள்(Transmitters) தேவைப்படுவதனாலாகும்.
 • ஒவ்வொரு இறுதியில் கணினிகளை இணைப்பதன் மூலம், ஒரு வளைய கட்டமைப்பு உருவாக்கப்பட முடியும். வளைய கட்டமைப்பின் நன்மை என்னவென்றால் கடத்திகள் மற்றும் வாங்கிகளின் எண்ணிக்கை பாதியாக குறைக்கப்பட முடியும், ஏனெனில் ஒரு செய்தி இறுதியில் வளையத்தின் வழியே சுற்றி தெரிதலாகும். ஒரு கணு ஒரு செய்தியை அனுப்பும்ப்போது, செய்தியானது வளைய கட்டமைப்பில் உள்ள ஒவ்வொரு கணினிகளால் செயலாக்கபடுகிறது. ஒரு குறிப்பிட்ட இணைப்பில் உள்ள வளைய கட்டமைப்பு உடைந்துவிட்டால் ஒலிபரப்பானது தலைகீழாக நடைபெறும் அதன் மூலம் அனைத்து முனைகளும் எப்போதும் ஒரு இணைப்பில் இருக்கும் என்று உறுதிப்படுத்த முடியும்.

மையப்படுத்தப்படுதல் (Centralization)[தொகு]

விண்மீன் கட்டமைப்பு ஆனது வலைப்பின்னல் சேதமடயும் நிகழ்தவை குறைக்கிறது ஏனெனில் எல்லா கணுக்களும் மத்திய கணுக்களுடன் இணைக்கபட்டிருபதாலாகும். விண்மீன் வலையமைப்பு ஆனது தருக்க பஸ் உடன் இணைக்கப்படும் போது அதாவது எதேர்நெட்(Ethernet),மத்திய கணு(பாரம்பரியமாக ஹப் என அழைக்கப்படும்) எல்லா கணுக்களிலிருந்து பெறப்படும் பரிமாற்றங்களை ஏனைய கணுக்கலிடையே மீள் ஒளிபரப்பு செய்கின்றது, சில நேரங்களில் அதன் சொந்த கணு உட்பட. சுற்றிவரஉள்ள எல்லா கணுக்களும் மத்திய கணுவுக்கு கடத்துவதன் மூலம்,பெற்றுகொள்வதன் மூலமூம் மற்றைய கணுக்களுடன் தொடர்பை பேணுகின்றது. மத்திய கணுவிலுருந்து சுற்றயல் கணுவிக்கிடையான பரிமாற்ற இணைப்பில் தடங்கல் ஏற்படும் போது அந்த குறிபட்ட கணுவை சுற்றயல் இணைப்பிலிருந்து தனிமைப்படுத்துகின்றது, ஆனால் மீதமுள்ள கணுக்கள் பாதிக்கபடாது. எனினும் மத்திய கணுவில் ஏற்படும் தடங்கலானது இணைப்பில் உள்ள எல்லா கணுக்களையும் பாதிக்கும் இது இதன் தீமைகளில் ஒன்றாகும்.

மத்திய கணு செயலற்ற நிலையிலிருக்கும் போது, உற்பத்தி கணுவானது அதன் சொந்த கடத்தலை புறக்கணிக்க வேண்டும் எதிரொலி, இரு வழி இணைப்பில் ஏற்படும் தாமதமானது சுற்று பயணம் ஒலிபரப்பு நேரம் மத்திய கணுவில் உருவாக்கப்பட்ட தமதங்களின் கூட்டுத்தொகைக்கு சமனாகும்.

ஒரு மர வலையமைபானது(Tree Topology) (படிநிலை கட்டமைப்பு) விண்மீன் கட்டமைபாக கண்டுகொள்ள முடியும் படிநிலை. இந்த tree அதன் சொந்த சுற்றயல் கணுக்களை கொண்டிருக்கும் (உதாரணமாக இலைகள்) இவைகள் மட்ட்றைய கணுவிலிருந்து பெற்று கடத்துவதற்கு அவசியமாகும் மற்றும் மீட்டியாக தொழிற்பட வேண்டிய அவசியம் இல்லை

வழக்கமான விண்மீன் வலைப்பின்னலமைப்பு போல், ஒரு தனிப்புள்ளியிள் ஏற்படும் தடங்கல் மற்றய கணுக்களை அதன் கடத்தல் பாதைஇலிருந்து தனிமைப்படுத்தி வைத்திருக்கும். ஒரு உப கணுவை இணைக்கும் இணைப்பு தவறினால், உப கணு தனிமைப்படுத்தபடும்.

அனைத்து கணுக்களிருந்து வரும் சமிக்ஞைகளின் வலையமைப்பு நெரிசலை குறைக்க, இன்னும் மேம்பட்ட மத்திய கணுக்கள் அபிவிருத்தி செய்யப்பட்டன, இக்கணுக்கள் வலையமைப்புடன் இணைப்பில் உள்ள கணுக்களின் கண்காணிக்கின்றது.

பரவலாக்கம் (Decentralization)[தொகு]

கண்ணி கட்டமைப்பு (அதாவது, a பகுதியாக இணைக்கப்பட்ட கண்ணி கட்டமைப்பு), இவ்வமைப்பில் குறைந்தது இரண்டு கணுக்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாதையுடன் காணப்படும் இதனால் தேவைக்கதிகமான பாதை காணப்படுவதால் ஒரு பாதையில் தடங்கள் ஏற்ப்படின் மற்ற பாதையை பாவிக்கமுடியும். இந்த பரவலாக்கல் பெரும்பாலும் ஒற்றை புள்ளி தடங்களை(Single-Point_failure) நீக்க உதவுகின்றது (எ.கா, விண்மீன் மற்றும் மர வலைப்பின்னல்). கண்ணி வலைப்பின்னல் ஒரு சிறப்பு வகை வலைப்பின்னலாகும், இரண்டு கணுகளிடையே ஹாப்ஸ் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகின்றது,கனசதுரம். தன்னிச்சையான போர்க்(Fork) எண்ணிக்கை கண்ணி வலையமைபை வடிவமைப்பதிலும் அதனை செயல்படுத்துவதையும் கடினமாக்குகின்றது., ஆனால் இதன் பன்முகப்படுத்தப்பட்ட இயல்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2012 இல் IEEE வெளியிடப்பட்ட குறுகிய பாதை பாலம் நெறிமுறையானது சாதனங்களை இலகுவாக இணைக்க உதவுகின்றது மேலும் அலைவரிசையை(BandWidth) அதிகரிக்கவும் செய்கின்றது. .[7][8][9][10][11]

இது கட்டம் நெட்வொர்க் ஒத்தது, நேரியல் அல்லது வளைய கட்டமைப்பு பல திசைகளில் இணைக்க பயன்படுகிறது. கொண்டிருக்கும் ஒரு பரிமாண வளைய கட்டமைப்பானது நங்கூரவளைய கொண்டிருக்கும்.

ஒரு முற்றாக இணைக்கப்பட்ட வலைப்பின்னல், முழுமையான கட்டமைப்பு, அல்லது முழுமையான கண்ணி கட்டமைப்பு ஆனது கணுகளிடைய நேரடி இணைப்பை கொண்டிருக்கும் ஒரு வலைப்பின்னல் கட்டமைப்பாகும். முற்றாக இணைக்கப்பட்ட வலைப்பின்னலில் n கணுக்கள் காணப்படுமாயின், n(n-1)/2 நேரடி இணைப்புகள் காணப்படும். இக்கட்டமைப்புமூலம் வலைப்பின்னல் வடிவமைப்பது செளவு கூடியதாகும், ஆனால் நம்பகமானது ஏனெனில் கணுக்களுகிடயான அதிகளவு மேலதிக இணைப்புகள் மூலம் தகவலுக்காக பல பாதைகளை உள்ளடங்யிருக்கும். இந்த கட்டமைப்பு பெரும்பாலும் [ [இராணுவம்] ] பயன்படுத்துகின்றனர்.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1 Groth, David; Toby Skandier (2005). Network+ Study Guide, Fourth Edition'. Sybex, Inc.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7821-4406-3. 
 2. Chiang, Mung; Yang, Michael (2004). "Towards Network X-ities From a Topological Point of View: Evolvability and Scalability". Proc. 42nd Allerton Conference. http://www.cs.unm.edu/~karlinjf/papers/allerton.pdf. பார்த்த நாள்: 2016-04-05. 
 3. Inc, S., (2002). Networking Complete. Third Edition. San Francisco: Sybex
 4. Bicsi, B., (2002). Network Design Basics for Cabling Professionals. City: McGraw-Hill Professional
 5. 5.0 5.1 Sosinsky, Barrie A. (2009). "Network Basics". Networking Bible. Indianapolis: Wiley Publishing. பக். 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-43131-3. இணையக் கணினி நூலக மையம்:359673774. https://books.google.com/books?id=3DOREqRZejcC&pg=PA16. பார்த்த நாள்: 2016-03-26. 
 6. Bradley, Ray. Understanding Computer Science (for Advanced Level): The Study Guide. Cheltenham: Nelson Thornes. பக். 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7487-6147-0. இணையக் கணினி நூலக மையம்:47869750. https://books.google.com/books?id=gnuwPpBcO-MC&pg=RA1-PT12. பார்த்த நாள்: 2016-03-26. 
 7. "Avaya Extends the Automated Campus to End the Network Waiting Game". Avaya. 1 April 2014. Archived from the original on 19 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 18 April 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 8. Peter Ashwood-Smith (24 February 2011). "Shortest Path Bridging IEEE 802.1aq Overview" (PDF). Huawei. Archived from the original (PDF) on 15 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 11 May 2012.
 9. Jim Duffy (11 May 2012). "Largest Illinois healthcare system uproots Cisco to build $40M private cloud". PC Advisor. பார்க்கப்பட்ட நாள் 11 May 2012. Shortest Path Bridging will replace Spanning Tree in the Ethernet fabric.
 10. "IEEE Approves New IEEE 802.1aq Shortest Path Bridging Standard". Tech Power Up. 7 May 2012. http://www.techpowerup.com/165594/IEEE-Approves-New-IEEE-802.1aq-Shortest-Path-Bridging-Standard.html. பார்த்த நாள்: 11 May 2012. 
 11. D. Fedyk, Ed.,; P. Ashwood-Smith, Ed.,; D. Allan, A. Bragg,; P. Unbehagen (April 2012). "IS-IS Extensions Supporting IEEE 802.1aq". IETF. பார்க்கப்பட்ட நாள் 12 May 2012.{{cite web}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Topology (Network)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 • Tetrahedron Core Network: Application of a tetrahedral structure to create a resilient partial-mesh 3-dimensional campus backbone data network