திசைவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிஸ்கோ 1800 திசைவி
நார்டெல் ERS 8600
சிஸ்கோ 7600 திசைவிகள்

திசைவி (router) என்பது இலக்க உறை தரவுகளை (Data Packets) ஒரு வலையமைப்புக்குள் துவங்கி இன்னொரு வலையமைப்புக்கு நகர்த்த உதவும் சாதனம். பல கணினி வலையமைப்புகள் ஒரே திசைவியில் இணைக்கப்பட்டிருக்கும். திசைவி தனக்குள் வரும் தரவுகளின் இலக்கு முகவரியை படித்து சேர் இடத்தை தீர்மானிக்கிறது. பிறகு தனது திசைவித்தல் அட்டவணை மற்றும் திசைவித்தல் கொள்கையின் படி அடுத்த வலையமைப்புக்குள் தரவிகளை நகர்த்துகிறது. இவ்வாறு தம் இலக்கை அடையும் வரை தரவிகளின் பயணம் தொடரும்.இணையம் முழுதும் போக்குவரத்து வழிகாட்டி போல் திசைவிகள் செயல்படுகிறது. தகவல்களை வழித்திருத்தவும் (routing), முன்னோக்கி அனுப்பவும் (forwarding) இதன் மென்பொருள் மற்றும் வன்பொருள் அமைக்கப்பட்டிருக்கும். திசைவிகள் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட தருக்க துணைவலையமைப்புகளை (logical subnets) இணைக்கிறது.

திசைவிகள் பொதுவாக வீடுகளிலும் அல்லது சிறு வியாபார நிறுவனங்களிலும் கூட இணையக இணைப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன. "லேயர் 3 சுவிட்சிங்" என்ற இந்த வார்த்தை வழித்திருத்தல் (routing) உடன் அடிக்கடி மாற்றி மாற்றி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மடைமாற்றி(switch) என்பது தான் எவ்வித கடினமான தொழில்நுட்ப வரையறையும் இல்லாமல் பொதுவாக பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். ஒப்பீட்டளவில், வலையமைப்பு மையக்கருவி (network hub) எவ்வித வழித்திருத்தமும் செய்வதில்லை. மாறாக அது ஒரு வலையமைப்பு இணைப்பில் பெறும் ஒவ்வொரு இலக்க உறை தரவையும் அப்படியே ஏனைய அனைத்து வலையமைப்பு இணைப்புகளுக்கும் அனுப்பிவிடும்.

திசைவிகள் இரண்டு வெவ்வேறு தளங்களில் செயல்படுகின்றன:[1]

  • கட்டுப்பாட்டு தளம் (Control Plane) - இது திசைவி வெளியேறும் இடைமுகத்தைக் கண்காணிக்கிறது. பெரும்பாலும் இந்த வெளியேறும் இடைமுகந்தான் குறிப்பிட்ட இலக்க உறை தரவுகளைக் குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பும்
  • முன்னோக்கி நகர்த்தும் தளம் (Forwarding Plane) - இது ஒரு தருக்க இடைமுகத்தில் பெறப்பட்ட ஓர் இலக்க உறை தரவை, வெளியில் இணைப்பு பெற்ற தருக்க இடைமுகத்திற்கு அனுப்பும் நிஜமான செயல்முறைக்கு பொறுப்பேற்கிறது

முன்னோக்கி நகர்த்தும் தளம் (தரவுத்தளம்)[தொகு]

துல்லியமான இணைய நெறிமுறை (IP) முன்னோக்கி நகர்த்தல் செயல்பாட்டிற்கு, திசைவி வடிவமைப்பானது ஒவ்வொரு இலக்க உறை தரவில் இருக்கும் அதன் நிலை குறித்த தகவலைக் குறைக்க முயல்கிறது. இலக்க உறை தரவு அனுப்பப்பட்ட உடனேயே, திசைவி அதைப்பற்றிய புள்ளிவிபர தகவலைச் சேர்த்து வைப்பதில்லை. அனுப்பும் மற்றும் பெறும் இடங்கள் தான், இவை குறைபாடுடைய அல்லது காணாமல் போன இலக்க உறை தரவுகள் என்று அவற்றைச் சேமித்து வைக்கின்றன.

அனுப்புவதற்கான முடிவுகளில், திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிமம் அடுக்கு மூன்றில் (OSI Model Layer 3) அல்லது வலையமைப்புக் அடுக்கு தவிர பிற அடுக்குகளின் முடிவுகளும் உள்ளடங்கி இருக்கும். தரவு இணைப்பு அடுக்கு அல்லது அடுக்கு 2 ஆனது, தகவலின் அடிப்படையில் அனுப்பும் ஒரு செயல்பாடாகும். சந்தைப்படுத்தல் மொழியில் இதை லேயர் 2 சுவிட்ச் என்று அழைக்கப்பார்கள்.

தரவுகளை அனுப்பும் செயல்பாட்டில் நெரிசல் அதிகரிக்கும் போது, அதாவது திசைவியால் செயல்படுத்தக் கூடிய அளவை விட அதிகமான விகிதத்தில் இலக்க உறை தரவுகள் வரும் போது, என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்வதும் இதன் பணிகளில் ஒன்றாக இருக்கிறது. இணையத்தில் பயன்படுத்தப்படும் மூன்று பொதுவான கொள்கைகள் என்னவென்றால் டெயில் ட்ராப், ரேண்டம் ஏர்லி டிடெக்சன் மற்றும் வெய்டட் ரேண்டம் ஏர்லி டிடெக்சன் ஆகியனவாகும். டெயில்டிராப் என்பது எளிமையானதும், சுலபமாக நிறுவக்கூடியதுமாகும்; திசைவியில் இடைசெருகல்களின் (buffers) அளவை விட வரிசையின் நீளம் அதிகரிக்கும் போது இதில் திசைவி வெறுமனே இலக்க உறை தரவுகளைக் கைவிட்டுவிடுகிறது. ரேண்டம் ஏர்லி டிடக்சன் (Random early detection - RED), உள்ளமைவு செய்யப்பட்டிருக்கும் அளவைக் கடந்து வரிசை நீளும் போது, சாத்தியப்படும் அளவிற்கு முன்னதாகவே தகவல் தரவுகளைக் (datagrams) கைவிட்டுவிடுகிறது. Weighted random early detection-ற்கு உள்ளமைவு செய்யப்பட்ட அளவை விட ஒரு மதிப்பார்ந்த சராசரி வரிசை தேவைப்படுகிறது. இதனால் குறுகிய வெடிப்புகள் (short burst) மாறி மாறி கைவிடப்படுவதைத் செய்வதில்லை.

ஒரு திசைவியானது பாக்கெட்கள் எங்கே அனுப்பப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய ஒரு வழித்திருத்தல் அட்டவணையைப் பயன்படுத்துகிறது. தேவையான முகவரியைத் திசைவியால் கண்டறிய முடியவில்லை என்றால், பின்னர் அது வழித்திருத்தல் அட்டவணையைப் பார்த்து அதை அனுப்புவதற்கான அடுத்த சிறந்த முகவரி எது என்று முடிவு செய்யும்.

திசைவிகளின் வகைகள்[தொகு]

திசைவிகள் நிறுவனங்களுக்குள்ளும், நிறுவனங்களுக்கு இடையிலும், இணையத்துடனும் மற்றும் இணைய சேவை வழங்குனர்களுக்குள்ளும் (ISP) இணைப்புகளை அளிக்கும். பெரியளவிலான திசைவிகள் (உதாரணமாக, சிஸ்கோ, CRS-1 அல்லது ஜூபிடர் T1600 போன்றவை) இணைய சேவை வழங்குனர்களை இணைக்கும் வகையில், இணைய சேவை வழங்கும் நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. அல்லது மிகப் பெரிய நிறுவனங்களின் வலையமைப்புகளில் பயன்படுத்தப்படலாம். சிறிய திசைவிகள் வீடுகளில் மற்றும் சிறிய அலுவலங்களுக்கு இணைப்புகளை வழங்குகிறது.

இணைய இணைப்பிற்கும் உள்பயன்பாட்டிற்குமான திசைவிகள்[தொகு]

இணைய சேவை வழங்குனர்களுக்கும் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கும் இணைப்புகளை வழங்குவதற்கான திசைவிகள் பெரும்பாலும் எவ்வித மாற்றமும் இல்லாமல் பார்டர் கேட்வே நெறிமுறை (BGP) உடன் வழித்திருத்தல் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. RFC 4098[2] நெறிமுறை பல்வேறு வகையான பிஜிபி-பரிமாற்ற திசைவிகளை வரையறுக்கிறது:

  • விளிம்பில் இருக்கும் திசைவி (Edge Router): இது ஒரு ஐஎஸ்பி வலையமைப்பின் விளிம்பில் பயன்படுத்தப்படுகிறது. இது வெளிப்புற பிஜிபீ-க்கும் (EBGP) மற்றொரு வழங்குனரிடம் இருக்கும் ஒரு பிஜிபீ பரிமாற்ற சாதனத்துடன் அல்லது மிகப் பெரிய நிறுவனங்களின் அநாமதேயர் அமைப்புமுறையுடன் (AS) தொடர்பு கொள்கிறது.
  • வாடிக்கையாளர் விளிம்பில் இருக்கும் திசைவி: இது வாடிக்கையாளர் வலையமைப்பின் விளிம்பில் பயன்படுத்தப்படுகிறது. இது ஈபிஜிபீ-க்கும் அதன் வழங்குனரின் AS(களுக்கும்) இடையே தொடர்பு கொள்கிறது. இது கடைநிலை பயனர் (நிறுவனத்தின்) அமைப்பினுடையதாக உள்ளது.
  • வழங்குனர்களை இணைக்கும் பரந்த திசைவி (Inter-provider Border Router): ஐஎஸ்பி-களை ஒன்றோடொன்று இணைப்பது. இது ஒரு பிஜிபீ வசதி கொண்ட திசைவி. இது மற்ற வழங்குனர்களின் AS-களில் இருக்கும் பிஜிபீ பேசும் திசைவிகளோடு பிஜிபீ அமர்வுகளை நிர்வகிக்கிறது.
  • மூல திசைவி (Core Router): இந்த வகையான திசைவி, ஒரு உள்வலைப்பில் துணை சாதனமாக இல்லாமல், மாறாக அதன் மையத்திலோ அல்லது அதன் முதுகெலும்பாகவோ இருக்கிறது.
ஒரு ISP-க்குள்ளாக: இது சேவை வழங்குனர்களின் AS-ற்கு உள்ளே இருக்கும். இதுபோன்ற ஒரு திசைவி உள்ளிருக்கும் பிஜிபீ-க்கும் (IBGP) சேவை வழங்குனரின் விளிம்பில் இருக்கும் திசைவிக்கும், பிற வழங்குனர்களை இணைக்கும் மூல (intra-provider core) திசைவிகளுக்கும், அல்லது சேவை வழங்குனர்களுக்கு இடையில் இருக்கும் பல திசைவிகளுக்கும் இடையில் தொடர்பு கொள்கிறது.
"இணைய பின்புல ஊடகம்:" இணையம் தெளிவாக கண்டறியக்கூடிய ஒரு பின்புலத்தைக் கொண்டிருப்பதில்லை. முன்னிருப்பு-கட்டற்ற மண்டலத்தைப் (DFZ) பார்க்கவும். இருந்தபோதினும், முக்கிய ஐஎஸ்பி-களின் திசைவிகளே பெரும்பாலும் மைய சாதனமாக கருதப்படுகின்றன. இந்த ஐஎஸ்பி-கள் மேலே கூறப்பட்ட அந்த நான்கு வகையான பிஜிபீ-யோடு தொடர்புகொள்ளும் திசைவிகளையும் செயல்பாட்டில் கொண்டிருப்பார்கள். ஐஎஸ்பி பயன்பாட்டில், ஒரு "மூல" திசைவி ஆனது ஐஎஸ்பி-இல் உள்ளடங்கி இருக்கும். மேலும் இது அதன் விளிம்பிலிருக்கும் மற்றும் ஏனைய பல திசைவிகளை ஒன்றோடு ஒன்று இணைக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கும். மைய திசைவிகள் பிஜிபீ மற்றும் பன்முக நெறிமுறை அடையாள மாற்றுமுறை (Multi-Protocol Label Switching - MPLS) ஆகியவற்றின் அடிப்படையில், மெய்நிகர் தனிமுறை வலையமைப்புகளிலும் பிரத்யேக செயல்பாடுகளைக் கொண்டிருக்கும்.[3]

திசைவிகள் தனிமுறை சர்வர்களுக்கான நுழைவாய் முன்னனுப்புதலிலும் பயன்படுத்தப்படுகின்றன.

சிறு அலுவலகங்கள், வீட்டுஅலுவலகங்கள் (SOHO) இணைப்பு[தொகு]

பொதுவாக திசைவிகள் என்றழைக்கப்படும் ரெசிடென்சியல் கேட்வேக்கள், கம்பிகள் மூலமாக அனுப்பப்படும் ஐபி அல்லது டிஎஸ்எல் போன்ற ஓர் அகலகற்றைச் சேவையுடன் இணைக்க வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற ஒரு திசைவி ஓர் உட்புற டிஎஸ்எல் மோடத்தையும் உள்ளடக்கி இருக்கும்.

ரெசிடென்சியல் கேட்வேக்கள் மற்றும் SOHO திசைவிகள் குறிப்பிடத்தக்களவில் வழித்திருத்தத்திற்கு அப்பாற்பட்டு வலையமைப்பு முகவரி மாற்றங்களையும், நுழைவாய் முகவரி மாற்றங்களையும் அளிக்கின்றன. தொலைதூர வலையமைப்பிற்கு லோக்கல் கணினிகளின் ஐபி முகவரிகளை நேரடியாக அளிப்பதற்கு மாறாக, இதுபோன்றதொரு ரெசிடென்சியல் கேட்வே பல்வேறு உள்ளிணைப்பு கணினிகள் ஒரேயொரு கணிணியாக தெரிவது போல மாற்றி காட்டுகின்றன. SOHO திசைவிகள், ஒரு நிறுவன வலையமைப்பிற்கு இணைப்பை வழங்குவதற்காக தானாகவே மெய்நிகர் தனிமுறை வலையமைப்பு குழாய் செயல்பாட்டிற்கும் ஒத்துழைப்பு வழங்குகிறது..

நிறுவன திசைவிகள்[தொகு]

ஒரு நிறுவனத்தில் அனைத்து வகையான திசைவிகளும் பயன்படுத்தப்படலாம். நவீன திசைவிகள் ஐஎஸ்பீ-களிலும் மற்றும் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் காணப்படும். பெரிய வியாபாரங்களுக்கும் சக்தி வாய்ந்த திசைவிகள் தேவைப்படும்.

அணுகும் திசைவி[தொகு]

SOHO உட்பட அணுகும் திசைவிகள், கிளை அலுவலங்கள் போன்ற வாடிக்கையாளர் இடங்களில் இடம் பெற்றிருக்கும். அவற்றிற்கு அவற்றின் சொந்தமான படிநிலை வழித்திருத்தல் தேவைப்படுவதில்லை. குறிப்பிடத்தக்களவில், அவை செலவு குறைப்பிற்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்.

வினியோக திசைவி[தொகு]

வினியோக திசைவிகள் அதே வலைத்தளத்திலோ அல்லது ஒரு பெரிய நிறுவன இடத்திற்காக பல்வேறு தளங்களில் இருந்து தரவு கோர்வைகளைச் சேகரிக்கவும், பன்முக அணுகுதல் திசைவிகள் மூலமாக தரவு பரிமாற்றத்தை வேகப்படுத்தவும் செய்கின்றன. வினியோக திசைவிகள் பெரும்பாலும் ஒரு WAN-ல் சேவைத்தரத்தை உறுதிப்படுத்த பொறுப்பேற்கின்றன. ஆகவே அவை ஒரு கணிசமான அளவிற்கு நினைவகத்தையும், பன்முக WAN இடைமுகங்களையும் மற்றும் கணிசமான அறிவுசார் செயல்பாட்டுத்திறனையும் கொண்டிருக்கும்.

இவை வழங்கன்களின் குழுக்களுக்கோ அல்லது வெளிப்புற வலையமைப்பிற்கோ இணைப்பையும் அளிக்கக் கூடும். இரண்டாவதாக கூறப்பட்ட பயன்பாட்டில், திசைவியின் செயல்பாடானது, ஒட்டுமொத்த பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாக மிக கவனமாக கருத்தில் கொண்டிருக்க வேண்டும். திசைவியைத் தவிர ஒரு இஃபயர்வால் அல்லது மெய்நிகர் தனியார் வலையமைப்பு ஒருமுகப்படுத்தி (concentrator) ஆகியவையும் பயன்படுத்தப்படலாம், அல்லது இவையும், பிற பாதுகாப்பு செயல்பாடுகளும் திசைவியிலேயே கூட அமைந்திருக்கும்.

ஒரு நிறுவனம் முதன்மையாக ஒரே வளாகத்திற்குள் அமைந்திருக்கும் போது, அங்கே ஒரு தனிப்பட்ட வினியோக முறை இருக்க வேண்டியதில்லை. இதுபோன்ற சூழல்களில், உள்வலையமைப்புகளோடு இணைக்கப்பட்ட அணுகும் திசைவிகள், மூல திசைவிகள் வழியாக இவற்றை ஒன்றோடுஒன்று சேர்த்து இணைக்கின்றன.

மூல திசைவி[தொகு]

நிறுவனங்களில், ஒரு மூல திசைவி ஆனது, ஒரு வளாகத்தின் பல்வேறு கட்டிடங்களில் அல்லது பெரிய நிறுவன இடங்களில் இருந்து வினியோக வகை திசைவிகளை இணைக்கும் ஒரு "சிதைந்த பின்புலத்தை" அளிக்கக்கூடும். இவை உயர்ந்த அலைவிரிவகலத்திற்காக சுருக்கப்படுகின்றன.

எந்த மைய இடமும் இல்லாமல் ஒரு நிறுவனம் பரவலாக வினியோகிக்கப்பட்டால், மூல வழித்திருத்தலின் செயல்பாடு WAN சேவையால் எடுத்துக்கொள்ளப்படும். இதற்காக நிறுவனம் பதிவு செய்து கொள்கிறது என்பதுடன் வினியோக திசைவிகள் முன்னணி வரிசையில் வந்துவிடுகின்றன.

வரலாறு[தொகு]

இன்றைய ஒரு திசைவி செய்வதைப் போலவே, முதன்முதலில் இடைமுக சேதி செயலி (Interface Message Processor-IMP) என்பது பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஐஎம்பீ-கள் முதல் பேக்கெட் சுவிட்சிங் வலையமைப்புகளான ARPANET-ஐ உருவாக்கிய சாதனங்களாகும். திசைவிகள் பற்றிய சிந்தனை முதன்முதலில் சர்வதேச வலையமைப்பு பணிக்குழு (INWG) என்றழைக்கப்பட்ட ஒரு கணினி வலையமைப்பு ஆராய்ச்சியாளர்களின் சர்வதேச குழுவிடமிருந்து வந்தது. வெவ்வேறு வலையமைப்புகளை இணைப்பதில் இருந்த தொழில்நுட்ப பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு 1972-ல் ஓர் உத்தியோகப்பூர்வ குழு அமைக்கப்பட்டது. பின்னர் அதே ஆண்டில் அது தகவல் பரிமாற்றத்திற்கான சர்வதேச கூட்டமைப்பின் (International Federation for Information Processing) ஒரு துணைக்குழுவாக மாறியது. [4]

இந்த சாதனங்கள் பெரும்பாலான முந்தைய இருவழி பேக்கெட் சுவிட்சிங்களில் இருந்து மாறுபட்டு இருந்தது. முதலாவதாக, அவை நேர் இணைப்புகள் (serial lines), குறும்பகுதி வலையமைப்புகள் (local area networks) போன்ற வெவ்வேறு வகையான வலையமைப்புகளை இணைத்தது. இரண்டாவதாக, அவை இணைப்பற்ற சாதனங்கள், தரவு பரிமாற்றம் நம்பிக்கையான விதத்தில் அனுப்பப்பட்டன என்பதை உறுதிப்படுத்துவதில் அவை எந்த பங்கும் கொண்டிருக்கவில்லை. இது முழுமையாக வழங்கன்களின் பொறுப்பில் விடப்பட்டிருந்தது. (இந்த குறிப்பிட்ட யோசனை முன்னதாக CYCLADES வலையமைப்பிலேயே முன்னிருத்தப்பட்டிருந்தது).

ஒரு நிஜமான முன்மாதிரி அமைப்புமுறையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இரண்டு சமகாலத்திய திட்டங்களின் ஒரு பாகமாக, இந்த சிந்தனை மிகவும் விரிவாக வளர்க்கப்பட்டது. ஒன்று முதலில் உருவான DARPA-வினால் துவக்கப்பட்ட திட்டம், இது இன்றைய TCP/IP கட்டமைப்பை உருவாக்கியது. [5] மற்றொன்று புதிய வலையமைப்பு தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான ஜெராக்ஸ் PARC-ல் உருவான திட்டம். இது PARC யூனிவர்சல் பேக்கெட் சிஸ்டம் என்பதை உருவாக்கியது. நிறுவன அறிவு-சார் காப்புரிமை பிரச்சினைகள் இருந்த போதினும், பிந்தைய ஆண்டுகளில் ஜெராக்ஸூக்கு வெளியில் இது சிறிது கவனத்தை ஈர்த்தது. [6]

ஆரம்பகால ஜெராக்ஸ் திசைவிகள் 1974-ன் தொடக்கத்திற்கு பின்னர் செயல்பாட்டிற்கு வந்தன. நிஜமான முதல் IP திசைவி BBN-ல் வெர்ஜீனியா ஸ்ட்ராஜிஜரால் உருவாக்கப்பட்டது, இது 1975-76-ன் போது DARPA-வினால் துவக்கப்பட்ட முயற்சியின் ஒரு பகுதியாக உருவானது. 1976-ன் முடிவில், பரிசோதனை முறையிலான முன்மாதிரி இணையத்தில் PDP-11 அடிப்படையிலான மூன்று திசைவிகள் சேவையில் இருந்தன. [7]

முதல் பன்முகநெறிமுறை திசைவிகள் 1981-ல் MIT மற்றும் ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சி வல்லுனர்களால் தன்னிச்சையாக உருவாக்கப்பட்டது; ஸ்டான்ஃபோர்டு திசைவி வில்லியம் ஈஜெரினால் செய்யப்பட்டது. அதேபோல MIT ஒன்று நியோல் சியப்பாவினால் செய்யப்பட்டது; இரண்டுமே PDP-11-களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன. [8] [9] [10] [11]

மெய்நிகர் அளவில், அனைத்து வலையமைப்புகளும் இப்போது வலையமைப்பு அடுக்கில் ஐபியைப் பயன்படுத்துகின்றன. ஆரம்பகாலத்தில் கணினி வலையமைப்புகளின் வளர்ச்சி காலப்பகுதியில் மிகவும் அவசியமாக இருந்த பல-நெறிமுறை திசைவிகள் இப்போது பெருமளவிற்கு இல்லாமல் போய்விட்டன. அப்போதெல்லாம் TCP/IP தவிர பல்வேறு நெறிமுறைகள் பரவலாக உபயோகத்தில் இருந்தன. விவாத அளவில், IPv4 மற்றும் IPv6 ஆகிய இரண்டையும் கையாளும் திசைவிகளும் பல-நெறிமுறை திசைவிகளே ஆகும். ஆனால் ஆப்பிள்டாக், டெக்நெட், ஐபி மற்றும் ஜெராக்ஸ் நெறிமுறைகள் போன்றவற்றைச் செயல்படுத்திய திசைவியுடன் ஒப்பிடும் போது இது மிகவும் தொலைதூரத்தில் இருக்கிறது.

வழித்திருத்தலின் நிஜமான காலப்பகுதியில் (1970-களின் மத்தியில் இருந்து 1980-கள் வரை), பொது பயன்பாட்டிற்கான சிறு-கணினிகள் திசைவிகளாக பயன்படுத்தப்பட்டன. பொது பயன்பாட்டிற்கான கணினிகள் திசைவி செய்யும் வேலையைச் செய்யும் என்றாலும், நவீன உயர்-வேக திசைவிகள் அதிக சிறப்பார்ந்த கணினிகளாக இருக்கின்றன. பொதுவாக பேக்கெட் முன்அனுப்புதல் மற்றும் IPsec குறியேற்றம் போன்ற சிறப்பார்ந்த செயல்பாடுகள் போன்ற பொதுவான வழித்திருத்தல் செயல்பாடுகளை ஊக்குவிக்க கூடுதல் வன்பொருள் இணைக்கப்படுகிறது.

இன்றும் கூட, கணிசமான லினக்ஸ் மற்றும் யூனிக்ஸ் இயந்திரங்கள் கட்டற்ற மூல வழித்திருத்தல் குறியீடுகளைச் செயல்படுத்தி வருகின்றன. இவை வழித்திருத்தல் ஆராய்ச்சிக்காகவும், ஏனைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிற பயன்பாடுகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. சிஸ்கோ இயங்குதளம் தன்னிச்சையாக வடிவமைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜூபிடர் நெட்வொர்க்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் நெட்வொர்க்ஸ் ஆகியவற்றில் இருந்து கிடைப்பவை போன்ற பிற முக்கிய திசைவி இயங்குதளங்கள் பெருமளவில் மாற்றப்பட்டிருக்கின்றன என்றபோதினும் இன்றும் அவை யூனிக்ஸ் பழமையைத் தக்கவைத்திருக்கின்றன.

மேலும் காண்க[தொகு]

கணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல்

குறிப்புதவிகள்[தொகு]

  1. ஐபி கட்டுப்பாடு மற்றும் முன்னனுப்புதலின் பகுப்பிற்கான தேவைகள்,RFC 3654, எச். கோஸ்ரவி & டி. ஆண்டர்சன், நவம்பர் 2003
  2. கட்டுப்பாட்டுத் தளத்தில் பிஜிபீ சாதன குவிகை இலக்குநிர்ணயிப்பிற்கான சொற்களஞ்சியம் ,RFC 4098, எச். பெர்க்கோவிட்ச் et al. ,ஜூன் 2005
  3. BGP/MPLS VPN-கள்,RFC 2547, ஈ. ரோசன் மற்றும் வொய். ரெக்டெர், ஏப்ரல் 2004
  4. டேவிஸ், ஷங்க்ஸ், ஹார்ட், பார்க்கர், டெஸ்பிரஸ், டெட்விலர் மற்றும் ரிமி, "தொடர்பு முறையின் மீது துணைக்குழு 1-ன் அறிக்கை", INWG குறிப்பு #1.
  5. விண்டன் செர்ப், ராபர்ட் கான், "பேக்கெட் வலையமைப்பு உள்தொடர்பிற்கான ஒரு நெறிமுறை", தொலைதொடர்புகள் மீதான IEEE பரிவர்த்தனைகள், தொகுதி 22, இதழ் 5, மே 1974, பக்கம். 637 - 648.
  6. டேவிட் போக்ஸ், ஜான் ஸ்கோச், எட்வர்ட் டாப்ட், ராபர்ட் மெட்கால்ப், "பப்: ஓர் உள்வலையமைப்பு கட்டமைப்பு", தொலைதொடர்புகளுக்கான IEEE பரிவர்த்தனைகள், தொகுதி 28, இதழ் 4, ஏப்ரல் 1980, பக்கம். 612- 624.
  7. கிரேக் பார்ட்ரிட்ஜ், எஸ். ப்ளூமென்தல், "BBN-ல் தரவு வலையமைத்தல்"; கணினியியலின் வரலாறு மீதான IEEE ஆண்டறிக்கைகள், தொகுதி 28, இதழ் 1; ஜனவரி-மார்ச் 2006.
  8. Valley of the Nerds: பன்முகநெறிமுறையை உண்மையில் கண்டறிந்தவர் யார் மற்றும் நாம் ஏன் அதை கவனிக்க வேண்டும்?, பப்ளிக் பிராட்கேஸ்டிங் சர்வீஸ், ஆகஸ்ட் 11, 2007-ல் பெறப்பட்டது.
  9. திசைவி மனிதன், நெட்வொர்க்வோல்டு, ஜூன் 22, 2007-ல் பெறப்பட்டது.
  10. டேவிட் டி. கிளார்க் ஸ்மெல்ஸ், "M.I.T. வளாக வலையமைப்பு நிறுவுதல்", CCNG-2, வளாக கணினி வலையமைப்பு குழு, M.I.T., கேம்பிரிட்ஜ், 1982; பக்கம். 26.
  11. பீட் கேரீ, "ஒரு தொடக்கத்தின் நிஜக்கதை: சிஸ்கோவின் அறிமுகம் பற்றி அடிக்கடி கூறப்படும் கதை, நாடகத்தை விட்டு, சூழ்ச்சியை விட்டு வெளியேறுகிறது", சான் ஜோஸ் மெர்குரி நியூஸ், டிசம்பர் 1, 2001.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
திசைவி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திசைவி&oldid=3529576" இலிருந்து மீள்விக்கப்பட்டது