உள்ளடக்கத்துக்குச் செல்

விண்மீன் வலையமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விண்மீன் வலையமைப்பு
விண்மீன் வலையமைப்பு

விண்மீன் வலையமைப்பு (star network) இன்று கணினி வலையமைப்பில் மிகவும் பரவலாகப் பாவிக்கப்பட்டு வரும் வலையமைப்பாகும். இது ஈதர்நெற் தொழில் நுட்பத்தில் பாவிக்கக்கூடியது.[1] இவ்வகை வலையமைப்பில் ஒவ்வொரு கணினியும் நிலைமாற்றி (switch) அல்லது கூடுமையத்துடன் (ஹப், hub) இணைக்கப்பட்டிருக்கும். இதனால் ஏதாவது ஒரு மின்கம்பி (cable) அறுந்தாலும் மீதி வலையமைப்புத் தொடர்பு அறாமல் இருக்கும். வளைய வலையமைப்பும் (Ring network) உண்மையில் விண்மீன் வலையமப்பு போன்றே இணைக்கப்படும், பின்னர் மென்பொருள் ஊடாக வளைய வலையமைப்பு நடைமுறைப்படுத்தப்படும்.

விண்மீன் வலையமைப்பில் எல்லா வலையைப்பில் உள்ளனவும் நடு நிலையத்தில் இணைக்கபடுவதால் இவ்வகை இணைப்புகள் பழுதடைவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகும். பெருநகர் பரப்பு வலையமைப்புகள் விண்மீன் வலையமைப்பு முறையிலேயே இணைக்கப்படுகின்றது.

நன்மைகள்

[தொகு]
  • சிறந்த வினைத்திறன்: இவ்வகையான வலையமைப்பு இணைப்பில் 3 கருவிகளும் 2 இணைப்பும் மாத்திரமே இணைக்கப்படுவதாலும் இதன் நடுப்பகுதியில் கூடுதல் வேலை இருந்தாலும் கூட அவை கையாளக்கூடியவையே. ஒருபகுதியில் உள்ள மிக அதிகமான வலையமைப்புப் பயன்பாடு வலையமைப்பில் உள்ள ஏனைய கருவிகளைப் பாதிக்காது.[2][3]
  • கருவிகளைப் பிரித்தல்: ஒவ்வொரு கருவியும் வலையமைப்பில் தனியே நிலைமாற்றியுடனோ அல்லது கூடுமையத்துடனோ (ஹப் உடனோ) இணைக்கப்படுவதால் தனித்தனியாக தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே.
  • எல்லா கருவிகளுமே கூடுமையத்துடன் (ஹப் அல்லது சுவிச்சுடன்) இணைக்கப்படுவதால் கூடுமையத்தை மேம்படுத்துவதன் மூலம் வலையமைப்பை மேம்படுத்தலாம்.
  • இலகுத்தன்மை: இத்தொழில்நுட்பமானது இலகுவாக விளங்கக்கூடியதாக இருப்பதால் இதை உருவாக்கி பராமரிப்பது இலகுவாகும். பழுது ஏற்பட்டாலும் இலகுவாக பிழையை அடையாளம் காணக்கூடியதாக இருக்கும்.

தீமைகள்

[தொகு]
  • வலையமைப்பில் உள்ள எல்லா கருவிகளுமே கூடுமையத்துடன் இணைக்கப்படுவதால் கூடுமையம் பழுதடைந்தால் முழு வலையமைப்பும் பயன்படுத்த முடியாததாகிவிடும்.
  • கம்பிகளின் எண்ணிக்கை மற்றும் நீளம் காரணமாக ஒவ்வொரு தொகுதியையும் மைய மையத்திற்கு கம்பி செய்யத் தேவைப்படும். செலவு அதிகமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Roberts, Lawrence G.; Wessler, Barry D. (1970), "Computer network development to achieve resource sharing", AFIPS '70 (Spring): Proceedings of the May 5–7, 1970, spring joint computer conference, New York, NY, USA: ACM, pp. 543–549, doi:10.1145/1476936.1477020, S2CID 9343511
  2. "Star Network". TechTarget. Retrieved 2014-06-24.
  3. "Teach-ICT OCR GCSE Computing - computer network topologies, bus network, ring network, star network". teach-ict.com. Archived from the original on 2015-12-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்மீன்_வலையமைப்பு&oldid=4217870" இலிருந்து மீள்விக்கப்பட்டது