உள்ளடக்கத்துக்குச் செல்

பாட்டை வலையமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாட்டை வலையமைப்பு
பாட்டை வலையமைப்பு

பாட்டை வலையமைப்பு (Bus Topology) என்பது வலையமைப்பு வடிமைப்பில் ஒன்றாகும். இதில் வாங்கிகள் (கிளையண்ட்ஸ்) ஒரு பொதுவான ஓர் ஊடகத்தைப் பாவிக்கும் அது பாட்டை (பஸ்) என்று அழைக்கப்படும். பொதுவாகக் கணினியின் தாய் பலகையில் (மதர்போர்ட் Motherboard) கணினி வலையமைப்புகளிலும் இதைக் காணலாம்.

பாட்டை வலையமைப்பானது பல்வேறு வாங்கிகளை ஒன்றாக இணைப்பதற்கு இலகுவான வழிமுறையாக இருந்தாலும் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட வாங்கிகள் தொடர்பினை மேற்கொள்ள முயன்றால் தரவுப் பொதிகள் (Data packets) மோதலிற்கு உள்ளாகும். சில வலையைப்புகள் தரவுப் பொதிகளில் மோதற் தவிர்ப்பு யுக்தியைக் கொண்டிருந்தாலும் பெரும்பாலான வலையைப்புக்களில் பல் அணுக்கத்திற்கான காவியை உணரும் (Carrier Sense Multiple Access) தொழில் நுட்பத்தையே கொண்டுள்ளன.

இப்பொழுது கம்பியிணைப்புக்கள் பெரும்பாலும் இதைக் கைவிட்டுவிட்டாலும் கம்பியற்ற இணைப்புக்கள் (Wireless) இணைப்புக்கள் பாட்டை இணைப்புக்களாகக் கருதலாம். பாட்டை வலையமைப்பில் நேரடியாகவே புதிய சாதனங்களை இணைத்துக் கொள்ளலாம்.

பாட்டை வலையமைப்பின் அநுகூலங்களும் பிரதிகூலங்களும்[தொகு]

அநுகூலம்[தொகு]

 • இலகுவாக நடைமுறைப்படுத்தக் கூடியதும் விரிவாக்கப்படக்கூடியதும்.
 • தற்காலிக அல்லது சிறிய வேகம் ஒரு பிரச்சினையாக இல்லாதவிடத்தில் இது சிறந்த தீர்வாகும்.
 • ஏனைய வலையமைப்புக்களை விட மலிவானது.
 • ஒரே ஒரு கம்பியே பயன்படுவதால் இலாபகரமானது.
 • கம்பியில் உள்ள வழுக்களை இலகுவாகக் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

பிரதிகூலம்[தொகு]

 • குறைந்த அளவிலான கணினிகளையே இணைக்கலாம். அத்துடன் ஓரளவுக்குத்தான் கம்பியை நீட்டிப் பயன்படுத்தலாம்.
 • கம்பியில் பிரச்சினை ஏற்பட்டால் முழு வலையமைப்புமே செயலிழந்து விடும்.
 • நீண்ட பாவனையில் பராமரிப்புச் செலவுகள் அதிகம்.
 • வலையமைப்பு வினைத்திறனானது அதிக கணினிகளை இணைக்கும் பொழுது குறைவடையும்.
 • அந்தங்களில் முறையாக முடிவடைய வேண்டும்.
 • இது ஏனைய வலையைப்புகளை விட மெதுவானது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டை_வலையமைப்பு&oldid=3420888" இலிருந்து மீள்விக்கப்பட்டது