கணு (வலையமைப்பு)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தொலைத்தொடர்புப் பிணையங்களில், கணு ((ஒலிப்பு (உதவி·தகவல்)) (node, இலத்தீன் nodus, ‘knot’) என்பது ஒரு பிணைப்புப் புள்ளி, மீளஞ்சல் புள்ளி அல்லது முனையக் கணுவைக் குறிப்பதாகும். கணுவின் வரையறையானது அது சார்ந்துள்ள பிணையத்தையும் நெறிமுறை அடுக்கையும் பொறுத்து அமையும். ஓர் இயற்பிய பிணையத்தில் ஒரு கணுவானது பிணையத்தில் இணைக்கப்பட்டுள்ள செயல்பாட்டிலுள்ள இலத்திரனியல் கருவியாக அமையும்; இதனால் தொலைத்தொடர்பு செல்வழியொன்றின் மூலம் தகவல்களை அனுப்பவும், பெறவும் அல்லது மீளஞ்சல் செய்யவும் இயலும்.