வன் மின்பகுளி
வன் மின்பகுளி (strong electrolyte) என்பது வேதிக் கரைசலில் முற்றிலுமாக அல்லது கிட்டத்தட்ட முற்றிலுமாக அயனியாக்கம் அல்லது பிரிகை அடையும் ஒரு வேதிப் பொருளைக் குறிக்கும் ஆகும். இந்த அயனிகள் கரைசலில் நன்றாக மின்சாரத்தைக் கடத்துகின்றன.
முதன் முதலில், நீர்மக் கரைசல் ஒன்றில் எந்தவேதிப்பொருள் நன்றாக மின்சாரத்தைக் கடத்துகிறதோ அப்பொருளே "வன் மின்பகுளி" என்று வரையறை செய்யப்பட்டது. ஓர் ’அயனி’ என்பதற்கான பொருள் விரிவடைந்து அதன் பண்புகள் பெரும் பிரிதலுக்கு உட்பட்டதால் தற்போதைய வரையறை நடைமுறையில் பதிலீடு செய்யப்பட்டது.
ஒரு வன் மின்பகுளியின் அடர் கரைசல், அதே வெப்பநிலையில் தூய்மையான நீரைக்காட்டிலும் குறைவான ஆவியழுத்தம் பெற்றுள்ளது. வலிமையான அமிலங்கள், வலிமையான காரங்கள் மற்றும் கரையக்கூடிய அயனி உப்புகள் முதலியன வன் மின்பகுளிகளாகும். வலிமை குறைந்த அமிலங்கள் மற்றும் காரங்கள் குறை மின்பகுளிகளாகும்.
வினைகளை எழுதுதல்
[தொகு]வன் மின்பகுளியைப் பொறுத்தவரை வினையில் எழுதப்படும் ஒர் தனி அம்புக்குறி அயனியாக்க வினையானது முற்றிலுமாக ஒரே திசையில் நிகழ்கிறது என்பதைக் காட்டுகிறது. மாறாக, குறை மின்பகுளிகளில் பிரிகையானது ஒரே திசையில் நிகழாமல் கனிசமான அளவுக்கு அயனியாக்கமும் மறு பிணைப்பும் நிகழ்வதைக் குறிக்கும்[1].
- வன் மின்பகுளி (நீரிய) ------> நேர்மின் அயனி(நீரிய) + எதிர்மின் அயனி(நீரிய)
உருகிய நிலையில் அல்லது நீர்த்த கரைசலில் மட்டும் வன் மின்பகுளிகள் மின்சாரத்தைக் கடத்தும். மேலும் அவை முற்றிலுமாக அயனியாக மாறுகின்றன.
கால்வானிக் மின்கலத்தில் மின்பகுளி வலிமையாக இருந்தால் உற்பத்தியாகும் மின்சாரமும் அதிகமாக இருக்கும்.
உதாரணங்கள்
[தொகு]வல்லமிலங்கள்
[தொகு]அமிலம் | வாய்பாடு |
---|---|
பெர்குளோரிக் அமிலம் | HClO4 |
ஐதரோஅயோடிக் அமிலம் | HI |
ஐதரோபுரோமிக் அமிலம் | HBr |
ஐதரோகுளோரிக் அமிலம் | HCl |
கந்தக அமிலம் | H2SO4 |
நைட்ரிக் அமிலம் | HNO3 |
குளோரிக் அமிலம் | HClO3 |
புரோமிக் அமிலம் | HBrO3 |
பெர்புரோமிக் அமிலம் | HBrO4 |
பெர் அயோடிக் அமிலம் | HIO4 |
புளோரோ ஆண்டிமனிக் அமிலம் | HSbF6 |
மந்திர அமிலம் | FSO3HSbF5 |
கார்போரேன் மிகை அமிலம் | H(CHB11Cl11) |
புளோரோ கந்தக அமிலம் | FSO3H |
திரிபிக் அமிலம் | CF3SO3H |
வன் காரங்கள்
[தொகு]காரம் | வாய்பாடு |
---|---|
பொட்டாசியம் ஐதராக்சைடு | KOH |
பேரியம் ஐதராக்சைடு | Ba(OH)2 |
சீசியம் ஐதராக்சைடு | CsOH |
சோடியம் ஐதராக்சைடு | NaOH |
இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு | Sr(OH)2 |
கால்சியம் ஐதராக்சைடு | Ca(OH)2 |
உருபீடியம் ஐதராக்சைடு | RbOH |
மக்னீசியம் ஐதராக்சைடு | Mg(OH)2 |
இலித்தியம் இருசமபுரோபைலமைடு | C6H14LiN |
இலித்தியம் இருஎத்திலமைடு | (C2H5)2NLi |
சோடியம் அமைடு | NaNH2 |
சோடியம் ஐட்ரைடு | NaH |
இலித்தியம் பிசு மும்மெத்தில்சிலில் அமைடு | (CH3)3Si)2NLi |
உப்புகள்
[தொகு]உப்பு | வாய்பாடு |
---|---|
சோடியம் குளோரைடு | NaCl |
பொட்டாசியம் நைத்திரேட்டு | KNO3 |
மக்னீசியம் குளோரைடு | MgCl2 |
சோடியம் அசிட்டேட் | CH3COONa |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brown, Theodore L. Chemistry: The Central Science, 9th edition.