வடகாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வடகாடு
வடகாடு
இருப்பிடம்: வடகாடு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°23′N 78°59′E / 10.39°N 78.98°E / 10.39; 78.98ஆள்கூற்று: 10°23′N 78°59′E / 10.39°N 78.98°E / 10.39; 78.98
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ்(பூ கமிசன் மண்டி)
மக்கள் தொகை

அடர்த்தி

7

8/km2 (21/sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

5 square kilometres (1.9 sq mi)

74 metres (243 ft)

வடகாடு -தானம நாடு (Vadakadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடிவட்டத்தில் அமைந்திருக்கும் ஓர் அழகிய கிராமமும், ஒரு பெரிய ஊராட்சியும் ஆகும்.மா,பலா,வாழை ஆகிய முக்கனிகளுக்கும் பெயர் பெற்று இவ்வூர் திகழ்கிறது.அனைத்து அரசு அலுவலகங்களும் இங்கு உள்ளன. அரசு மேல் நிலைப் பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (24மணிநேர சேவை), அரசு கால்நடை மருத்துவமனை, விவசாய கூட்டுறவு வங்கி, நடுவண் அரசுடைமையுடைய அஞ்சல்நிலையம்[3],அரசுடைமையுடைய யுகோ வங்கி,காவல் நிலையம், உயர் மின்னழுத்த மின்பகிர்வு நிலையம், மற்ற அரசு அலுவலகங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையம்(Petrol Pump) உள்ளன.

பொருளடக்கம்

வ‌ட‌காடு -தானம முத்தரையர் நாடு உருவான‌ வ‌ர‌லாறு[தொகு]

இப்ப‌குதி தோராய‌மாக‌ 19ம் நூற்றாண்டு கால‌த்தில் உருவான‌து

வ‌ட‌காடு தன்னுள் 18 பட்டிகளை(தெருக்கள்) கொண்டுள்ளது[தொகு]

அவைகளின் தொகுப்பு 1. கல்லிக்கொல்லை2.சுந்தன் பட்டி 3.பருத்திக் கொல்லை 4.தோழன் பட்டி 5.பூனைக்குட்டிப் பட்டி 6.வடக்குப் பட்டி 7.குறுந்தடிக் கொல்லை 8.பரமன் பட்டி 9.பள்ளத்து விடுதி 10.பாப்பா மனை 11.புள்ளாச்சிக் குடியிருப்பு 12.மாங்குட்டிப் பட்டி 13.வினாயகம் பட்டி 14.தெற்குப் பட்டி 15.பிலாக் கொல்லை 16.சாத்தன் பட்டி 17.சேர்வைகாரன் பட்டி 18.செட்டியார் தெரு

தொழில்[தொகு]

இப்பகுதி மக்கள் அனைவரும் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர்.அதுவே அவர்களில் வாழ்வாதாரம்.இங்கு வாழை,பல வகையான மலர்கள்(மகை, அரும்பூ, ரோஜா, முல்லை) போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது நிலத்தடிநீர் மட்டமானது 160 அடி வரை சென்றுள்ளது.வானம் பார்த்த பூமி்யாக இருந்து வந்த இப்பகுதி தற்போது பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. நிலத்தடி நீர் மட்ட மாறுபாடானது மழைக் காலங்களில் 9.08 மீட்டர் ஆகவும் கோடை காலங்களில் 17.49 மீட்டர் ஆகவும் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் இந்த நிலத்தடி நீர் மட்ட மாறுபாடானது மி்க அதிகம் இப்பகுதிக்குத்தான் என்றாலும் கூட விவசாயத்தில் அதிகப்படியான கவனங்களுடன் ஈடுபடுகிறார்கள். காய்கறிகள் உற்பத்தி 1995-96ம் ஆண்டுகளில் 2900 டன் அளவில் 60 ஹெக்டேர் நிலப்பரப்பிலிருந்துது மகசூல் காணப்பட்டது[4].

ஆழ்குழாய் கிணறு அமைக்கும் முறை

வடகாட்டில் ஆழ்குழாய் கிணறுகள்[தொகு]

இவ்வகையான கிணறு வகை 1969-1970ஆம் ஆண்டு காலத்தில் இப்பகுதிக்கு வந்தது. இதற்கு முக்கிய காரணம் ongg(Oil and Natural Gas Corporation) நிறுவனத்தினரால் அனைத்து இடங்களிலும் இவ்வகையான கிணறு அமைத்து எண்ணெய் வளம் உள்ளதா என்று ஆராய்ச்சி செய்தனர். அதனைத் தொடர்ந்து இப்பகுதில் பூமிக்கு அடியில் நல்ல நீரோட்டம் உள்ளது என்பது தெரியவந்தது.பின்னர் ஒவ்வொருவராக இக்கிணறு அமைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர்.அந்த காலகட்டத்தில் சுமார் 250 அடி ஆழம் கொண்ட கிணறு அமைத்தாலே போதுமான நீர் கிடைத்தது.அதுவே கடந்த சில ஆண்டுகளில் பருவ மழை குறைந்ததாலும்,நீர் நிலைகள்(அரசுக்கு சொந்தமான குளங்கள்,கண்மாய்கள், ஆற்று படுகைகள்)சில சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்புகளாலும் நீர் மட்ட மாறுபாடானது தற்போது பல மடங்கு உயர்ந்து 850-1250 அடி கிணறு அமைத்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு நீர் கிடைப்பதில்லை. அதற்க்கு முன்னர் விட்டுக்கு/கூட்டு குடும்பத்துக்கு ஒரு சாதாரண கிணறு இருந்தது.அதன் அதிக பட்ச ஆழமானது 80 அடிவரையில் ஆழமும் 4௦ அடி அகலமும் 20 அடி நீளமும் கொண்டிருந்தது. இன்று சில கிணறுகளை கூட காண்பது அரிதாக உள்ளது.நீர் ஊத்துகல் என்ற பெரிய அளவிலான கிணறுகள் இருந்தன.இதன் வழியாக காளைமாடுகளை வைத்து(கவலேத்து)நீர் பாசனத்தினை மேற்கொண்டனர். பின்னர் சாதாரண பம்ப் செட் அமைத்து நீர் பாசனம் செய்து வந்தனர்.

ஆழ்குழாய் கிணறு

-ஒரு ஆழ்குழாய் கிணறு அமைக்க ஆகும் செலவுகள்(2000-ம் ஆண்டு திகதியில்):- கிணறு மட்டும் ரூ.100,000 (500அடிக்கு குறைவாக) செலவாகிறது.பின்னர் அதற்கு தேவையான அளவில் போர்வல் பைப்புகளை இறக்க ரூ.1,25,000(350அடி) செலவாகிறது.பின்னர் அதனுள் நீர்மூழ்கி மோட்டார் பம்புகள் இறக்குவதற்கு ரூ.50,000(10HP குறைவான)செலவாகிறது.பின்னர் மின்சார உதிரி பாகங்கள் என்ற அடிப்படையில் ரூ.50,000(Starter,Wires,Line Wires,Submersible Motar wire)செலவாகிறது.நீரை மேலே கொண்டுவரும் வரும் பைப் இரும்பு அல்லது PVC-யை பயன்படுத்தலாம்.அதற்க்கு குறைந்தது ரூ.25,000-15,000 செலவாகும்.இவை அனைத்தும் தோராயமான தொகையே ஆகும்.மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது என்கிறார்கள்.அந்த வகையான மின்சார இணைப்பு பலவருடங்கள்(25 வருடங்கள்) காத்திருந்து வாங்க வேண்டும் அதர்க்கு பல இடங்களை கவனிக்க வேண்டும்.அப்படி இல்லையென்றால் செலவு செய்து உடனடியாக (3மாதத்தில்)இணைப்பு வாங்க வேண்டுமாயின் ரூ.50,000 செலவு செய்ய நேரிடும் இவ்வாறு உடனடியாக பெறப்பட்ட மின்சார இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்படும்.ஆக மொத்தம் ஒரு ஆழ்குழாய் கிணறு அமைத்து பாசன வசதி பெற வேண்டிமாயின் இவ்வளவு தொகையினை செலவிட நேர்கிறது.இறுதியில் நீர் மட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையெனில் இத்தனை அமைப்புகளும் உபயோகமற்றதாக மாறுவது வழக்கமாகவுள்ளது இப்பகுதியில்.விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த இப்பகுதியினர் தற்போது பல துறைகளில் முத்திரை பதித்து வருகின்றனர்.குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில்.

பயிரிடப்படும் பயிர்கள்[தொகு]

எலுமி்ச்சை,கொய்யா,வாழை,பலா,மா போன்ற பழவகைகளும் கத்தரிக்காய்,வெண்டைகாய்,வெள்ளைமுள்ளங்கி,கீரைவகைகளும் குறிப்பிடத்தக்க மர காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. ஆழ்குழாய் கிணறு வழியாக நீர் பெறப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது.25000 ஏக்கர் நிலப்பரப்பு ஆழ்குழாய் கிணறு வழியாக பாசன வசதிபெறுகிறது.மும்முனை மின்சார தேவை இப்பகுதிக்கு மிக இன்றியமையாதவையாக உள்ளது.

புவி அமைவிடம்[தொகு]

புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கான மாநில நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை நகரத்திலிருந்து சரியாக 29 கிமீ தொலைவிலும் பட்டுக்கோட்டையிலிருந்து 30 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.முற்றிலும் சமதளமுடன் கூடிய பகுதி மற்றும் மரகாய்கறி,பழவகைகள் உற்பத்தி செய்ய சரியான மண் தன்மைகொண்ட பகுதியாகும்.[5].

மக்கள் தொகை[தொகு]

2006 ஆம் ஆண்டின் மொத்த மக்கள் தொகை 7,948. இதில் பெண்கள் 3993 ஆண்கள் 3,955. மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 1,725. மேலும் ஆண்கள் பெண்களை விட சராசரி 1% குறைவாக உள்ளனர்[6].

ஹைடிரோகார்பன்@மீத்தேன் என்ற இயற்கை எரிவாயு திட்டம் தொடர்பான எதிர்ப்பு[தொகு]

[7]

இந்த இயற்கை எரிவாயு திட்டம் தொடர்பாக பல்வேறு அச்சங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.இந்த திட்டத்தால் இயற்கை மட்டும் அல்லாமல் மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் முழுவதுமாக அடியோடு அழியக்கூடும் என்பதோடு நாளைய தலைமுறையினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சுகிறார்கள்.இந்த திட்டத்தால் வெளியாகும் நச்சுத்தன்மையுள்ள பலவிதமான வாயுக்கள் காற்றிலே கலந்து மொத்த மக்களும்இப்பகுதியில் வசிக்க முடியாத சூழல் உருவாகும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.இந்த கிராமத்தை சுற்றியுள்ள சுமார் 60-120 கிராமங்களின் பாரம்பரிய தொழிலே விவசாயம் மட்டுமே அதற்கான நீர் ஆதாரம் நிலத்தடி நீர் ஒன்றே மேலும் ஆற்றுப்படுகையில் அற்ற பகுதிகள் என்பதால் மிக வேகமாக நிலத்தடி நீரை முழுவதுமாக இந்த நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருட்கள் கலந்து நீர்நிலைகளை கடுமையாக பாழாக்கும்,நாளடைவில் குடிநீருக்கே வழியில்லாத சூழல் உருவாகவும்.

இவ்வூர் மக்களிடம் எவ்விதமான கருத்து கேட்பு நிகழ்வுகளையும் செய்யாமல் அரசே தன்னைத்தானே திட்டத்திற்கு அனுமதி அளித்திருப்பது இவ்வூர் மக்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கி உள்ளது.விவசாயம் சார்ந்த பகுதிகளை அரசு பலவந்தமாக அழிக்க முனைவதாக அரசின் மீது விமர்சனங்களையும் ரௌத்திர உணர்ச்சிகளையும் மக்கள் தெரிவித்துவருகின்றனர்.

இப்பகுதியில் பின்பற்றப்படும் திருமண முறைகள்[தொகு]

இவர்களிடையே சிலவகையான பிரிவுகள்(கரைகள்)கொண்டுள்ளார்கள்.அப்பிரிவுகளை வைத்தே திருமண முறைகள் நடைபெறுகிறது.பொதுவாக இவர்களுடைய 98சதவிகிதம் இந்த முறையினையே பின்பற்றுகிறார்கள்.ஒரு சில பட்ட மேதைகள் இவைகளுக்கு விதிவிலக்காக நடந்துகொள்கிறார்கள்.அந்தவகையான மேதைகளை இப்பகுதியினர் சட்டை பண்ணுவதே இல்லை!.எவ்விதமான பாகுபாடுமின்றி நடைபெறும் இவர்களுடைய திருமண வைபோக சம்பிரதாயங்கள் அனைத்தும் இந்து திருமண முறையினை ஒத்தது சற்று மாறுபட்டது.அவைகளாவன..

 • வடகாட்டான்கரை கரைகாரர்கள்
 • வந்திக்காரவகையரா கரைகாரர்கள்
 • பூனைக்குட்டிபட்டி,தோழன்பட்டி கரைகாரர்கள்
 • சேர்வைகாரவகையறாக்கள்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள குழுமத்திற்குள் தன்னுள்ளே திருமணம் செய்துகொள்வதில்லை!அதாவது ஒவ்வொரு குழுமத்திற்குள்ளும் சில தெருக்கள் அடங்கும்.அந்த குழுமத்தில் உள்ளடங்கிய தெருக்களுக்குள் உள்ளவர்களுக்குள் திருமணம் செய்துகொள்வதில்லை!.மாறாக அடுத்த குழுமத்தில் உள்ளடங்கிய தெருவில் உள்ளவர்களுடன் மட்டுமே திருமணம் செய்கிறார்கள்.இக்கட்டமைப்பிற்கு சேர்வைகாரவகையறாக்கள் என்ற குழுமத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.காரணம் அக்குழுமம் முற்றிலும் ஆலய விழாவில் முக்கியமானவர்கள்.மேலும் இக்குழுமத்தில் மட்டும் ஒரே ஒரு தெரு கொண்ட மிகச் சிறிய(100 குடும்பம்,500 நபர்கள்) குழுமம் ஆகும்.

மத நம்பிக்கை[தொகு]

இப்பகுதி மக்கள் பெரும்பாலும் இந்து சமயத்தையே பின்பற்றுகின்றனர்.இருந்தும் இந்துசமய சடங்குகளை குறிப்பாக திருமண சடங்குகளில் பின்பற்றப்படும் புரோகிதர்,கோமம்,பற்பல பூஜைகள் போன்றவைகள் பின்பற்றுவது இல்லை!.அனைத்து மக்களும் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

கல்வி[தொகு]

கல்வி தற்போது தாய்மொழியில் துரிதமான முறையில் கற்பிக்கப்பட்டு வருகிறது. பல இளநிலை, முதுநிலை பொதுக்கல்வி பட்டதாரிகளும் சில தொழிற்கல்வி பட்டதாரிகளும், அனைத்து துறைகளிளும் பொறியாளர்களும் பட்டம் பெற்று உள்ளனர்.மருத்துவர்களும் உள்ளனர். உலகத்தரம் வாய்ந்த கல்வியை பெறுவதற்காக சில இணையதள சேவையை இப்பகுதியினர் வழங்கி வருகின்றனர்.[8]

ஆலயம் மற்றும் விழாக்காலங்கள்[தொகு]

மாதந்தோறும் பௌர்ணமி் அன்று அம்மனுக்கு அபிசேக ஆராதனை சிறப்பாக நடைபெறும். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அருள்மி்கு முத்துமாரி அம்மன் ஆலயத்தில் காப்பு கட்டி 10-14 நாட்கள் திருவிழா நடைபெறும். 7ம் நாள் பால்குடம் எடுத்தல் மற்றும் சேர்வைகாரன்பட்டி சேர்வைகார வகையறாக்களால் நடத்தபடும் அன்னதான விழாவும் 8ம் நாள் பொங்கல் விழாவும் 9ம் நாள் அருள்மி்கு முத்துமாரி அம்மன் தேர்பவனி திருவிழாவும் 10ம் நாள் அம்மன் மஞ்சள் தீர்த்த உற்ச்சவத்திருவிழாவும் வெகுவிமர்சியாக நடைபெறும்.உலகத்தரம் வாய்ந்த கண்கவர் வான வேடிக்கையும் அப்போது இதே கிராமங்களைச் சேர்ந்த 3 வகையறாக்களால் பல வெவ்வேறு சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும்.திருமணஞ்சேரி என்ற பிரசித்தி பெற்ற புனித தளம் இவ்வூரிலிருந்து சுமார் 10கிமீ வடக்கில் உள்ளது

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

இப்பகுதியினை பிறப்பிடமாகக் கொண்ட குறிப்பிடப்படத் தக்க வேண்டியவர்கள்

மொய்விருந்து[தொகு]

வருடாந்திரம் ஆடி மாதம் முழுவதும் தினமும் இப்பகுதியில் மொய்விருந்து நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக கொண்டுள்ளார்கள்.இதன் உயரிய நோக்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒருவரை சற்று உயர்த்தும் நோக்கம் மட்டுமே.எவ்வித வட்டியும் இன்றி அவர் இந்த மொய்விருந்து விழாவில் கிடைத்த தொகையினை கொண்டு தன்னை பொருளாதாரத்தில் சற்று உயர்த்திக்கொள்ள ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.இந்நிகழ்ச்சி நடைபெறும் நேரம் பகல் 12மணி ஆகும்,இந்த நேரத்தில் இவ்விடத்துக்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த எங்குமே கிடைக்காத வாழை இலையுடன் கூடிய அசைவ உணவு இலவசமாக வழங்கப்படுவது வழக்கம் இதுவே தமிழர்களின் பண்பாடாக கருதுகிறார்கள்.உணவின் அளவுக்கும், அசைவத்துக்கும் (ஆப்பை கறி) பஞ்சமே இல்லை. வடகாடு கிராமத்தினை ஒட்டிய கொத்தமங்கலம், கீரமங்கலம், குளமங்கலம், மாங்காடு, அனவயல், புள்ளான்விடுதி, மேற்பனைக்காடு போன்ற கிராமங்கள் இவ்விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.

இந்த விழாவிற்கான விதிமுறைகள்[தொகு]

 • இவ்வூரை பிறப்பிடமாக கொண்டிருத்தல் அவசியம்
 • சமுதாய பின்னணி அவசியம்(முத்தரையர் சமூக மக்கள்)
 • அவ்வூருக்குள் அவர்களது குடும்பம் வசித்துக்கொண்டு இருக்க வேண்டும்
 • ஐந்து ஆண்டுக்கு ஒருமுறையே விழாவில் கலந்துகொள்ள வேண்டும்(எகா 2000-2005-2010).
 • வாரிசுகள் இருத்தல் அவசியம்(முதன் முதலில் விழா வைப்பவராக இருந்தால்)
 • தனியாகவே அல்லது கூட்டு சேர்ந்தோ விழாவில் கலந்துகொள்ள முடியும்
 • பெற்ற தொகையை மீண்டும் செலுத்தியவருக்கு திருப்பி கொடுத்தல் கட்டாயம்

விழாவின் பலம்[தொகு]

 • எண்ணற்ற சிறு, குறு விவசாயிகளின் தேவையை இவவிழாவிலிருந்து கிடைக்கும் தொகையினை வைத்து தன்னிறைவு பெறுவது.
 • திருமண வைபோக நிகழ்வுகளுக்கான பணத்தேவை பூர்த்தியாகிறது.
 • பல குடும்பங்கள் சற்று பொருளாதாரத்தில் உயர வாய்ப்பு கிடைக்கிறது
 • இளைய சமுதாயத்தினர் வெளிநாடு செல்ல பணத்தேவை நிறைவுபெறுகிறது.
 • பல கடன் தொல்லைகளிலிருந்து மீள வழிவகை செய்கிறது.
 • அசையா சொத்துக்கள் மற்றும் பணமாகவே முதலீடு செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.
 • பல ஏழைக்குடும்பங்களின் வாரிசுகள் கல்வி கற்க பணம் கிடைக்கிறது.
 • வட்டி இன்றி லட்சக்கணக்கில் கடன் கிடைக்கிறது
 • சிறந்த அசைவ உணவு கிடைக்கிறது

விழாவின் பலவீனம்[தொகு]

 • சில குடும்பங்கள் இதனால் வீழ்ச்சியடைந்துள்ளது.காரணம் சரியான நிர்வாகம் இன்மையால்
 • ஒரே நேரத்தில் பல நபர்கள் விழா வைக்கும் போது பணத்தேவை அதிகரிக்கும்
 • இதனால் சில குடும்பங்களுக்குள்ளே இருந்த உறவு பாதிக்கப்படுகிறது
 • பணம் திரும்ப செலுத்த தவறினால் மிகுந்த அவமானத்துக்குள்ளாக வேண்டிவரும்
 • ஆக மொத்தம் சீரான மற்றும் திறமையான நிர்வாகம் இன்றி இவ்விழாவில் நிலைத்து நிற்க முடியாது.
 • குடும்ப தலைவர் எதிர்பாராமல் தவறும் போது அவர்களது வாரிசுகள் சிறுபிள்ளைகளாக இருந்தால் நிர்வாகம் மிக மிக கொடுமையானது
 • எல்லாத்திற்கும் மேலாக நல்ல அபிப்ராயங்கள் மக்கள் மத்தியில் இருக்கவேண்டும்

அண்டை கிராமங்கள்[தொகு]

வடகாடு கிராமத்தினை தொடர்ந்து சில கிராமங்கள் உள்ளன.அவைகள் இக்கிராமத்துடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளன.கொத்தமங்கலம்,கீரமங்கலம்*,குளமங்கலம், பனங்குளம், மாங்காடு,அனவயல்,புள்ளான்விடுதி,மேற்பனைக்காடு போன்ற கிராமங்கள் இக்கிராமத்தினை ஒட்டிய பகுதிகளாகும்.இக்கிராமங்களுக்குள்ளேயே திருமணங்கள் செய்துகொள்கிறார்கள்.ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் சில கட்டமைப்புகளைக் கொண்டுள்ளார்கள் அக்கட்டமைப்பினை பின்பற்றுவதையே கலாச்சாரம்,பண்பாடு என்று பெருமையுடம் கூறுவதை இப்பகுதியில் காணலாம்.

ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர்களின் தொகுப்பு[தொகு]

 • 1977-ல் த.புஜ்பராஜு(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் திருமாறன் (கொத்தமங்கலம்)
 • 1980-ல் திருமாறன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு.
 • 1984-ல் அ. வெங்கடாசலம்(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் பெரியண்னண்(புதுக்கோட்டை).
 • 1989-ல் சந்திரசேகரன்(மறமடக்கி) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு.
 • 1991-ல் சன்முகநாதன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சிற்றரசு(சேந்தன்குடி).
 • 1996-ல் அ. வெங்கடாசலம் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் ராசசேகரன்(குளமங்கலம்).
 • 2001-ல் அ. வெங்கடாசலம் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சூசைராஜ்(ஆலங்குடி).
 • 2006-ல் ராசசேகரன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் அ. வெங்கடாசலம்.
 • 2011-ல் கு.ப கிருஷ்ணன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் அருள்மணி.

வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியல்[தொகு]

ஆண்டு வாக்காளர்கள் (1000) வாக்களித்தோர் (%) வேட்பாளர் வாக்குகள் சதவிகிதத்தில் கட்சி
2011 90.84 38.60 கு.ப கிருஷ்ணன் 60.67 ADMK
2006 100.84 38.60 ராசசேகரன் 30.67 CPI
2001 139.84 68.60 வெங்கடாசலம்.A 42.67 ADMK
1996 147.50 75.75 வெங்கடாசலம்.A 25.58 IND
1991 132.45 74.41 சண்முகநாதன்.S 68.83 ADMK
1989 130.01 81.86 சந்திரசேகரன்.K.BV.SC 29.18 DMK
1984 108.05 81.49 வெங்கடாசலம்.A 55.33 ADMK
1980 108.05 81.49 திருமாறன்.P 55.33 ADMK
1977 97.61 78.82 புஷ்பராஜு.T 38.94 IND
1971 70.61 48.82 K. V. SUBBIAH 70.94 DMK
1967 84.61 58.82 K. V. SUBBIAH 80.94 DMK

[9]. [10]

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
 3. http://www.indiapost.gov.in/Pin/Pinsearch.aspx?Pin_On=622304
 4. அரசுதளத்திலிருந்து
 5. [1]
 6. [2]
 7. [3]
 8. ஆரக்கிள் சம்பந்தமான தளம்
 9. [4]
 10. http://eci.nic.in/eci_main1/ElectionStatistics.aspx
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகாடு&oldid=2541966" இருந்து மீள்விக்கப்பட்டது