லேகியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாத்திரத்தில் லேகியம்

லேகியம் (ஆங்கிலம்: Lehya; சமக்கிருதம்: लेह्य),[1] லேகியா என்றும் குறிப்பிடப்படுகிறது. இது ஒரு பாரம்பரிய இந்திய மருந்துக் கலவை அல்லது மிட்டாயினைக் குறிக்கிறது.[2] [3]

வகைப்பாடு[தொகு]

லேகியம் சித்த மருத்துவத்தின் ஒரு பொருளாக வகைப்படுத்தப்படுகிறது. இது ஆரோக்கியமான உடல் சத்து மருந்தாகக் கருதப்படுகிறது. இது செரிமான மற்றும் சுவாச பிரச்சனைகளைத் தீர்க்க உட்கொள்ளப்படுகிறது. லேகியம் உடலால் எளிதில் உறிஞ்சப்படும் பொருட்களை உள்ளடக்கியது.[4][5]

தேவையான பொருட்கள் மற்றும் தயாரிப்பு[தொகு]

உள்ளங்கையில் இஞ்சி (இஞ்சி) லேகியம் உருண்டை.

லேகியம், மஞ்சள் தூள், வெல்லம், சர்க்கரை, தேன், நீர் கொண்ட கலவையாகத் தயாரிக்கப்படுகிறது. நெய் பெரும்பாலும் ஒரு பாதுகாக்கும் பொருளாகச் சேர்க்கப்படுகிறது. லேகியம் கலவையினைத் தயாரித்த பிறகு, கலவையினை சிறிய உருண்டைகளாக உருட்டி, ஒரு பாத்திரத்தில் கடினபடுத்தி ஒரு வருடம் வரை உண்ணக்கூடியதாகவும் இருக்கும்.[4][5]

வகைகளும் பயன்களும்[தொகு]

லேகியத்தின் பல்வேறு வகைகள் உள்ளன. லேகியத்தில் அடங்கிய பொருட்களுக்கு ஏற்ப பெயரிடப்பட்டுள்ளன. மேலும் வெவ்வேறு பண்புகளை வழங்குகின்றன. உதாரணமாக, தமிழ்நாட்டில், இஞ்சி லேகியம், இஞ்சியினை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு, பிரசவத்திற்குப் பிறகு மக்கட்பேற்றினையுடைய தாய்க்கு வழங்கப்படுகிறது.[6] தண்ணீர்விட்டான் (சாத்தாவாரி) லேகியம் மற்றும் சவுபாகியசுண்டி (உலர்ந்த இஞ்சி பொடி) லேகியம் ஆகியவை இதேபோல் பயன்படுத்தப்படுகின்றன.[7] நெல்லிக்காய் லேகியத்தில், முக்கியப் பொருளான நெல்லிக்காய், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வழங்கப்படுகிறது.[7]

தென்னிந்தியாவில், லேகியம் பெரும்பாலும் தீபாவளியின் போது தயாரிக்கப்படுகிறது. இது செரிமானத்திற்கு உதவுவதற்கும், பண்டிகையின் போது இனிப்புகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் மந்த விளைவுகளை எதிர்ப்பதற்கும் உதவுகிறது.[8] தி இந்து நாளிதழின் படி, தீபாவளி லேகியம் அல்லது தீபாவளி மருந்து, சென்னையில் பிரபலமானது. மேலும் இது பண்டிகை நேரத்தில் பல வீடுகளில் தயாரிக்கப்படுகிறது.[9]

சிட்டுக்குருவி லேகியம், சிட்டுக்குருவி இறைச்சியிலிருந்து தயாரிக்கப்பட்டது. ஒரு காலத்தில் பாலுணர்வு நோக்கங்களுக்காக உட்கொள்ளப்பட்டது.[10]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. www.wisdomlib.org (2018-05-27). "Lehya, Lēhya: 12 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-21.
  2. Weiss (2009-02-19) (in en). Recipes for Immortality: Healing, Religion, and Community in South India. https://books.google.com/books?id=YoA8DwAAQBAJ&dq=lehyam+siddha&pg=PA85. 
  3. Rao (2005) (in en). Encyclopaedia of Indian Medicine. https://books.google.com/books?id=QRvzRGn9QqkC&dq=lehyam+south+india&pg=PA92. 
  4. 4.0 4.1 Sen, Saikat; Chakraborty, Raja (2019-09-10) (in en). Herbal Medicine in India: Indigenous Knowledge, Practice, Innovation and its Value. Springer Nature. பக். 17–18. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-981-13-7248-3. https://books.google.com/books?id=YtGuDwAAQBAJ&dq=lehyam+medicine&pg=PA17. 
  5. 5.0 5.1 Hollen, Cecilia Van (2003-10-16) (in en). Birth on the Threshold: Childbirth and Modernity in South India. University of California Press. பக். 259. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-22359-2. https://books.google.com/books?id=zXQLniMFVbIC&dq=lekiyam+siddha&pg=PA259. 
  6. General, India Office of the Registrar (1962) (in en). Census of India, 1961. Manager of Publications. பக். 9. https://books.google.com/books?id=SrTUAAAAMAAJ&q=inji+lekiyam. 
  7. 7.0 7.1 MD(S), Dr P. Mirunaleni (2021-01-19) (in en). TRADITIONAL PARENTING - PARENTING IN A SIDDHA WAY. Darshan Publishers. பக். 16,31. https://books.google.com/books?id=hlsVEAAAQBAJ&dq=nellikai+legiyam&pg=PA31. 
  8. "Making of the legiyam" (in en-IN). The Hindu. 2016-10-28. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/features/metroplus/For-the-love-of-legiyam/article16084496.ece. 
  9. "How to make… Deepavali legiyam" (in en-IN). The Hindu. 2015-11-05. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/features/metroplus/how-to-make-deepavali-legiyam/article7845876.ece. 
  10. P.S. Nathan (1921). Bird friends and foes of the farmer. Bulletin No. 81. Department of Agriculture. p. 22. https://archive.org/details/in.ernet.dli.2015.219743/page/n38/mode/1up. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லேகியம்&oldid=3787822" இலிருந்து மீள்விக்கப்பட்டது