ரேடியம் ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேடியம் ஐதராக்சைடு
Radium hydroxide
இனங்காட்டிகள்
98966-86-0 Y
ChemSpider 66737595
InChI
  • InChI=1S/2H2O.Ra/h2*1H2;/q;;+2/p-2
    Key: ARVNHJBMBBFPCP-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Ra+2].[O-H].[O-H]
பண்புகள்
H2O2Ra
வாய்ப்பாட்டு எடை 260.01 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள்
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ரேடியம் ஐதராக்சைடு (Radium hydroxide) என்பது Ra(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரேடியமும், ஐதரசன் ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1] சுழிய அயனி வலிமையில் நீரிய RaOH+ அயனி இணையின் நிலைப்புத்தன்மை மாறிலியின் மதிப்பு ஐந்துக்கு சமமாகும்.[2]

தயாரிப்பு[தொகு]

  • ரேடியமும் தண்ணீரும் சேர்ந்து வினைபுரிந்தால் ரேடியம் ஐதராக்சைடு உருவாகும்:[3]
Ra + 2H2O → Ra(HO)2 + H2
  • ரேடியம் ஆக்சைடு சேர்மமும் தண்ணீரும் வினைபுரிந்தாலும் ரேடியம் ஐதராக்சைடு உருவாகும். இவ்வினையில் அதிக அளவிலான வெப்பம் வெளியிடப்படுகிறது:[4]
RaO + H2O → Ra(HO)2
  • ரேடியம் நைட்ரேட்டுடன் சோடியம் ஐதராக்சைடு கரைசலை வினைபுரியச் செய்தும் ரேடியம் ஐதராக்சைடு தயாரிக்கப்படுகிறது[4]

இயற்பியல் பண்புகள்[தொகு]

ரேடியம் ஐதராக்சைடு நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. இது பேரியம் ஐதரக்சைடை விட அதிகமாக தண்ணீரில் கரைகிறது. மேலும் அதிகமான காரப் பண்புகளையும் கொண்டுள்ளது.

ரேடியம் ஐதராக்சைடு Ra(OH)2·8H2O என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட நீரேற்றாகவும் உருவாகிறது.[5]

ரேடியம் ஐதராக்சைடு நச்சு மற்றும் அரிக்கும் தன்மை கொண்ட வேதிப்பொருள் ஆகும். பேரியம் ஐதராக்சைடு (Ba(OH)2) மற்றும் இசுட்ரோன்சியம் ஐதராக்சைடு (Sr(OH)2) ஆகியவற்றை விட குறிப்பிடத்தக்க அளவு நச்சுத்தன்மை வாய்ந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Brown, Paul L.; Matyskin, Artem V.; Ekberg, Christian (1 June 2022). "The aqueous chemistry of radium" (in en). Radiochimica Acta 110 (6–9): 505–513. doi:10.1515/ract-2021-1141. பன்னாட்டுத் தர தொடர் எண்:2193-3405. https://www.degruyter.com/document/doi/10.1515/ract-2021-1141/html?lang=en. பார்த்த நாள்: 8 June 2023. 
  2. Matyskin, Artem V.; Brown, Paul L.; Ekberg, Christian. "Weak barium and radium hydrolysis using an ion exchange method and its uncertainty assessment". Journal of Chemical Thermodynamics 128: 362-371. https://www.sciencedirect.com/science/article/pii/S0021961418303239. 
  3. "Alkaline Earth Hydroxide - an overview | ScienceDirect Topics". ScienceDirect. பார்க்கப்பட்ட நாள் 8 June 2023.
  4. 4.0 4.1 Ropp, Richard C. (31 December 2012) (in en). Encyclopedia of the Alkaline Earth Compounds. Newnes. பக். 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-444-59553-9. https://books.google.com/books?id=yZ786vEild0C&dq=Radium+hydroxide&pg=PA124. பார்த்த நாள்: 8 June 2023. 
  5. Schweitzer, George K.; Pesterfield, Lester L. (14 January 2010) (in en). The Aqueous Chemistry of the Elements. Oxford University Press. பக். 448. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-974219-6. https://books.google.com/books?id=-TNhhlGcCzwC&dq=%22Ra%28OH%292%22+solubility&pg=PA148. பார்த்த நாள்: 8 June 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேடியம்_ஐதராக்சைடு&oldid=3789625" இலிருந்து மீள்விக்கப்பட்டது