ரேடியம் ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேடியம் ஆக்சைடு
Radium oxide
இனங்காட்டிகள்
12143-02-1 Y
InChI
  • InChI=1S/O.Ra/q-2;+2
    Key: PLEZGBHMSVTPPQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Ra+2].[O-2]
பண்புகள்
ORa
வாய்ப்பாட்டு எடை 242.00 g·mol−1
தோற்றம் திண்மம்
நீருடன் வினை புரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ரேடியம் ஆக்சைடு (Radium oxide) என்பது RaO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியல் சேர்மமாகும். ரேடியமும் ஆக்சிசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

ரேடியம் உலோகத்தை காற்றில் எரித்தால் ரேடியம் ஆக்சைடு உருவாகிறது.:[2]

2Ra + O2 → 2RaO

இவ்வினையில் அநேகமாக ரேடியம் நைட்ரைடும் ரேடியம் பெராக்சைடும் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன:

3Ra + N2 → Ra3N2
Ra + O2 → RaO2

வேதிப் பண்புகள்[தொகு]

ரேடியம் ஆக்சைடு தண்ணீருடன் வினைபுரிந்து ரேடியம் ஐதராக்சைடு உருவாகிறது.

RaO + H2O → Ra(OH)2

பயன்கள்[தொகு]

கதிரியக்கச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் பிற ரேடியம் சேர்மங்களை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக ரேடியம் ஆக்சைடு பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேடியம்_ஆக்சைடு&oldid=3789344" இலிருந்து மீள்விக்கப்பட்டது