ராகவ் சதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராகவ் சதா
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2022
முன்னையவர்நரேஷ் குஜ்ரால்
தொகுதிபஞ்சாப், இந்தியா
தில்லி சட்டமன்றம்
பதவியில்
12 பிப்ரவரி 2020 – 24 மார்சு 2022
முன்னையவர்விஜேந்திர கார்க் விஜய்
பின்னவர்துர்கேஷ் பதக்
தொகுதிராஜிந்தர் நகர்
தில்லி ஜல் வாரியத்தின் துணை தலைவர்
பதவியில்
2 மார்சு 2020[1][2] – 22 மார்சு 2022
முன்னையவர்தினேஷ் மோகனியா
பின்னவர்சௌராப் பரத்வாஜ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 நவம்பர் 1988
தில்லி, இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி
துணைவர்
[[பரினீதி சோப்ரா ]] (தி. 2023)
முன்னாள் கல்லூரிதில்லி பல்கலைக்கழகம்
தொழில்பட்டயக் கணக்கறிஞர்
இணையத்தளம்Official Website

ராகவ் சதா (Raghav Chadha) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து நாடாளுமன்றத்தின், மாநிலங்களவை உறுப்பினர் ஆவார். [3] மேலும் இவர் தில்லி ஜல் வாரியத்தின் துணைத் தலைவராகவும், டெல்லியில் உள்ள ராஜிந்தர் நகர் சட்டமன்றத் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். [4] இவர் பட்டயக் கணக்காளர் பயிற்சி பெற்றவர்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

1988 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதி ராகவ் புது தில்லியில் பிறந்தார். இவர் தில்லி மாடர்ன் பள்ளியில் பள்ளிக் கல்வியைப் முடித்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பின்னர் இவர் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தில் பட்டயக் கணக்கியல் படிப்பைத் தொடர்ந்தார். அதன் பிறகு இவர் 'லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்' க்கு EMBA சான்றிதழ் படிப்புக்குச் சென்றார். இவரது ஆரம்பகால வாழ்க்கையில் இவர் டெலாய்ட், சியாம் மல்பானி மற்றும் கிராண்ட் தோர்ன்டன் உள்ளிட்ட கணக்கியல் நிறுவனங்களில் பணியாற்றினார்.

அரசியல்[தொகு]

2015 ஆம் ஆண்டு டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றபோது, ராகவ் (26 வயதில்) ஆம் ஆத்மி கட்சியின் தேசியப் பொருளாளராக நியமிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டின் ஏப்ரலில், அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சிசோடியாவின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட 9 ஆலோசகர்களுடன் இவரது நியமனத்தை இரத்து செய்தார். [5]

2019 ஆம் ஆண்டில், இவர் 2019 மக்களவைத் தேர்தலில் தெற்கு டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இவர் தேர்தலில் பாஜக வேட்பாளரான ரமேஷ் பிதுரியிடம் [6] தோல்வியடைந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தேர்தலில் போட்டியிட்ட அனைத்து ஆம் ஆத்மி கட்சியினரிலும் அதிகபட்ச வாக்குகளை இவர் பெற்றுள்ளார்.

டெல்லி சட்டசபையில் எம்.எல்.ஏ[தொகு]

2020 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இவர் 2020 டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜிந்திர நகரில் பாஜக வேட்பாளர் ஆர்.பி.சிங்கை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலைத் தொடர்ந்து இவர் டெல்லி ஜல் வாரியத்தின் (DJB) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார் மற்றும் டெல்லி அரசாங்கத்தில் நீர் இலாகா இவருக்கு ஒதுக்கப்பட்டது.

ராஜ்யசபாவில் எம்.பி[தொகு]

ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக இருந்த இவர் பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி பஞ்சாப் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். [7] [8] 2022 ஆம் ஆண்டு மார்சு மாதம் 21 அன்று, டெல்லியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களோடு இவரும் நாடாளுமன்ற மா நிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2022 ஆம் ஆண்டு தொடங்கி ஆறு வருட காலத்திற்கு இவர் பஞ்சாபில் இருந்து ராஜ்யசபா உறுப்பினர் பதவியில் இருப்பார்

சர்ச்சைகள்[தொகு]

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், டெல்லியில் வங்காளதேசம் மற்றும் ரோகிஞ்சாக்களை பாஜக குடியமர்த்தியதாகவும், அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்துவதாகவும் ராகவ் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. [9]

பஞ்சாப் முதலமைச்சரின் ஆலோசகர் குழு தலைவர் பதவியில்[தொகு]

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் பஞ்சாப் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் இராகவ் சத்தா முதலமைச்சரின் ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.[10][11]

தேர்தல் செயல்திறன்[தொகு]

 

டெல்லி சட்டசபை தேர்தல், 2020 : ராஜிந்தர் நகர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஆம் ஆத்மி ராகவ் சாதா 59,135 57.06 +3.67
பா.ஜ.க ஆர்.பி.சிங் 39,077 37.70 +1.76
இந்திய தேசிய காங்கிரசு ராக்கி துசீட் 3,941 3.80 -4.00
நோட்டா மேலே எதுவும் இல்லை 467 0.45 +0.04
பெரும்பான்மை 20,058 19.36 +1.91
மொத்தம் 1,03,675 58.50 -9.80
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்
ஆம் ஆத்மி வாக்கு அதிகரிப்பு +3.67

குறிப்புகள்[தொகு]

  1. "AAP MLA Raghav Chadha Appointed Delhi Jal Board Vice Chairman". 2 March 2020.
  2. http://www.delhijalboard.nic.in/sites/default/files/All-PDF/PR_RC_03.03.2020_E_0.pdf[bare URL PDF]
  3. "Raghav Chadha Officially Elected to Rajya Sabha as MP".
  4. "Raghav Chadha Officially Elected To Rajya Sabha As MP". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-27.
  5. "Sacked AAP adviser Raghav Chadha refunds Rs 2.5 salary to home ministry". Business Standard India. 18 April 2018. https://www.business-standard.com/article/politics/sacked-aap-adviser-raghav-chadha-refunds-rs-2-5-salary-to-home-ministry-118041800900_1.html. 
  6. "Lok Sabha Election result: In South Delhi, BJP marches ahead, AAP's Raghav Chadha distant second-Politics News, Firstpost". 23 May 2019.
  7. "Ruckus in AAP leader Raghav Chadha's press conference in Jalandhar over ticket distribution". India Today. 7 January 2022. பார்க்கப்பட்ட நாள் 9 January 2022.
  8. "Punjab: Unhappy over ticket distribution, Raghav Chadha shown black flags". India Today. 8 January 2022. பார்க்கப்பட்ட நாள் 9 January 2022.
  9. "'Bangladeshis & Rohingyas': AAP and BJP find common ground to target each other". www.millenniumpost.in (in ஆங்கிலம்). 2022-04-21. பார்க்கப்பட்ட நாள் 2022-06-05.
  10. Advisory panel chairman: HC junks plea against Raghav Chadha appointment, asks Mann govt to decide on representation
  11. "Punjab: Why Raghav Chadha's Appointment as Advisor by AAP Govt Is Drawing Flak".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகவ்_சதா&oldid=3818407" இலிருந்து மீள்விக்கப்பட்டது