யூலியா திமொஷென்கோ
யூலியா திமொஷென்கோ Yulia Tymoshenko Юлія Тимошенко | |
---|---|
![]() | |
திமொஷென்கோ, 2011 | |
உக்ரைன் பிரதமர் | |
பதவியில் 18 திசம்பர் 2007 – 4 மார்ச் 2010 | |
குடியரசுத் தலைவர் | விக்டர் யுஷ்சென்கோ விக்டர் யானுக்கோவிச் |
முன்னவர் | விக்டர் யானுகோவைச் |
பின்வந்தவர் | ஒலெக்சாண்டர் துர்சினோவ் (பொறுப்பில்) |
பதவியில் 24 சனவரி 2005 – 8 செப்டம்பர் 2005 4 பெப்ரவரி 2005 வரை பொறுப்பில் | |
குடியரசுத் தலைவர் | விக்டர் யுஷ்சென்கோ |
முன்னவர் | மைகோலா அசரோவ் (பொறுப்பில்) |
பின்வந்தவர் | யூரி யெகௌரோவ் |
துணை பிரதமர் (எரிபொருள் மற்றும் சக்திக்கான அமைச்சர்) | |
பதவியில் 30 திசம்பர் 1999[1] – 19 சனவரி 2000[1] | |
குடியரசுத் தலைவர் | லியோனிட் குச்மா |
முன்னவர் | அலெக்சி செபெர்சுடோவ் (எரிபொருள் மற்றும் சக்திக்கான அமைச்சராக )[2][3] |
பின்வந்தவர் | இவான் பிளாச்கோவ் (எரிபொருள் மற்றும் சக்திக்கான அமைச்சர்)[4] |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 27 நவம்பர் 1960 ட்நிபுரோபெட்ரோவ்ஸ்கி, சோவியத் ஒன்றியம் (தற்போது உக்ரைன்) |
அரசியல் கட்சி | அனைத்து உக்ரைன் ஒன்றியம் "தந்தையர்நாடு"]] (1999–நடப்பு) யூலியா டைமோன்சென்கோ பிரிவு (2001–நடப்பு) |
பிற அரசியல் சார்புகள் |
ஹ்ரோமடா (1999 முன்பு) |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஒலெக்சாண்டர் டைமோசென்கோ]] (m. 1979-இன்றுவரை) |
பிள்ளைகள் | யூஜெனியா (Eugenia) |
படித்த கல்வி நிறுவனங்கள் | ட்நிபுரோபெட்ரோவ்ஸ்க் தேசிய பல்கலைக்கழகம் |
சமயம் | கிறித்தவர் (உக்ரைன் பழமைவாத திருச்சபை) |
இணையம் | Official website |
யூலியா வலோதிமீரிவ்னா திமொஷென்கொ (Yulia Volodymyrivna Tymoshenko, உக்ரைனியன்: Юлія Володимирівна Тимошенко, உச்சரிப்பு [ˈjulijɑ ʋɔlɔˈdɪmɪriʋnɑ tɪmɔˈʃɛnkɔ]), பிறப்பு பெயர்: கிரிக்யன் (Grigyan)[5][6] (Ukrainian: Грігян, லாத்விய மொழியில் குடும்பப்பெயர் "கிரிக்யனி"லிருந்து);[7] (பிறப்பு: 27 நவம்பர் 1960) ஓர் உக்ரைனிய அரசியல்வாதி. சனவரி 24 முதல் செப்டம்பர் 8, 2005 வரையும் பின்னர் திசம்பர்18, 2007 முதல் மார்ச் 4,2010 வரையும்[8][9] உக்ரைனின் பிரதமராக பதவி வகித்தவர். 2005ஆம் ஆண்டின் போர்பசு இதழின் 100 மிகவும் செல்வாக்குடைய பெண்கள் பட்டியலில் மூன்றாவதாக வந்தவர்.) அனைத்து உக்ரைன் ஒன்றியம் தந்தையர்நாடு கட்சி மற்றும் யூலியா டைமோன்சென்கோ பிரிவின் தலைவராக உள்ளார்.
அரசியலில் வருவதற்கு முன்னர் பொருளியல் மற்றும் கல்வித்துறையில் செயலாற்றி வந்தார். அரசியலில் நுழைவதற்கு முன்னரே எரிவளி தொழிலில் ஈடுபட்டு பெரும் பணம் ஈட்டியுள்ளார். நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராக விளங்கினார். 2004ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2005 ஆம் ஆண்டு சனவரி வரை நடந்த செம்மஞ்சள் புரட்சிக்குத் தலைமையேற்று[10] உக்ரைனின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11]
2010ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில், விக்டர் யானுகோவைச்சிடம் தோல்வியுற்றார். இருப்பினும் இரண்டாவது மற்றும் இறுதி சுற்றில் 45.47% வாக்குகள் பெறிருந்தார்.[12]). முதலில் தேர்தல் முடிவுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தோல்வியை ஏற்க மறுத்த டைமோசென்கோ,[13][14] பெப்ரவரி 20, 2010 அன்று "நீதிமன்றத்தில் உண்மை வெளிப்படாது" என்று கூறி தமது முறையீட்டை மீளப் பெற்றுக்கொண்டார்.[15]
மே 10, 2010 முதல் இவர் மீது பல வழக்குகள் போடப்பட்டன. சனவரி 2009ஆம் ஆண்டில் உருசியாவுடன் கையொப்பிட்ட இயற்கை எரிவளி இறக்குமதி உடன்பாட்டில் ஊழல் குறித்து நடந்து வந்த வழக்கில் நீதிமன்ற விதிகளை பலமுறை மீறியதாக ஆகத்து 5, 2011 அன்று கைது செய்யப்பட்டார்.[16][17][18] இந்த உடன்பாட்டை பேரம் பேசும்போது தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக அக்டோபர் 11, 2011 அன்று உக்ரைனியன் நீதிமன்றம் டைமோசென்கோவிற்கு ஏழாண்டுகள் சிறைதண்டனை விதித்தது.[19] இந்தத் தீர்ப்பு அரசியல் நோக்குடையதாக சில விமரிசகர்கள் கருதுகின்றனர். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற பன்னாட்டு அமைப்புகளின் அதிகாரிகள் "தேர்ந்த சில அரசியல் எதிரிகளுக்கு எதிரான குற்றவிசாரணை"யாக குறை கூறியுள்ளனர்.[17]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 (உக்ரைனிய மொழி)Тимошенко பரணிடப்பட்டது 2012-01-21 at the வந்தவழி இயந்திரம், Poli.in.ua
- ↑ NUCLEAR ENERGY IN UKRAINE, International Nuclear Safety Center (July 1997)
- ↑ Senior Experts, IMEPOWER Investment Group
- ↑ PRESIDENT YUSHCHENKO APPOINTS THE NEW PRIME MINISTER AND MEMBERS OF HER CABINET, European Parliament (4 பெப்ரவரி 2005)
- ↑ ""Azeri reporter pesters Yulia Timoshenko about being Armenian". Site "Ukrayinska Pravda", 26 December 2004". 20 ஆகஸ்ட் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 அக்டோபர் 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Yuliya Tymoshenko, 12 November 2007.
- ↑ An orange revolution: a personal journey through Ukrainian history by Askold Krushelnycky, Harvill Secker, 2006, ISBN 978-0436206238 (page 169)
- ↑ Ukraine parliament votes out Tymoshenko's government, Kyiv Post (3 March 2010)
- ↑ Press secretary: Tymoshenko vacates premier's post, Kyiv Post (4 March 2010)
- ↑ BBC News profile
- ↑ "Ukraine's First Woman Prime Minister". Archive.newsmax.com. 24 September 2005. 18 February 2011 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Ukrainian PM to face old rival in runoff election, ராய்ட்டர்ஸ் (18 January 2010)
- ↑ "Tymoshenko calls Ukraine vote rigged". Associated Press. http://georgiandaily.com/index.php?option=com_content&task=view&id=17058&Itemid=65. (14 February 2010)
- ↑ Yulia Tymoshenko's appeal to the people பரணிடப்பட்டது 2010-02-17 at the வந்தவழி இயந்திரம், Official website of Yulia Tymoshenko (13 February 2010)
- ↑ Ukraine Prime Minister Drops Election Challenge, த நியூயார்க் டைம்ஸ் (20 February 2010)
- ↑ Ukraine timeline, BBC News
- ↑ 17.0 17.1 Q&A: Ukraine's Yulia Tymoshenko on trial, BBC News (9 August 2011)
- ↑ Protesters gather as Tymoshenko trial resumes in Kiev, BBC News (9 August 2011)
- ↑ Ukraine ex-PM Yulia Tymoshenko jailed over gas deal, BBC News (October 11, 2011)
வெளியிணைப்புகள்[தொகு]
- Official website பரணிடப்பட்டது 2012-12-11 at Archive.today
- Tymoshenko photo archive 2000–2009[தொடர்பிழந்த இணைப்பு]
- Tymoshenko's opinion commentaries at Project Syndicate.
- Prime Minister at Government Portal
- Yulia Tymoshenko Bloc website பரணிடப்பட்டது 2007-11-13 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- Korrespondent.net profile பரணிடப்பட்டது 2007-12-27 at the வந்தவழி இயந்திரம்
- Time magazine profile பரணிடப்பட்டது 2005-09-18 at the வந்தவழி இயந்திரம்
- Ukraine PM makes Elle front cover (19 April 2005, பிபிசி)
- BBC Audio & Video about Yulia Tymoshenko including an audio interview with Yulia Tymoshenko from 15 April 2005