மோனல் (பறவை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோனல்
இமயமலை மோனல் (லோபோபோரசு இம்பெஜனசு)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேசியானிடே
பேரினம்:
மோனல்
மாதிரி இனம்
லோபோபோரசு இம்பெஜனசு[1]
தெம்னிக், 1813
சிற்றினம்

உரையினை காண்க

மோனல் (Monal) என்பது பேசியானிடே என்ற பகட்டு வண்ணக் கோழி குடும்பத்தைச் சேர்ந்த (லோபோபோரசு) பேரினப் பறவை ஆகும்.

விளக்கம்[தொகு]

அனைத்து ஆண் பறவையும் வண்ணமயமான, மாறுபட்ட இறகுகளுடன் உள்ளன. இவற்றின் உடலமைப்பு சற்று குண்டாக இருக்கும். இவை உணவாகத் தாவர வேர்கள், குமிழ்கள், மற்றும் பூச்சிகளை உண்ணுகின்றன. இனச்சேர்க்கையின் போது ஆண்கள் பலதார மணம் கொண்டவை. ஆண் பறவை பல பெண் பறவைகளுடன் இணை சேருகின்றன. பெண் பறவைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண் பறவையுடன் மட்டுமே இணை சேரும். வாழ்விட அழிவு மற்றும் வேட்டையாடுதல் காரணமாக, இவை அரிதாகிவிட்டன. இவை ஆபத்தில் உள்ள பறவையாக உள்ளது.[2]

சிற்றினங்கள்[தொகு]

மூன்று சிற்றினங்கள் மற்றும் பல துணையினங்களுடன் உள்ளன.

படம் விலங்கியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
லோபோபோரசு இம்பெஜனசு இமயமலை மோனல் இந்தியா, நேபாளம், தெற்கு திபெத் மற்றும் பூட்டானில் உள்ள இமயமலை வழியாக ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தான்.
லோபோபோரசு இசுக்லேட்ரி இசுக்லேட்டரின் மோனல் வடகிழக்கு இந்தியா, தென்கிழக்கு திபெத் மற்றும் வடக்கு மியன்மார்
லோபோபோரச லுய்சி சீன மோனல் மத்திய சீனா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Phasianidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-08-05.
  2. Hoyo, Josep (1992). Handbook of the birds of the world. Barcelona: Lynx Edicions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-87334-15-6. இணையக் கணினி நூலக மைய எண் 861071869.

வெளி இணைப்புகள்[தொகு]

  • பொதுவகத்தில் Lophophorus பற்றிய ஊடகங்கள்
  • Data related to Lophophorus at Wikispecies
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனல்_(பறவை)&oldid=3857079" இலிருந்து மீள்விக்கப்பட்டது